UPI Payment : ரூ.2,000-க்கு மேல் செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு GST?.. திட்டவட்டமாக மறுத்த அரசு!

UPI Transaction GST Rumor Debunked | இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் யுபிஐ சேவையை பயன்படுத்தி பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், யுபிஐ மூலம் ரூ.2,000-க்கு மேல் பண பரிவர்த்தனை மேற்கொண்டால் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என வெளியான தகவல் குறித்து அரசு விளக்கமளித்துள்ளது.

UPI Payment : ரூ.2,000-க்கு மேல் செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு GST?.. திட்டவட்டமாக மறுத்த அரசு!

மாதிரி புகைப்படம்

Published: 

18 Apr 2025 22:59 PM

சென்னை, ஏப்ரல் 18 : யுபிஐ (UPI – Unified Payment Interface) மூலம் ரூ.2,000-க்கு மேல் பண பரிவர்த்தனை (Money Transaction) மேற்கொண்டால் ஜிஎஸ்டி (GST – Good and Service Tax) விதிகப்படும் என தகவல் வெளியான தகவலுக்கு மத்திய நிதித்துறை (Ministry of Finance) மறுப்பு தெரிவித்துள்ளது. யுபிஐ மூலம் ரூ.2,000-க்கு மேல் பண பரிவர்த்தனை மேற்கொண்டால் கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் வெளியாகி வந்த நிலையில், மத்திய நிதித்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த நிலையில், யுபிஐ பண பரிவர்த்தனை தொடர்பாக வெளியான தகவல் குறித்து மத்திய நிதித்துறை கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியா முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் யுபிஐ

இந்தியா டிஜிட்டல் துறையில் மிக வேகமாக முன்னேறி வருகிறது. அதன் வெளிப்பாடாக யுபிஐ சேவை இந்தியா முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவை பொருத்தவரை சிறிய பெட்டிக் கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ சேவை பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமன்றி, சாமானிய மக்களுக்கும் இது மிகவும் விருப்பமான அம்சமாக உள்ளது. பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக இந்த அம்சத்தை பயன்படுத்துகின்றனர். அதன்படி, ஒரு மாதத்தில் கோடிக்கணக்கான பண பரிவர்தனைகள் நடைபெறுகின்றன. பொதுமக்களின் பிரதான தேவையாக யுபிஐ உள்ள நிலையில், அது குறித்து வெளியான தகவல் குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது.

யுபிஐ குறித்து பரவிய தகவல் – திட்டவட்டமாக மறுத்த அரசு

ரூ.2,000-க்கு மேல் பண பரிவர்த்தனை மேற்கொண்டால் ஜிஎஸ்டி இல்லை – அரசு திட்டவட்டம்

பெரும்பாலான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் யுபிஐ சேவையை அதிகம் பயன்படுத்தும் நிலையில், யுபிஐ-ல் ரூ.2,000-க்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என தகவல் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், மத்திய நிதித்துறை அதற்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து கூறியுள்ள மத்திய நிதித்துறை, யுபிஐ பண பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும் என வெளியான தகவல் எந்த வித அடிப்படையும் இன்றி வெளியாகி வரும் பொய்யான தகவல் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.