Realme 14T 5G : அசத்தலான விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 14டி 5ஜி!

Realme 14T 5G Launched in India | 2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே ரியல்மி நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Realme 14T 5G : அசத்தலான விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 14டி 5ஜி!

ரியல்மி 14டி ஜி ஸ்மார்ட்போன்

Updated On: 

27 Apr 2025 00:25 AM

2025 ஆம் ஆண்டில் ரியல்மி (Realme) நிறுவனம் தொடர்ந்து தனது புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பெரும்பாலான மக்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் இருக்க வேண்டும், தரமாகவும் சிறந்த தோற்றத்தை கொண்டிருக்க வேண்டும் என விரும்புவர். அத்தகையவர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் விலையும் சற்று குறைவாக உள்ளதால் இது அதிக மக்களால் விரும்பப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 14டி 5ஜி (Realme 14T 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 120Hz AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில், 6,000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 45W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது.

விலை மற்றும் மற்ற சிறப்பு அம்சங்கள் என்ன?

இந்த ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போன் மொத்தம் இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவற்றில், 8ஜிபி + 1287ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.17,999-க்கும், 8ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.19,999-க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை ஏப்ரல் 25, 2025 நள்ளிரவு 12 மணி முதல் ஏப்ரல் 30, 2025 நள்ளிரவு 11.59 மணி வரை நடைபெறும்.

இந்த ஸ்மார்ட்போனை ஆன்லைனில் வாங்கும் நபர்களுக்கு ரூ.1,000 தள்ளுபடியும், வங்கி தள்ளுபடியாக ரூ.2,000 கிடைக்கும். இதுவே ஆஃப்லைனில் ஸ்மார்ட்போன் வாங்கும் நபர்களுக்கு வங்கி தள்ளுபடியாக ரூ.1,000 வழங்கப்படும். இதன் மூலம், இந்த ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போன்களை ரூ.16,999 மற்றும் ரூ.18,999-க்கு வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.