Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

AI-ஆல் வேலை போகாது, புதிய வாய்ப்புகள் உருவாகும் – டிசிஎஸ் நிறுவனத்தின் ஏஐ தலைவர்

TCS AI Head on Artificial Intelligence: செயற்கை நுண்ணறிவு வேலை இழப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை விட, திறன்களை மேம்படுத்தி, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் சக்தி அதற்கு உள்ளது என்பதை உணர வேண்டும் என டாடா கன்சல்டிங் சர்வீஸ் ஏஐ தலைவர் அசோக் கிரீஷ் தெரிவித்துள்ளார்.

AI-ஆல் வேலை போகாது, புதிய வாய்ப்புகள் உருவாகும் – டிசிஎஸ் நிறுவனத்தின் ஏஐ தலைவர்
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 28 Apr 2025 20:48 PM

​செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) நம்முடைய வாழ்க்கையின் முக்கிய பகுதியாக மாறியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் செயற்கை நுண்றிவின் வளர்ச்சி வேகமாக வளர்ந்து, நமது வேலைகளை எளிமைப்படுத்தி, தொழில்துறைகளில் புதிய சாத்தியங்களை உருவாக்கியுள்ளது. மருத்துவம், கல்வி, வணிகம், உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் AI-ன் பயன்பாடு மனிதர்களின் பணிச் சுமையை குறைத்து, செயல்திறனை அதிகரிக்க உதவி வருகிறது. இதனால் இப்படி பல நன்மைகள் இருந்தாலும் எதிர்காலத்தில் இதன் வளர்ச்சியின் காரணமாக பல வேலைகள் இல்லாமல் போகும். இதன் காரணமாக பலர் வேலை இழக்க வேண்டியிருக்கும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கவிடுக்கின்றனர். சமீபத்தில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஜொமேட்டோவின் (Zomato) வாடிக்கையாளர் சேவை மையத்தில் கொண்டு வரப்பட்ட ஏஐ தொழில்நுட்பம் பலர் வேலை இருப்பதற்கு காரணமாக அமைந்தது.

இந்த நிலையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தின் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) தலைவர் அசோக் கிரிஷ், ஏஐ தொழில்நுட்பம் வேலை இழப்பை ஏற்படுத்தும் என்ற கருத்தை மறுத்திருக்கிறார். இது திறனை வளர்த்து கொள்ளும் ஒரு வாய்ப்பாக பார்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் ஏஐ என்பது தொழில்நுட்ப மாற்றம் மட்டுமல்ல, பணியாளர்களின் வேலைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கியமான மாற்றம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் .​

 வேலை இழப்பா அல்லது திறன் மாற்றமா?

கடந்த 30 ஆண்டுகளில் செல்போன்கள் முதல் இணையம், ஈ-காமர்ஸ், டிஜிட்டல் மற்றும் கிளவுட் வரை பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு மாற்றத்திலும் வேலை இழப்பு குறித்து பயம் ஏற்பட்டது. இதே போல, செயற்கை நுண்ணறிவும் ஒரு புதிய பரிணாமமாகவே பார்க்கப்பட வேண்டும் . என்று அவர் தெரிவித்தார்.  மேலும் தொழில்நுட்ப முன்னேற்ங்களை  மேலாண்மை மட்டத்தில் முக்கிய மாற்றத்திற்கான வாய்ப்பாக பார்க்கும் நிறுவனங்களில்தான் உண்மையான மதிப்புள்ள செயல்பாடுகள் நடைபெறுகின்றன என்றார். 

வேலைவாய்ப்புகளுக்கான புதிய வாய்ப்புகள்

டாடா கன்சல்டிங் சர்வீஸ் நிறுவனம், ஏஐ மற்றும் பிற தொழில்நுட்பங்களில் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்க பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இது, தொழில்நுட்ப மாற்றங்களை எதிர்கொள்ளும் பணியாளர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்புகளை வழங்குகிறது .​

மொத்தத்தில்,செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேலை இழப்பை ஏற்படுத்தும் என்ற பார்வையை தவிர்த்து, இது திறன் மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் ஒரு வாய்ப்பாக பார்க்கப்பட வேண்டும். நிறுவனங்கள் மற்றும் பணியாளர்கள், செயற்கை நுண்ணறிவின் முழு பலனை பெற, திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நம் வாழ்க்கையை எளிமைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தொழில்துறைகளின் வளர்ச்சிக்கும் புதிய வழிகளை திறந்துள்ளது. வேலை இழப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை விட, திறன்களை மேம்படுத்தி, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் சக்தி ஏஐக்கு உள்ளது என்பதை உணர வேண்டும்.

சூறாவளியாக உருவெடுத்த வைபவ் சூர்யவன்ஷி.. 35 பந்துகளில் சதம்!
சூறாவளியாக உருவெடுத்த வைபவ் சூர்யவன்ஷி.. 35 பந்துகளில் சதம்!...
Video: பயங்கரவாத தாக்குதலின் நடுவே ஜிப்லைனில் பயணித்த இளைஞர்!
Video: பயங்கரவாத தாக்குதலின் நடுவே ஜிப்லைனில் பயணித்த இளைஞர்!...
சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் பட டிரெய்லர் ரிலீஸ்?
சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் பட டிரெய்லர் ரிலீஸ்?...
லாக்கான கதவு... மாட்டிக்கொண்ட ஓனரை காப்பாற்றிய பூனை!
லாக்கான கதவு... மாட்டிக்கொண்ட ஓனரை காப்பாற்றிய பூனை!...
ஆந்திரா பாஜக மாநிலங்களவை வேட்பாளராக வெங்கட சத்தியநாராயணா தேர்வு!
ஆந்திரா பாஜக மாநிலங்களவை வேட்பாளராக வெங்கட சத்தியநாராயணா தேர்வு!...
300 கிராமிற்கு அதிகமாக சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா?
300 கிராமிற்கு அதிகமாக சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா?...
கோடைகாலம் உஷார்... கண்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் கவனிக்கவும்
கோடைகாலம் உஷார்... கண்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் கவனிக்கவும்...
ஸ்ரேயாவின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா? அவரே சொன்ன சீக்ரெட்!
ஸ்ரேயாவின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா? அவரே சொன்ன சீக்ரெட்!...
என் பதிவை தவறாக புரிந்து கொண்டோர் கவனத்திற்கு... விஜய் ஆண்டனி
என் பதிவை தவறாக புரிந்து கொண்டோர் கவனத்திற்கு... விஜய் ஆண்டனி...
சொத்து குவிப்பு வழக்கில் சிக்கும் 6 அமைச்சர்கள்.. யார் யார்?
சொத்து குவிப்பு வழக்கில் சிக்கும் 6 அமைச்சர்கள்.. யார் யார்?...
2028 முதல் 94 போட்டிகள்! ஐபிஎல்லில் அதிகரிக்கும் ஆட்டங்கள்..!
2028 முதல் 94 போட்டிகள்! ஐபிஎல்லில் அதிகரிக்கும் ஆட்டங்கள்..!...