ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டதா?.. இருக்கும் இடத்தில் இருந்தே தகவல்களை பாதுகாக்கலாம்.. எப்படி?
Protect Data When Your Smartphone is Lost | ஸ்மார்ட்போன்கள் பொதுமக்களின் வாழ்வில் முக்கிய அங்கமாக உள்ல நிலையில், அது தொலைந்துவிட்டால் அதில் இருக்கும் தகவல்கள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில், தொலைந்துப்போன ஸ்மார்ட்போனில் உள்ள விவரங்களை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்போன் (Smartphone) பயன்படுத்துகின்றனர். காலையில் தூக்கத்திலிருந்து எழுவது முதல் இரவு தூங்கச் செல்வது வரை பெரும்பாலான மக்களின் அன்றாட வாழ்வின் முக்கிய அங்கமாக ஸ்மார்ட் போன்கள் உள்ளன. ஸ்மார்ட்போன்கள் தகவல் தொலைத் தொடர்புக்காக பயன்படுத்தப்படுவது மட்டுமின்றி மேலும் பல தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. தகவல் பரிமாற்றம் (Communication), பொழுதுபோக்கு (Entertainment), பண பரிமாற்றம் (Money Transaction), முக்கிய தகவல்களை சேமித்து வைப்பது என பல தேவைகளை பொதுமக்கள் ஸ்மார்ட்போன்கள் மூலம் பூர்த்தி செய்து கொள்கின்றனர்.
ஸ்மார்ட்போன்களில் முக்கிய தகவல்களை சேகரிக்கும் பொதுமக்கள்
தற்போது உள்ள சூழலில் ஒருவரின் ஸ்மார்ட்போன் இருதால் அவர் குறித்த அனைத்து விவரங்களையும் மிக எளிதாக தெரிந்துக்கொள்ளலாம். காரணம், பொதுமக்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் தான் முக்கியமான கடவுச்சொல், தனிப்பட்ட புகைப்படங்கள், தகவல்கள் உள்ளிட்டவற்றை சேகரித்து வைக்கின்றனர். இந்த நிலையில் தான் , ஒருவரின் ஸ்மார்ட்போன் மூலம் அவரை தெரிந்துக்கொள்ள முடியும் என கூறப்படுகிறது. இத்தகைய நிலையில், உங்களின் ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டால் அதில் உள்ள விவரங்களை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஸ்மார்ட்போனில் இருக்கும் முக்கிய தகவல்களை பாதுகாப்பது எப்படி?
ஸ்மார்ட்போன்கள் மனிதர்களின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கும் நிலையில், எங்கு சென்றாலும் பொதுமக்கள் அதனை கையுடன் எடுத்துச் செல்கின்றனர். இவ்வாறு செல்லும் இடத்திற்கெல்லாம் ஸ்மார்ட்போன்களை கொண்டுச்செல்லும் நிலையில், அவை தொலைந்துப்போவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் ஸ்மார்ட்போன்கள் யாருடைய கையிலாவது கிடைத்தால் அதில் இருக்கும் தகவல்கள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே, அதேபோல ஸ்மார்ட்போன்கள் தொலைந்துப்போன உடன் போலீசில் புகார் அளிப்பது எவ்வளவு முக்கியமோ, ஸ்மார்ட்போனில் இருக்கும் தகவல்களை பாதுகாப்பதும் அவ்வளவு முக்கியம்.
உங்கள் ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டால் கூகுளின் (Google) ஃபைண்ட் மை டிவைஸ் (Find My Device) என்ற ஆம்சம் தான் சிறந்ததாக இருக்கும். இது உங்கள் ஸ்மார்ட்போன் எங்குள்ளது என கண்டுபிடிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமன்றி உங்கள் ஸ்மார்ட்போனை லாக் செய்யவும், முக்கிய தகவல்களை அழிக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நிலையில், ஸ்மார்ட்போனில் இந்த செட்டிங்ஸை ஆன் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
- அதற்கு முதலில் Settings-க்கு செல்ல வேண்டும்.
- அதில் கூகுள் (Google) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு All Service என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
- அதற்கு பிறகு Find My Device என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
- அந்த ஆப்ஷன் ஆனில் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லை என்றால் ஆன் செய்ய வேண்டும்.
மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறையை பின்பற்றி Find My Device அம்சத்தை ஆன் செய்யும் பட்சத்தில் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே உங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.