UPI பணப் பரிவர்த்தனை செய்வதில் சிக்கல்.. சேவை பாதிப்பால் பொதுமக்கள் அவதி!

UPI Service Down | இந்தியா முழுவதும் யுபிஐ சேவையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பண பரிவர்த்தனை செய்ய முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். யுபிஐ செயலிகளான கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகள் என அனைத்தும் செயல்படாத நிலையில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

UPI பணப் பரிவர்த்தனை செய்வதில் சிக்கல்.. சேவை பாதிப்பால் பொதுமக்கள் அவதி!

மாதிரி புகைப்படம்

Updated On: 

12 Apr 2025 15:04 PM

சென்னை, ஏப்ரல் 12 : இந்தியாவில் பல பகுதிகளில் யுபிஐ (UPI – Unified Payment Interface) சேவை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பண பரிவர்த்தனை (Money Transaction) செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். யுபிஐ செயலிகளான பேடிஎம் (Paytm), ஜி பே (G Pay), போன் பே (PhonePe) உள்ளிட்ட எந்த செயலியும் செயல்படாத நிலையில், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், யுபிஐ செயலிகள் செயல்படாததற்கு காரணம் என்ன, எப்போது மீண்டும் சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் கோடிக்காண மக்களால் பயன்படுத்தப்படும் யுபிஐ

உலகின் மத்த நாடுகளுடன் ஒப்பிடுகளையில், இந்தியா ஆன்லைன் பண பரிவர்த்தனையில் ஒரு அடி முன்னதாக உள்ளது. காரணம், உலக நாடுகள் பல இன்னும் ஆன்லைன் பண பரிவர்த்தனையை பயன்படுத்த தொடங்காத நிலையில், இந்தியா முழுவதும் பரவலாக ஆன்லைன் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவின் மிகப்பெரிய நகரங்கள் முதல் கடைக்கோடி கிராமங்கள் வரை ஆன்லைன் பண பரிவர்த்தனை மிகவும் சாதாரனமாக மாறிவிட்டது.

பெரிய வணிக நிறுவனங்கள் மட்டுமன்றி, சிறிய கடைகளிலும் கூட யுபிஐ சேவையை பயன்படுத்தி கட்டணம் பெறும் வசதி உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் கையில் பணத்தை வைத்து பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆன்லைன் பண பரிவர்த்தனையை நொடி பொழுதில் செய்து முடித்து விட முடியும் என்பதால் பெரும்பாலான மக்களின் தேர்வாக அது உள்ளது. டிஜிட்டல் துறையில் இந்தியா வேகமாக முன்னேறுவதற்கு இந்தியா முழுவதும் பரந்து விரிந்துள்ள ஆன்லைன் பண பரிவர்த்தனை முக்கிய சான்றாக உள்ளது.

எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் ஆகும் UPI Down ஹாஷ்டேக்

யுபிஐ செயலிகள் செயல்படவில்லை

இவ்வாறு யுபிஐ பண பரிவர்த்தனை முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், இன்று (ஏப்ரல் 12, 2025) பிற்பகல் 2 மணி முதல் யுபிஐ செயலிகள் செயல்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். யுபிஐ செயலிகளான கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட எந்த செயலிகளும் செயல்படாத நிலையில், பணப் பரிவர்த்தனை செய்ய முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

தொழில்நுட்ப பிரச்சனையால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக (NPCI – National Payments Corporation of India) விளக்கம் அளித்துள்ளது. காலையிலே யுபிஐ சேவை பாதிப்புக்குள்ளாகிய நிலையில் தற்போது படிப்படையாக சீராகி வருவதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.