Instagram : இன்ஸ்டாகிராமில் வந்த புதிய Blend அம்சம்.. பயன்படுத்துவது எப்படி?
New Instagram Reels Blend Option | இன்ஸ்டாகிராமில் பயனர்களுக்கு பல விதமான சிறப்பு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமன்றி சில புதிய அம்சங்களும் அவ்வப்போது அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அம்சம் தான் ரீல்ஸ் பிளண்ட். இதனை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
மெட்டா (Meta) நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் (Instagram) செயலி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான செயலியாக உள்ளது. இந்த செயலியில் பலவகையான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் செயலியில் தகவல் பரிமாற்றம் (Communication), பொழுதுபோக்கு (Entertainment), வணிகம் (Business) என பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. இவ்வாறு பல அம்சங்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் நிலையில் அது பெரும்பாலான மக்களின் முதன்மை தேர்வாக உள்ளது.
இன்ஸ்டாகிராம் செயலியில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய அம்சம்
என்னதான் இன்ஸ்டாகிராம் செயலிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் இருந்தாலும், மேலும் பயனர்களை ஈர்க்கும் வகையிலும், ஏற்கனவே இருக்கும் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையிலும் அந்த நிறுவனம் பல புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு அசத்தலான அம்சம் தான் பிளண்ட் (Blend). இந்த அம்சத்தை பயன்படுத்தி, இன்ஸ்டாகிராமில் பயனர்கள் தங்களுக்கு பிடித்த நபர்கள் அல்லது நண்பர்களுடன் ரீல் ஃபீடை (Reels Feed) ஷேர் செய்துக்கொள்ளலாம். இந்த நிலையில், இந்த அம்சத்தின் சிறப்புகள் என்னென்ன, அதனை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இன்ஸ்டாகிராமின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
How to try the NEW Reels Blend feature with your besties 🎥💞⁰
👆 Go to any DM chat and tap the Blend icon at the top right corner💌 Send an invite to your friend(s)
🤝 Once they accept, tap the icon in your DM chat to enter your Blend
❤️🔥 Have fun exploring Reels for you and… pic.twitter.com/30dwfmTVZT
— Instagram (@instagram) April 17, 2025
இன்ஸ்டாகிராம் பிளண்ட் அம்சம்
இன்ஸ்டாகிராம் செயலியில் பிளண்ட் என்ற புது அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சத்தை பயன்படுத்து பயனர்கள் தங்களுக்கு பிடித்த நபர்கள் மற்றும் நண்பர்களுடன் ரீல்ஸ் ஃபீடை பகிர்ந்துக்கொள்ளலாம். அதாவது பொதுவாக இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு அவர்களது நண்பர்கள் பார்த்து லைக் செய்த ரீல்ஸ் வீடியோக்கள் வரும். இதன் மூலம் ஒரே எண்ணம் கொண்ட நபர்கள் தங்களுக்கு பிடித்தான ரீல்ஸ்களை பார்க்கலாம். அந்த வகையில் அறிமுகம் செய்யப்பட்டது தான் இந்த பிளண்ட் அம்சம். இதனை பயன்படுத்தி பயனர்கள் தங்களது நண்பர்களுடன் ஃபீடை பயன்படுத்திக்கொள்ளலாம். அதன் மூலம் இருவருக்கும் ஒரே விதமான வீடியோக்கள் வரும்.
பிளண்ட் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?
- முதலில் நீங்கள் யாருடன் ரீல்ஸ் ஃபீடை பகிர விரும்புகிறீர்களோ அவரது உரையாடலுக்குள் செல்ல வேண்டும்.
- அங்கு வலது பக்கத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பிளண்ட் ஐகானை (Blend Icon) கிளிக் செய்ய வேண்டும்.
- அதன் மூலம் உங்களது நண்பர்களுக்கு இன்வைட் (Invite) அனுப்ப வேண்டும்.
- உங்களது இன்வைட்டை உங்கள் நண்பர் ஏற்றுக்கொண்டு விட்டார் என்றால் நீங்களும் உங்களது நண்பரும் அதற்கு பிறகு ஒரே ஃபீடை பயன்படுத்தலாம்.
மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறைகளை பின்பற்றி மிக சுலபமாக இன்ஸ்டாகிராம் பிளண்ட் அம்சத்தை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.