ரூ.20,000க்கும் குறைந்த விலையில் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள்! உங்க சாய்ஸ் எது?
Best Under 20K Phones: அதிக விலையுள்ள போன்களில் தரமான கேமரா, ஸ்டோரேஜ் வசதிகள் கிடைக்கும். ஆனால் விலை குறைவான போன்களில் இந்த வசதிகள் உள்ள போன்களை தேர்ந்தெடுப்பது மிகவும் சவாலான பணி. இந்த நிலையில் ஏப்ரல், 2025ன் படி 20,000 ரூபாய்க்கும் கீழே தரமான போன்களை இந்த பதிவில் காணலாம்.

மாதிரி புகைப்படம்
நவீன யுகத்தில் ஸ்மார்ட்போன்களின் (Smartphone) பயன்பாடு இன்றியமையாததாக இருக்கிறது. குறிப்பாக கொரோனா (Covid-19) ஊரடங்குக்கு பிறகு ஸ்மார்ட்போன்கள் மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக மாறியது. ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள, ஒருவருக்கு பணம் அனுப்ப, உலகத்துடன் தொடர்பில் இருக்க என பல்வேறு வேலைகளுக்கு ஸ்மார்ட் போன்கள் பெரிதும் உதவிகரமானதாக இருந்தது. ஆனால் நல்ல ஸ்மார்ட்போன்களை எப்படி தேர்ந்தெடுப்பது என்பது தான் கேள்விக்குறி. அதிக விலையுள்ள போன்களில் தரமான கேமரா, ஸ்டோரேஜ் வசதிகள் கிடைக்கும். ஆனால் விலை குறைவான போன்களில் இந்த வசதிகள் உள்ள போன்களை தேர்ந்தெடுப்பது மிகவும் சவாலான பணி. இந்த நிலையில் ஏப்ரல், 2025ன் படி 20,000 ரூபாய்க்கும் கீழே தரமான போன்களை இந்த பதிவில் காணலாம்.
ரியல்மி 13 ப்ரோ (Realme 13 Pro)
ரியல்மி 13 ப்ரோ ஸ்மார்ட்போன் 50 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி அல்ட்ரா-வைட் கேமரா, மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸுடன் வருகிறது. இந்த போனில் Snapdragon 7s Gen 2 பிராசஸர் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 7 அங்குல FHD+ OLED திரை மற்றும் 5,200mAh பேட்டரி கொண்டது. சந்தையில் இதன் விலை ரூ.19,999 என கூறப்படுகிறது.
ரியல்மி பி3 (Realme P3)
ரியல்மி பி3 மொபைல் 50எம்பி முதன்மை கேமரா மற்றும் 2எம்பி துணை கேமராவுடன் வருகிறது. இது MediaTek Dimensity 7300 எனர்ஜி பிராசஸரால் இயக்கப்படுகிறது. இந்த போன் 8ஜிபி ரேம் கொண்டது. மேலும் இந்த போன் 6.7 அங்குல FHD+ AMOLED திரை மற்றும் 5,000mAh பேட்டரி கொண்டது. சந்தையில் இதன் விலை ரூ. 16, 999 என கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எம்35 (Samsung Galaxy M35)
சாம்சங் கேலக்ஸி எம்35 மொபைல் 50எம்பி முதன்மை கேமரா, 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா, மற்றும் 2எம்பி மேக்ரோ கேமராவுடன் வருகிறது. இது Exynos 1380 பிராசஸரால் இயக்கப்படுகிறது. இந்த போன் 8ஜிபி ரேம் கொண்டது. மேலும் 6.6 அங்குல FHD+ 120Hz Super AMOLED திரை மற்றும் 6,000mAh பேட்டரி கொண்டது. இதன் விலை ரூ. 16, 699 என்று கூறப்படுகிறது.
விவோ டி4எக்ஸ் (Vivo T4X)
விவோ டி4எக்ஸ் மொபைல் 50எம்பி முதன்மை கேமரா மற்றும் 2எம்பி போர்ட்ரெய்ட் கேமராவுடன் வருகிறது. இது MediaTek Dimensity 7200 பிராசஸரால் இயக்கப்படுகிறது. இந்த போன் 8GB ரேம் கொண்டது. 6.67 அங்குல FHD+ 120Hz AMOLED திரை மற்றும் 5,000mAh பேட்டரி கொண்டது. சந்தையில் இதன் விலை ரூ.15, 100 என கூறப்படுகிறது.
டெக்னோ காமோன் 30 5ஜி (Tecno Camon 30 5G)
டெக்னோ காமோன் 30 5ஜி மொபைல் 50எம்பி முதன்மை கேமரா மற்றும் 2எம்பி துணை கேமராவுடன் வருகிறது. முன்புறத்தில் 50எம்பி செல்ஃபி கேமரா உள்ளது. இது MediaTek Dimensity 7020 பிராசஸரால் இயக்கப்படுகிறது மற்றும் 8GB ரேம் கொண்டது.மேலும் இந்த போனில் 6.78 அங்குல FHD+ LTPS AMOLED திரை மற்றும் 5,000mAh பேட்டரி கொண்டது. சந்தையில் இந்த போன் ரூ. 19, 999 விலையில் கிடைக்கிறது.