Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் – எப்படி தவிர்ப்பது?

Smartphone Privacy Alert: ஸ்மார்ட்போன்கள் நமக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தாலும் அதில் சில பிரச்னைகளும் இருக்கின்றன. குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் நமது பேச்சுக்களை கேட்க முடியும். நாம் பேச்சின் மூலம் பெறப்படும் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படவும் வாய்ப்பிருக்கிறது. இதனை தவிர்ப்பது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.

நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் – எப்படி தவிர்ப்பது?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 20 Apr 2025 22:30 PM

உங்கள் ஸ்மார்ட்போன் (Smartphones) உங்கள் தனிப்பட்ட பேச்சுகளை கேட்கும் திறன் கொண்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்றைய காலத்தில் நாம் அனைவரும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகிறோம். பேசுவதிலிருந்து வங்கிச் செயல்பாடுகள், ஷாப்பிங் (Shopping) மற்றும் புகைப்படங்கள் எடுக்கும் வரை அனைத்திற்கும் ஸ்மார்ட்போனை நம்பி இருக்கிறோம். ஆனால், நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போன் உங்கள் பேச்சுகளை கேட்கக்கூடும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? உண்மையில் அதற்கான அனுமதியை நாமே வழங்குகிறோம் என்பது தான் இதில் ஹைலைட். சில ஆப்களை டவுன்லோடு செய்யும்போது கேமரா (Camera), மைக், லொகேஷன் போன்றவற்றை அந்த ஆப்கள் பயன்படுத்த அனுமதி வழங்குகிறோம். ஆனால் அதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து நாம் சிந்திப்பதில்லை.

ஒரு பக்கம் ஸ்மார்ட்போன்கள் நமக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்று கருதினாலும், அது நமது தனிப்பட்ட டேட்டாவை திருடும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே தகவல்களை பாதுகாப்பாக வைக்க ஸ்மார்ட்போன்களை கவனமாக கையாள வேண்டும். சில முக்கிய செட்டிங்ஸ்களை மாற்றாமல் விட்டால் உங்கள் பேச்சுகள் டேட்டா திருடர்களின் கைகளில் போய்விடக்கூடும். இதனால் உங்களது தனிப்பட்ட தகவல்கள் தனியாரின் கைகளுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. இதனை தவிர்க்க குறிப்பிட்ட 3 செட்டிங்ஸை உடனே உங்கள் ஸ்மார்ட்போனில் மாற்றி, உங்கள் தகவலின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம்.

கூகுள் அசிஸ்டென்ட் (Google Assistant )

ஸ்மார்ட்போன்களில் Google Voice Assistant இருக்கும்.  இது Hey Google  என்று பேச, நாம் கேட்கும் தகவல்களைத் தரும்.  இது நமது போனில் உள்ள மைக் மூலம் பேச்சுக்களை அதனால் பதிவு செய்ய முடியும். இதனை தவிர்க்க, உங்கள் ஸ்மார்ட்போனில் Settings செல்லுங்கள்.  Google என்பதை டைப் செய்து அதன்பிறகு “All Services” இல் சென்று “Search” என்பதனை டைப் செய்து, அங்கு “Assistant & Voice” என்ற ஆப்சனை தேர்வு செய்யவும். அதில், கூகுள் வாய்ஸ் அசிஸ்டென்டின் இயக்கத்தை நிறுத்துங்கள். இதனால், உங்கள் மைக்ரோஃபோன் எப்போதும் செயல்படாது.

மைக் பெர்மிசன் (Mic Permission)

பல செயலிகள் தேவையின்றி மைக்ரோஃபோன் அனுமதியை கேட்கின்றன. இந்த வகையில், அவை உங்கள் பேச்சுக்களை கேட்கக்கூடும், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துகிறீர்களோ, இல்லையோ. அந்த செயலிகள் மைக் மூலம் நமது பேச்சுக்களை கேட்க முடியும்.  இதனை தவிர்க்க ஸ்மார்ட்போனில் உள்ள Settings இல் , Apps என்ற ஆப்சனை கிளிக் செய்யவும், பிறகு Permissions என்பதைத் தேர்வு செய்து, அதில்  Microphone என்பதனைத் தட்டி, எத்தனை செயலிகளுக்கு மைக்ரோஃபோன் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள்.  அவை அவசியமில்லாத செயலிகளுக்கு மைக்ரோஃபோன் அனுமதியை நீக்குவது நல்லது.

ஆல்வேஸ் லிசனிங் ஃபியேச்சர் (Always Listening Feature)

சில ஸ்மார்ட்போன்களில், எப்போதும் மைக் மூலம் நமது குரலை கேட்கும் அம்சம் செயல்பாட்டில் இருக்கும். அது உடனடியாக நமக்கு தேவையான பதிலை வழங்குகிறது. ஆனால் இது நமது தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்தாக இருக்கலாம். இதனை தவிர்க்க அதற்கு, Settings இல் சென்று, Accessibility அல்லது Privacy என்பதனைத் தேர்வு செய்து, அங்கு Always listening அல்லது  Voice Wake Up போன்ற விருப்பங்களைத் தேர்வு செய்து அதனை நிறுத்த முடியும்.

பம்பாய் படம் இப்போ ரிலீஸ் ஆனா தியேட்டரே பத்தி எரியும்
பம்பாய் படம் இப்போ ரிலீஸ் ஆனா தியேட்டரே பத்தி எரியும்...
2026 சட்டமன்ற தேர்தலில் யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் - நயினார்
2026 சட்டமன்ற தேர்தலில் யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் - நயினார்...
வெயிலும் மழையும் தொடரும் – வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை
வெயிலும் மழையும் தொடரும் – வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை...
எலுமிச்சையை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? ஆச்சரிய தகவல்!
எலுமிச்சையை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? ஆச்சரிய தகவல்!...
சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!
சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!...
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி...
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்...
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!...
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!...
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?...
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?...