குறைந்த விலையில் நல்ல கேமரா போனை தேடுறீங்களா? இதோ Oppo K12s 5G ஸ்மார்ட்போன்! விலை எவ்வளவு தெரியுமா?
Oppo K12s 5G: ஓப்போ நிறுவனம் தனது புதிய கே12எஸ் 5G ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 120Hz AMOLED திரை, 80W வேக சார்ஜிங் வசதி, ColorOS 15 ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் மேம்பட்ட கேமரா அம்சங்களுடன் இந்த போன் குறைந்த விலையில் நல்ல தரமான கேமரா போனை எதிர்பார்ப்பவர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஓப்போ (Oppo) ஸ்மார்ட்போன்கள் தரமான கேமரா, மேம்படுத்தப்பட்ட டிஷைன், மற்றும் வேகமாக சார்ஜிங் திறனை அடிப்படையாகக் கொண்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் மனதில் தனி இடம் பிடித்திருக்கிறது. ஓப்போவின் ஓப்போ கே12எஸ் 5ஜி (Oppo K12s 5G) ஸ்மார்ட்போன் சீனாவில் (China) கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலில் சிறப்பான ஹார்டுவேர் அம்சங்கள் மற்றும் நீண்ட கால பேட்டரி ஆயுள் என மிட் ரேஞ்ச் போன்களில் ஹைலைட்டாக அமைந்திருக்கிறது. மேலும் மேம்பட்ட கேமரா அமைப்பு சிறந்த செயல் திறனை வழங்கப்படுகிறது. இது இந்தியாவில் ஏற்கனவே அறிமுகமான ஓப்போ கே13 5ஜி மாடலை போல உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த ஸ்மார்ட்போனில் 6.67 அங்குல திரை, FHD+ AMELED தரத்தில் 120hz ரிஃப்ரேஷ் ரேட் ஆகியவற்றுடன் கிடைக்கிறது. இதில் உள்ள கேமரா அமைப்பு 50எம்பி கேரமார மற்றும் 2 எம்பி மோனோகிராம் கேமராவும் முன்பக்கம் 16எம்பி செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் 7000mah, 80w சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டது. இதில் ஆண்ட்ராய்டு 15 மற்றும் கலர்ஸ் 15 ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் தண்ணீர் பாதிக்க கூடாது என்பதற்கு ஐபி65 சான்று கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் டியூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன்-டிஸ்பிளே, கை ரேகை சென்சார் ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கிறது.
விலை என்ன?
ஓப்போ கே12எஸ் மாடல் சீனாவில் 4 விதமான விலைகளில் கிடைக்கிறது. அதில் 8 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் இந்திய மதிப்பில் ரூ. 14, 000 எனவும், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் ரூ.16,000 எனவும் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் ரூ.18000 என்றும் 12 ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் ரூ. 20000 விலை நிர்ணயிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேட்டரி மற்றும் சார்ஜிங்
இந்த போனில் 7,000mAh திறன் கொண்ட பேட்டரி, 80W வேக சார்ஜிங் கிடைக்கிறது. சுமார் 30 நிமிடங்களில் 0% முதல் 62% வரை சார்ஜ் செய்ய முடியும். ஒரு சார்ஜில் 49.4 மணி பேசும் நேரமும் மற்றும் 14.9 மணி நேர வீடியோ அழைப்பு நேரமும் வழங்குகிறது. பேட்டரி 5 ஆண்டுகள் சாதாரண பயன்பாட்டிற்கு பிறகும் 80% திறன் இருக்கும் என கூறப்படுகிறது.
இணைப்பு மற்றும் சென்சார்கள்
இந்த 5 ஜி போனில் Wi-Fi 6, Bluetooth 5.2, மற்றும் USB Type-C, போன்ற பல வசதிகளும் இருக்கின்றன. கூடுதலாக அத்துடன், பாதுகாப்புக்காக கைரேகை சென்சார், ஃபேஸ் சென்சார், proximity சென்சார் உள்ளிட்ட பல சென்சார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இந்தியாவில் ஏற்கனவே OPPO K13 5G மாடல் ₹17,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. K12s 5G மாடல், அதே ஸ்பெசிஃபிகேஷன்களுடன் சீனாவில் வெளியிடப்பட்டுள்ளதால், இந்திய சந்தையில் இதன் அறிமுகம் குறித்த தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இந்தியாவில் ஏற்கனவே ஓப்போ கே13 5ஜி மாடல் மாடல் ரூ.17,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. தற்போது சீனாவில் அறிமுகமாகியிருக்கும் கே12எஸ் 5ஜி மாடலும் அதே ஸ்பெசிஃபிகேஷனுடன் இருப்பதால் இந்தியாவில் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.