Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மொபைல் போன் வெடிப்பதற்கான காரணம் என்ன ? பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

Mobile Phone Explosions: மொபைல் போன்கள் வெடித்து விபத்து ஏற்பட்ட செய்திகளை அடிக்கடி செய்திகளில் படித்திருப்போம். அப்போதெல்லாம் நமது போனும் வெடிக்குமோ என்ற அச்சம் ஏற்படும். அப்படி மொபைல் போன் வெடிப்பதற்கு காரணம் என்ன? தவிர்ப்பது எப்படி? என்பது குறித்து விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

மொபைல் போன் வெடிப்பதற்கான காரணம் என்ன ? பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 25 Apr 2025 20:12 PM

மொபைல் போன்கள் (Mobile Phone) நம் வாழ்க்கையின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது.  மொபைல் போன்களினால் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ, அதனால் சில ஆபத்துகளும் இருக்கின்றன.  குறிப்பாக மொபைல்போன் வெடித்து விபத்து போன்ற செய்திகளை அடிக்கடி பார்த்திருப்போம். அப்போதெல்லாம் நமது போனும் வெடிக்குமா என்ற கேள்வி எழும். அதிக வெப்பம்,  தவறான சார்ஜிங், பேட்டரி (Battery) குறைபாடுகள், தயாரிப்பு குறைகள் போன்ற காரணங்களால் மொபைல் போன் வெடிக்கலாம்.  நமது மொபைல் போன்கள் வெடிப்பதற்கான காரணங்கள் மற்றும் அதனை தவிர்ப்பது என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

மொபைல்போன்கள் வெடிப்பதற்கு காரணங்கள்:

போன் வெடிப்பதற்கு முக்கிய காரணமாக பேட்டரி பிரச்னைகள் இருக்கின்றன. பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் லிதியம்-ஐயான் பேட்டரிகளை பயன்படுத்துகின்றன. இது மிகுந்த செயல்திறனை அளிக்கிறது. பேட்டரி சேதம் அடையும் போதோ, நீண்ட நேரம் சார்ஜ் செய்யப்படும் போதோ அல்லது கடுமையான வெப்பநிலைகளுக்கு உட்படுத்தப்படும் போதோ,  பேட்டரி வெடிப்பதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.

சில நேரங்களில், தயாரிக்கப்படும்போது தவறான பேட்டரிகள் பொருத்தப்படுவது நடக்கும். இதுபோன்ற தருணங்களில் பேட்டரி வெடிக்கும் அபாயத்தை அதிகரிக்கும்.  ஆனால் இது மிகவும் அரிதானது. இதன் காரணமாக தயாரிப்பு நிறுவனங்கள் சில மாடல்களை திரும்பப் பெறும் நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன.

மொபைல் போன் கீழே விழுந்து சேதமடைந்தால், அது பேட்டரியை பாதிக்கும். மேலும் வெளிப்புற சேதம் போனின் உள்ளமைப்பை பாதித்து அதை வெடிப்பதற்கான மாறக்கூடும். உங்கள் போனை அதிகமாக சார்ஜ் செய்வது அல்லது  தரமற்ற சார்ஜிங் கேபிள்களை பயன்படுத்துவது அதிக வெப்பத்தை உருவாக்கலாம். உங்கள் போனை இரவு முழுவதும் சார்ஜ் செய்யவோ அல்லது பொருத்தமற்ற சார்ஜர்களை பயன்படுத்தவோ செய்வதால் உஷ்ணம் அதிகரிக்கவும் பேட்டரி பாதிக்கவும் வாய்ப்பு உள்ளது.

மொபைல் போன்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

  • எப்போதும் உங்கள் போனுடன் வந்த சார்ஜரை பயன்படுத்தவும்.  இல்லையெனில் அதிகாரப்பூர்வ தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து சார்ஜரை வாங்கவும்.
  • தரமற்ற சார்ஜர்களை பயன்படுத்துவது போனை ஹீட்டாக்குவதுடன் பேட்டரி சேதத்தையும் ஏற்படுத்தக்கூடும்.
  • எப்பொழுதும் 100 சதவிகிதம் சார்ஜ் செய்ய வேண்டாம்.
  • உங்கள் போனை கடுமையான வெப்பநிலைகளில் அல்லது நேரடியாக சூரிய வெப்பத்தை எதிர்கொள்கின்ற இடங்களில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது பேட்டரியினை அதிகமாக சூடாக்கி விபத்து ஏற்பட வாய்ப்பை அதிகரிக்கும்.
  • உங்கள் போன் பேட்டரி பாதிப்பு இருப்பது தெரிந்தாலோ அல்லது லீக்காக இருந்தாலோ உடனே பயன்படுத்துவதை நிறுத்தி உடனடியாக சர்வீஸ் சென்டர்களில் கொடுத்து மாற்றவும்.
  • தரமான போன் கேஸ் மற்றும் டெம்பர் கிளாஸை மாற்றவும். இதன் காரணமாக உங்கள் போன் சூடாவது குறையும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)

சென்னை விமான நிலையம்.. பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்!
சென்னை விமான நிலையம்.. பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்!...
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் உடல் இன்று நல்லடக்கம்
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் உடல் இன்று நல்லடக்கம்...
கோவையில் இன்று நடக்கும் தவெக-வின் முதல் பூத் கமிட்டி மாநாடு
கோவையில் இன்று நடக்கும் தவெக-வின் முதல் பூத் கமிட்டி மாநாடு...
சென்னையில் திடீர் போக்குவரத்து மாற்றம்.. எங்கு தெரியுமா?
சென்னையில் திடீர் போக்குவரத்து மாற்றம்.. எங்கு தெரியுமா?...
CSKvSRH : 5 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அபார வெற்றி
CSKvSRH : 5 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அபார வெற்றி...
ஆன்லைனில் ஆர்டர் செய்தவருக்கு பஸ் டிக்கெட்டுடன் வந்த பேண்ட் !
ஆன்லைனில் ஆர்டர் செய்தவருக்கு பஸ் டிக்கெட்டுடன் வந்த பேண்ட் !...
சுற்றுலா பயணிகளுக்கு உதவியவர்கள் இஸ்லாமியர்கள் தான் - மெஹபூபா!
சுற்றுலா பயணிகளுக்கு உதவியவர்கள் இஸ்லாமியர்கள் தான் - மெஹபூபா!...
சிக்கிம் நிலச்சரிவு - சிக்கி தவிக்கும் 1,000 சுற்றுலா பயணிகள்!
சிக்கிம் நிலச்சரிவு - சிக்கி தவிக்கும் 1,000 சுற்றுலா பயணிகள்!...
சர்க்கரை சாப்பிடுவதால் ஏற்படும் 7 முக்கிய ஆபத்துகள்!
சர்க்கரை சாப்பிடுவதால் ஏற்படும் 7 முக்கிய ஆபத்துகள்!...
ஊட்டி, கொடைக்கானல் விடுதிகள் குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஊட்டி, கொடைக்கானல் விடுதிகள் குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு!...
இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியிருக்கும் Blend - என்ன ஸ்பெஷல்?
இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியிருக்கும் Blend - என்ன ஸ்பெஷல்?...