இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமாக வேண்டுமா? கடைபிடிக்க வேண்டிய 5 டிப்ஸ்கள் இதோ!
Instagram Reels Tips : இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் மக்கள் தங்களின் திறமைகளை உலகிற்கு காட்டுவதுடன், பிரபலமாவதற்கும் வாய்ப்பை பெறுகிறார்கள். அதனை மேலும் சுவாரஸ்யமாக மாற்ற, இன்ஸ்டாகிராம் சில புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

உலகம் முழுவதும் மக்கள் பெரிதும் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்று இன்ஸ்டாகிராம் (Instagram). புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டோரிகள், ரீல்ஸ் என பல வழிகளில் நமது திறமைகளை பகிர்ந்து கொள்ளும் தளமாக இது மாறியுள்ளது. குறிப்பாக இளம் தலைமுறையினர் தங்களது தினசரி லைஃப் அப்டேட், ட்ரெண்ட்டிங் (Trending) வீடியோக்களை, புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு, பிரபலமாகிற ஒரு மேடையாக இது மாறியுள்ளது. இதில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் (Instagram Reels) என்ற அம்சம், குறுகிய கால அளவுள்ள வீடியோக்களை மிகவும் சுலபமாக உருவாக்கி, உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்களிடம் விரைவில் பகிர முடியும் எனும் வசதியால், மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது. கிரியேட்டிவிட்டியுடன் கூடிய ரீல்ஸ் மூலம் இன்ஸ்டா பிரபலமாகி வருமானமும் ஈட்டலாம்.
உங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஃபாலோயர்களை அதிகப்படுத்தவும் வளர்த்திடவும், புதிய பார்வையாளர்களை ஈர்க்கவும் நீங்கள் அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கும். அங்கு போட்டி நிறைந்த சூழலில் நமக்கென தனித்துவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இன்ஸ்டாகிராம் ரீல்ஸை மேலும் சிறப்பாக உருவாக்க உதவும் 5 முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
டெம்ப்ளேட் (Templates):
இந்த அம்சத்தின் மூலம், ட்ரெண்டிங்கில் உள்ள ரீல்ஸின் கால அளவுகள், ஃபில்டர், இசை போன்றவை டெம்ப்ளேட்டாக கிடைக்கும். அதனைப் பயன்படுத்தி நாம் வீடியோ உருவாக்கலாம். இதனால் எளிதில் வீடியோ உருவாக்க முடியும் என்பதால் நாம் மெனக்கெட தேவையில்லை. மேலும் விரைவில் டிரெண்டிங்கில் இடம் பிடிக்கலாம்.
டூயல் கேமரா (Dual Camera)
இந்த அம்சத்தின் மூலம் ஒரே நேரத்தில் உங்கள் செல்பி கேமரா மூலம் உங்களையும், பின்புற கேமரா மூலம் உங்களுக்கு எதிரில் உள்ளதையும் படமாக்க முடியும். இதன் மூலம் சில ரியாக்ஷன் வீடியோக்களில் முன்பக்க கேமரா மூலம் உங்களது ரியாக்ஷனையும் மற்றும் பின்பக்க கேமரா மூலம் காட்சிகளையும் பதிவு செய்து உங்கள் அனுபவத்தை பார்வையாளர்களோடு நேரடியாக பகிரலாம்.
அட்வான்ஸ்டு எடிட்டிங் டூல்ஸ் (Advanced Editing Tools)
இன்ஸ்டாகிராம் தற்போது மேம்பட்ட எடிட்டிங் வசதிகளை வழங்குகிறது. இதில், வீடியோவின் சவுண்ட் மற்றும் காட்சிகளையும் மிகச்சிறப்பாக எடிட் செய்யலாம். இது உங்கள் ரீல்ஸை ஒரு ப்ரொஃபஷனல் லெவலில் கொண்டு சென்று, பார்வையாளர்களை கடைசி வரை கவர்ந்திருக்கும்.
போல்ஸ், க்விஸ், எமோஜி (Polls, Quizzes, Emoji)
போல்ஸ், க்விஸ், எமோஜி போன்ற அம்சங்களை உங்கள் ரீல்ஸில் சேர்த்து பார்வையாளர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கலாம். இது உங்கள் வீடியோவின் இண்டராக்ஷனை அதிகரித்து, இன்ஸ்டாகிராம் ஆல்கெரிதத்தில் உங்கள் ரீல் முன்னணியில் வர உதவும்.
எஃபெக்ட்ஸ் மற்றும் ஏஆர் ஃபில்டர்கள் (Effects & AR Filters)
இன்ஸ்டாகிராம் ஏஆர் ஃபில்டர்களை மிகவும் மேம்படுத்தியுள்ளது. அழகான ஃபில்டர்கள், 3டி அனிமேஷன்கள் மற்றும் வித்தியாசமான பின்னணிகள் மூலம் உங்கள் ரீல்ஸின் தரத்தை மேம்படுத்தலாம்.