Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் தேடுறீங்களா? ரெட்மி டர்போ 4 ப்ரோ கரெக்டான சாய்ஸ்!

Redmi Turbo 4 Pro: சீனாவில் விரைவில் வெளியாகவிருக்கிற ரெட்மி டர்போ 4 ப்ரோ அதில் உள்ள சிறப்பம்சங்களால் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பட்ஜெட் விலையில் சிறந்த கேமரா, செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஸ்மார்ட்போன் தேடுபவர்களுக்கு நல்ல சாய்ஸாக இந்த போன் கருதப்படுகிறது.

பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் தேடுறீங்களா? ரெட்மி டர்போ 4 ப்ரோ கரெக்டான சாய்ஸ்!
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 20 Apr 2025 19:45 PM

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்‌போன்கள் (Android Smartphones) இன்று ஒவ்வொரு மனிதனுடைய அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாகி விட்டன. தகவல்களை தெரிந்து கொள்ள, சமூக ஊடகங்களை பயன்படுத்த, பண பரிவர்த்தனைகள் செய்ய, வேலை தொடர்பான செயல்களை முடிக்க என ஒட்டுமொத்தமாக வாழ்வின் அனைத்து தேவைகளுக்கும் இப்போது ஒரு ஸ்மார்ட்போன் அவசியம். இந்தியாவில் விதவிதமான வசதிகளுடன் பல்வேறு விலைகளில் ஏகப்பட்ட ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி வருகின்றன.  மக்கள் தங்கள் வசதிக்கு ஏற்பவும், தேவை ஏற்பவும் ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தைகளில் மிக பிரபலமானது ஜியோமி ரெட்மி (Xiaomi Redmi) சீரிஸ். குறைந்த விலையில் மேம்பட்ட தொழில்நுட்பங்களை வழங்குவதால், இந்தியர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த போன் விலையுயர்ந்த போன்கள் தரும் அனுபவங்களை, குறைவான விலையில் ரெட்மி போன்கள் கொடுக்கிறது என்பதுதான் அதற்கான வரவேற்புக்கு காரணம். இதனால் மாணவர்கள், இளைஞர்கள், கேமிங் ரசிகர்கள் என பலருக்கும் இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இந்தியாவில், ஜியோமி ரெட்மி போன்களுக்கு ஏற்கனவே பெரிய மார்க்கெட் உள்ளது. ரெட்மி டர்போ 4 ப்ரோ வெளியானவுடன் அதன் செயல்திறனை அடிப்படையாக வைத்து, இந்திய மார்க்கெட்டில் ஒரு புதிய திருப்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி டர்போ 4 ப்ரோவில் என்ன ஸ்பெஷல்?

ஜியோமியின் ரெட்மி பிராண்டில் அடுத்த முக்கிய வெளியீடான ரெட்மி டர்போ 4 ப்ரோ  ஏப்ரல் 28, 2025 அன்று சீனாவில் அறிமுகமாக உள்ளது. இது Qualcomm நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட Snapdragon 8s Gen 4 சிப் செட் கொண்டிருக்கும் முதல் ஸ்மார்ட்போன் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.  மேலும் இது 2.5K LTPS டிஸ்பிளேயுடன் வருகிறது. 6.83 இஞ்ச் அளவிலான திரை, மிகச்சிறந்த விஷுவல் அனுபவத்தை வழங்கக்கூடியதாக இருக்கும். கண்களை பாதிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த வீடியோ மற்றும் கேமிங் அனுபவங்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கேமரா வசதிகள் எப்படி இருக்கும்?

இதன் Snapdragon 8s Gen 4 (4nm) சிப் செட் அதிக வேகத்துடன் செயல்படுவதுடன், பவரை குறைவாகவே எடுத்துக்கொள்ளும். அதனுடன் இணைந்துள்ள Adreno 825 GPU,  கிராஃபிக்ஸ் கார்டு சிறந்த செயல்திறனையும் வழங்குகிறது. இது அதிகபட்சம் 24GB LPDDR5x ரேம் மற்றும் UFS 4.0 ஸ்டோரேஜுடன் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போனின் வேகத்தையும் செயல்திறனையும் அதிகரிக்கும். கேமராவை பொறுத்தவரை இது 50எம்பி பிரதான கேமராவுடன் வருகிறது. இதில் Optical Image Stabilization வசதியும் உள்ளது. கூடுதலாக, 8MP துணைக் கேமராவும் வழங்கப்படுகிறது, இது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களில் அதிக கிளாரிட்டியை வழங்கும்.

மேலும் 7,550mAh திறன் கொண்ட பேட்டரி மற்றும் 90W சார்ஜ் வசதி மூலம், நீண்ட நேரம் பயன்படுத்தும் திறனும், விரைவில் சார்ஜ் செய்யும் வசதியும் கிடைக்கின்றன. பாதுகாப்பு அம்சங்களிலும் இது முன்னிலை வகிக்கிறது. இதில் கொடுக்கப்பட்ட IP68 / IP69 தூசி  மற்றும் நீர் எதிர்ப்பு வசதிகள், இப்போனை வலிமையானதாகவும், நம்பிக்கையுடன் பயன்படுத்தும் வகையிலும் மாற்றுகின்றன. இதன் விலை தோராயமாக ரூ.23, 500 என்று கூறப்படுகிறது.

2026 சட்டமன்ற தேர்தலில் யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் - நயினார்
2026 சட்டமன்ற தேர்தலில் யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் - நயினார்...
வெயிலும் மழையும் தொடரும் – வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை
வெயிலும் மழையும் தொடரும் – வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை...
எலுமிச்சையை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? ஆச்சரிய தகவல்!
எலுமிச்சையை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? ஆச்சரிய தகவல்!...
சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!
சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!...
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி...
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்...
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!...
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!...
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?...
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?...
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!...