இனி வாட்ஸ்அப் வீடியோ காலில் ஜூம் பண்ணலாம் – லேட்டஸ்ட் அப்டேட்டுகளை தெரிஞ்சுகோங்க!

Whatsapp Update: வாட்ஸ்அப் தன்னுடைய யூசர்களின் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில் புதிய அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளது. இதில் வீடியோ காலில் Zoom செய்யும் வசதி, குரூப் நோட்டிபிகேஷன்களை முன்னிலைப்படுத்தும் சிறப்பம்சம், சானல்கள் பகிர வேண்டிய QR குறியீடு, மற்றும் டாக்குமென்ட் ஸ்கேன் செய்யும் வசதி உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.

இனி வாட்ஸ்அப் வீடியோ காலில் ஜூம் பண்ணலாம் – லேட்டஸ்ட் அப்டேட்டுகளை தெரிஞ்சுகோங்க!

மாதிரி புகைப்படம்

Published: 

15 Apr 2025 20:35 PM

​இந்த நவீன யுகத்தில் வாட்ஸ்அப் (WhatsApp) நம் வாழ்க்கையின் அங்கமாக மாறியிருக்கிறது. மேலும் வேலை, கல்வி, மற்றும் சமூக உறவுகள் ஆகியவற்றுக்கு வாட்ஸ் அப் ஒரு இணைப்பு கருவியாக பயன்படுத்தப்படுகிறது. ஒருவரை தொடர்பு கொள்ளவும் தகவல் பரிமாற்றத்திற்கும் வாட்ஸ்அப் முக்கிய கருவியாக உள்ளது. குரூப் சாட், வீடியோ அழைப்புகள் (Video Call) மற்றும் ஆவண பகிர்வு என நமது வேலைகளை எளிதாக்குகின்றன. வாட்ஸ்அப்பின் வாய்ஸ் மெசேஜ், வீடியோ அழைப்புகள், மற்றும் பள்ளி சார்ந்த அப்டேட்டுகள் போன்ற அம்சங்கள் போன்றவை மாணவர்களுக்கு பெரிதும் கைகொடுக்கின்றன. பள்ளி சார்ந்த அறிவிப்புகள், ஆசிரியர்-மாணவர் தொடர்பு ஆகியவற்றுக்கு இது பயனுள்ளதாக உள்ளது. மேலும் விடுமுறை உள்ளிட்ட முக்கிய தகவல்கள் வாட்ஸ் அப் வழியாகவே மாணவர்களுக்கு அனுப்பப்படுகின்றன. மொத்தத்தில், நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளில் ஒன்றான வாட்ஸ்அப் நம் தினசரி வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. தொடர்புகளை மேம்படுத்தும் புதிய அம்சங்களுடன், இது நம் வாழ்க்கையை மேலும் எளிமையாக்குகிறது.

வாட்ஸ்அப் சமீபத்தில் சாட்ஸ், போன் அழைப்பு மற்றும் அப்டேட்ஸ் என யூசர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. டாக்குமெண்ட்களை ஸ்கேன் செய்வது, வாட்ஸ் அப் சேனல்களுக்கான தனிப்பட்ட கியூஆர் கோடுகளை பகிர்வது, குழு அறிவிப்புகளுக்கு முன்னுரிமை அளிப்பது போன்ற வசதிகள் இதில் அடங்கும். இந்த அப்டேட்டுகள் அனைத்தும் வாட்ஸ்அப்பை மேலும் பயனுள்ளதாகவும் எளிமையாகவும் மாற்றுகின்றன. மேலும் யூசர்களைத் தொடர்ந்து கனெக்டடாக வைக்கும் வகையில் இந்த அம்சங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.​ வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்டுகளை இந்த கட்டுரையில் காணலாம்.

டாக்குமென்ட் ஸ்கேன் செய்யும் வசதி

வாட்ஸ்அப்பில் இனி நேரடியாக டாக்குமெண்ட்களை ஸ்கேன் செய்து பகிர முடியும். இது பணி செய்பவர்களுக்கு, மாணவர்களுக்கு, மற்றும் அரசு துறை பணியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கியூஆர் கோடுகள் மூலம் சேனலுக்கு இன்வைட் செய்யும் வசதி

உங்கள் சேனலுக்கு யூசர்களை அழைக்க தனிப்பட்ட QR கோடு பகிரும் வசதி. இதன் மூலம் சேனல் வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவும்.

குரூப் நோட்டிஃபிகேஷனுக்கு முக்கியத்துவம்

பல வாட்ஸ் குரூப்களில் உள்ளவர்களுக்கு முக்கியமான குரூப்பின் அறிவிப்புகள் முன்னிலைப்படுத்த வாய்ப்பை வழங்குகிறது. முக்கிய தகவல்களை தவறவிடாமல் பெற இது உதவுகிறது.

வீடியோ கால் ஜூம்

வீடியோ காலில் பேசம்போது  Zoom in/out செய்ய உதவுகிறது. மேலும் யார் ஆன்லைனில் இருக்கிறார்கள் என்பதை துல்லியமாக தெரிந்துகொள்ள முடியும். இது வீடியோ கலந்துரையாடல்களை திறம்பட செய்ய உதவுகிறது.

ஸ்டேட்டஸ் வியூக்களை அறியும் வசதி

உங்கள் ஸ்டேட்டஸ் யாரெல்லாம் பார்த்தார்கள் என்பதை தெளிவாக இந்த அப்டேட் மூலம் அறியலாம்.

இந்த அப்டேட்கள் அனைத்தும், வாட்ஸ்அப் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.