உங்கள் ஸ்மார்ட்போனில் அடிக்கடி சார்ஜ் குறையுதா.. இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க!

Smartphone Battery Saving Tips | பலர் தங்களது ஸ்மார்ட்போனில் அடிக்கடி சார்ஜ் குறையும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், சில டிப்ஸ்களை ஃபாலோ செய்வதன் மூலம் அந்த சிக்கலை தவிர்க்க முடியும். அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உங்கள் ஸ்மார்ட்போனில் அடிக்கடி சார்ஜ் குறையுதா.. இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க!

மாதிரி புகைப்படம்

Published: 

22 Mar 2025 11:33 AM

வேகமாக வளர்ச்சியடைந்து வரும் தொழில்நுட்பத்தின் (Technology) காரணமாக, உலகமே நவீனமயமாக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி உலகின் அனைத்து மூலைகளிலும் படர்ந்துள்ளது என்பதை உறுதி செய்வது, ஸ்மார்ட்போன்கள் (Smartphone) தான். உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். பொதுமக்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகவே ஸ்மார்ட்போன்கள் மாறிவிட்டன என்று சொன்னால் அது மிகை ஆகாது.

ஸ்மார்ட்போனில் அடிக்கடி சார்ஜ் குறைவதால் ஏற்படும் சிக்கல்கள்

இந்த நிலையில், ஒரு நாளின் தொடக்கம் முதல் இறுதி வரை பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் முக்கிய கருவியாக ஸ்மார்ட்போன் உள்ளது. அனைத்து தரப்பு மக்களும் தங்கள் அன்றாட பணிகள் மற்றும் தேவைகளுக்கான ஸ்மார்ட்போனை பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட்போன் பொதுமக்களின் வாழ்வில் இத்தகைய முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், சில நிமிடங்கள் கூட சிலரால் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருக்க முடியாது.

ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு சார்ஜ் மிகவும் முக்கியம் ஆகும். ஸ்மார்ட்போனில் சார்ஜ் இல்லையென்றால் அதனை பயன்படுத்த முடியாது. இந்த நிலையில், உங்கள் ஸ்மார்ட்போனில் அடிக்கடி சார்ஜ் குறையும் பிரச்சனை இருந்தால் முக்கியமான நேரங்களில் பயன்படுத்த முடியாமல் போய்விடும். இந்த நிலையில், ஸ்மார்ட்போனில் அடிக்கடி சார்ஜ் குறையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிரைட்னஸ்

ஸ்மார்ட்போனில் சார்ஜ் மிக வேகமாக குறைவதற்கு டிஸ்பிளே பிரைட்னஸ் (Display Brightness) மிக முக்கிய காரணமாக கருதப்படுகிறது. ஸ்மார்ட்போனில் பிரைட்னஸை அதிகமாக வைத்து பயன்படுத்துவதன் மூலம், சார்ஜ் மிக வேகமாக குறையும். எனவே, உங்கள் ஸ்மார்ட்போனின் சார்ஜ் பல மணி நேரம் வரை நீடிக்க வேண்டும் என்றால் பிரைட்னஸ் அளவை குறிப்பிட்ட அளவு வைத்திருப்பது நல்லது.

பேக்கிரவுண்ட் ரன்னிங்

பேக்கிரவுண்ட் ரன்னிங் (Background Running) ஸ்மார்ட்போனுடன் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும். இது ஸ்மார்ட்போனின் சார்ஜரை மிக வேகமாக காலியாக்கிவிடும். எனவே தான், பேக்கிரவுண்ட் ரன்னிங் செயலிகளை ஆஃப் செய்ய வேண்டியது அவசியம் ஆகிறது. பேக்கிரவுண்ட் ரன்னிங் செயலிகளை ஆஃப் செய்வதன் மூலம் ஸ்மார்ட்போனின் சார்ஜ் மிக வேகமாக குறையாமல் இருக்கும்.

லொக்கேஷன்

பெரும்பாலான மக்கள் லொக்கேஷன் (Location) அம்சத்தை சில தேவைகளுக்காக பயன்படுத்துகின்றனர். அவ்வாறு லொக்கேஷனை ஆன் செய்யும் மக்கள் அதனை ஆஃப் செய்ய மறந்துவிடுகின்றனர். இந்த நிலையில், தேவையற்ற நேரங்களில் லொக்கேஷனை ஆஃப் செய்வது ஸ்மார்ட்போனின் சார்ஜை குறையாமல் பாதுகாக்க உதவும்.

மேற்குறிப்பிட்ட இந்த டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம், ஸ்மார்ட்போனில் அடிக்கடி சார்ஜ் குறையும் சிக்கலை தவிர்க்க முடியும். அவசர தேவைகளுக்காக ஒருவரை தொடர்புக்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு மொபைல் போன் முக்கியம். இந்த நிலையில், இத்தகைய சார்ஜ் பிரச்சனைகள் காரணமாக இக்கட்டான சூழல்களில் சிக்கிக்கொல்லும் நிலை ஏற்படும். எனவே, உங்கள் ஸ்மார்ட்போனின் சார்ஜ் குறையாமல் இருக்க இந்த அம்சங்களை சரிசெய்வது சிறந்ததாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.