Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Facebook : ஃபேஸ்புக்கில் ப்ரொபைல் லாக் செய்வது எப்படி?.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!

Facebook Profile Lock | ஃபேஸ்புக் கணக்கில் ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். இந்த நிலையில், தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க ப்ரொபைல் லாக் செவது எப்படிட் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Facebook : ஃபேஸ்புக்கில் ப்ரொபைல் லாக் செய்வது எப்படி?.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 28 Mar 2025 18:43 PM

மெட்டா (Meta) நிறுவனத்தின் ஃபேஸ்புக் (Facebook) செயலியை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். உலக அளவில் உள்ள பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும், பொழுதுபோக்கு செயலியாக இது உள்ளது. ஃபேஸ்புக் செயலியில் தகவல் பரிமாற்றத்துக்கு மட்டுமன்றி, பொழுதுபோக்கிற்கும் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. இதனால் பொதுமக்களுக்கு மிகவும் பிடித்தமான செயலியாகவும் இது உள்ளது.

தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது ஏன் அவசியம்?

ஃபேஸ்புக் செயலியை பொருத்தவரை அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையில் ஒரு பொதுவான செயலியாக உள்ளது. ஃபேஸ்புக் செயலியில் யார் யாரை வேண்டுமானாலும் மிகவும் எளிதாக தொடர்புக்கொள்ளலாம். யார் வேண்டுமானாலும் யாருடைய கணக்கையும், புகைப்படங்களையும், பதிவுகளை பார்க்கலாம். ஆனால் இது சில சமயங்களில் பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும் அபாயம் உள்ளது.

தற்போதைய காலக்கட்டத்தில் தனி மனித தகவல்கள் திருடப்பட்டு மோசடிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஃபேஸ்புக்கில் கணக்குகள் அனைவரும் பார்வையிடும் வகையில், பொது வெளியில் இருப்பதால் அதிலும் சில சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த நிலையில், ஃபேஸ்புக் ப்ரொபைலை (Facebook Profile) லாக் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஃபேஸ்புக் ப்ரொபைலை லாக் செய்வது எப்படி?

மொபைல் போன் மூலம்  ஃபேஸ்புக் ப்ரொபைலை லாக் செய்வதற்கு கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்.

  1. முதலில் ஸ்மார்ட்போனில் உள்ள மொபைல் செயலியை திறந்து உங்கள் கணக்கில் உள் நுழையுங்கள்.
  2. பிறகு உங்கள் ப்ரொபைல் பக்கத்திற்கு சென்று அங்கு கொடுக்கப்பட்டுள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும்.
  3. பிறகு ஆட் டூ ஸ்டோரி (Add to Story) என்பதை கிளிக் செய்து பிறகு திரையில் தோன்றும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும்.
  4. அதில் லாக் ப்ரொபைல் (Lock Profile) என்ற அம்சத்தை கிளிக் செய்யுங்கள்.
  5. இதன் பிறகு உங்கள் ப்ரொபைலை லாக் செய்வதற்கான விளக்கம் திரையில் தோன்றும். இப்போது லாக் யுவர் ப்ரொபைல் (Lock Your Profile) என்பதை கிளிக் செய்து உறுதிப்படுத்தவும்.

ஃபேஸ்புக் ப்ரொபைலை லாக் செய்வதன் நன்மைகள் என்ன?

தனியுரிமை பாதுகாப்பு

ஃபேஸ்புக் ப்ரொபைலை லாக் செய்வதன் மூலம் உங்களுக்கு தெரியாத நபர்கள் அல்லது மோசடி நபர்கள் உங்கள் தனிப்பட்ட தகவலை அணுகுவதில் இருந்து பாதுகாக்க முடியும்.

தகவல் மீறல் தடுப்பு

ஃபேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்கள், வீடியோக்களை பகிருவதை பலர் வழக்கமாக கொண்டுள்ள நிலையில், அவை தவறாக பயன்படுத்தப்படுவதை இந்த ப்ரொபைல் லாக் அம்சம் தடுக்கும்.

பாதுகாப்பான சூழல்

ஃபேஸ்புக் ப்ரொபைல் லாக் செய்யப்படுவதன் மூலம் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக உள்ளன என்ற உறுதி கிடைக்கும். இதன் மூலம் மோசடி மற்றும் குற்ற சம்பவங்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யலாம்.

ஃபேஸ்புக் கணக்கை மோசடிக்காரர்களின் பிடியில் இருந்து பாதுகாப்பாக வைத்திருக்கவும், தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கவும் இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ கிரியேட்டர்களுக்கு ஏற்ற விவோ எக்200எஸ் - என்ன ஸ்பெஷல்?
வீடியோ கிரியேட்டர்களுக்கு ஏற்ற விவோ எக்200எஸ் - என்ன ஸ்பெஷல்?...
நீதிக்கட்சியின் நீட்சிதான் இந்த ஆட்சி.. CM ஸ்டாலின் பெருமிதம்!
நீதிக்கட்சியின் நீட்சிதான் இந்த ஆட்சி.. CM ஸ்டாலின் பெருமிதம்!...
இரு மாநில திருமணம்.. பிரிட்டிஷ் இன்ஃபுளூயன்சர் வைரல் வீடியோ!
இரு மாநில திருமணம்.. பிரிட்டிஷ் இன்ஃபுளூயன்சர் வைரல் வீடியோ!...
அஜித் குட் பேட் அக்லி படத்திலிருந்து வெளியான God Bless U வீடியோ!
அஜித் குட் பேட் அக்லி படத்திலிருந்து வெளியான God Bless U வீடியோ!...
பஹல்காமில் மோசமடையும் நிலைமை! 30க்கு அதிகமானோர் உயிரிழந்தாக தகவல்
பஹல்காமில் மோசமடையும் நிலைமை! 30க்கு அதிகமானோர் உயிரிழந்தாக தகவல்...
ஸ்விகி, ஜொமேட்டோ ஊழியர்களுக்கு பென்சன்? புதிய திட்டம்!
ஸ்விகி, ஜொமேட்டோ ஊழியர்களுக்கு பென்சன்? புதிய திட்டம்!...
சூரிய ஒளிக்கும் கல்லீரல் நோய் எதிர்ப்புக்கும் தொடர்புள்ளதா?
சூரிய ஒளிக்கும் கல்லீரல் நோய் எதிர்ப்புக்கும் தொடர்புள்ளதா?...
பயங்கரவாத தாக்குதல்: அமித் ஷாவுடன் பேசிய பிரதமர் மோடி!
பயங்கரவாத தாக்குதல்: அமித் ஷாவுடன் பேசிய பிரதமர் மோடி!...
அண்ணாமலை? ஸ்மிருதி இரானி? ஆந்திரா MP ரேஸில் முந்தப்போவது யார்?
அண்ணாமலை? ஸ்மிருதி இரானி? ஆந்திரா MP ரேஸில் முந்தப்போவது யார்?...
கைகளில் கருப்பு பட்டை! கான்வேக்காக CSK வீரர்கள் செய்த காரியம்!
கைகளில் கருப்பு பட்டை! கான்வேக்காக CSK வீரர்கள் செய்த காரியம்!...
நோட் பண்ணுங்க.. அட்சய திரிதியை நாளில் என்ன வாங்கக்கூடாது?
நோட் பண்ணுங்க.. அட்சய திரிதியை நாளில் என்ன வாங்கக்கூடாது?...