இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியிருக்கும் Blend – என்ன ஸ்பெஷல்? எப்படி பயன்படுத்துவது?
Instagram Launches 'Blend: இளம் தலைமுறையை பெரிதும் ஈர்த்திருக்கும் இன்ஸ்டாகிராம், பயனாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்க அடிக்கடி அப்டேட் செய்து வருகிறது. ட்ரெண்டிங் வீடியோக்கள், ரீல்ஸ், ஸ்டோரி அப்டேட்டுகள், மற்றும் டிஎம் என ஒவ்வொரு அம்சமும் இன்றைய டிஜிட்டல் வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டது. அந்த வகையில் Blend எனும் புதிய அம்சத்தை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

மெட்டாவின் (Meta) சோஷியல் மீடியாவான இன்ஸ்டாகிராமை (Instagram) உலக அளவில் கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். நமது புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டோரி, ரீல்ஸ் போன்றவற்றை நண்பர்களுடன் பகிர வாய்ப்பளிக்கப்படுகிறது. இளம் தலைமுறையை பெரிதும் ஈர்த்திருக்கும் இந்த செயலி, பயனாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் அடிக்கடி அப்டேட்டுகளை வழங்கிவருகிறது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் தனது பயனர்களுக்கு ‘Blend’ என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது ரீல்ஸ் வீடியோக்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் முறையை மாற்றுகிறது. இந்த அம்சம், உங்கள் மற்றும் உங்களது நண்பர்களின் விருப்பங்களை புரிந்துகொண்டு தனிப்பட்ட Reels ஃபீடை உருவாக்கும். அதில் அதிகம் விரும்பும் ரீல்ஸ் வீடியோக்கள் இடம்பெறும். இந்த ஃபீடு, தினசரி புதுப்பிக்கப்பட்டு அன்றைய நாளில் நீங்கள் விரும்பும் டாபிக்குகளில் இருந்து வீடியோக்கள் பகிரப்படும். இது ஒருவர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் நேரத்தை அதிகமாக்கும் என அந்நிறுவனம் நம்புகிறது. மேலும் இது உங்கள் மற்றும் உங்கள் நண்பர்களின் விருப்பங்களை பிரதிபலிப்பதால் உங்களது உறவு மேம்பட உதவுகிறது.
Blend அப்டேட்டின் முக்கிய அம்சங்கள்:
-
Blend, உங்கள் மற்றும் உங்கள் நண்பர்களின் விருப்பங்களை அடிப்படையாகக் கொண்டு, தனிப்பட்ட ரீல்ஸ் ஃபீடை உருவாக்குகிறது. இந்த ஃபீடானது, தினசரி புதுப்பிக்கப்படுகிறது, மேலும் இது உங்கள் மற்றும் உங்கள் நண்பர்களின் விருப்பங்களை பிரதிபலிக்கிறது.
-
இந்த அம்சம், டைரக்ட் மெசெஜ் (DM) பகுதியில் செயல்படுகிறது. நீங்கள் ஒரு நண்பருடன் அல்லது குழுவுடன் Blend ஐ உருவாக்கலாம். அவர்கள் அழைப்பை ஏற்றுக்கொண்ட பிறகு, உங்கள் ஃபீடு உருவாகும்.
-
Blend ஃபீடில் உள்ள வீடியோக்கள், யாருக்கு பரிந்துரைக்கப்பட்டவை என்பதை காட்டும். இது, உங்கள் நண்பர்களின் விருப்பங்களை புரிந்து கொள்ள உதவுகிறது. மேலும், நீங்கள் வீடியோக்களுக்கு பதிலளிக்கலாம், இது நேரடியாக இருவரது டிஎம் பகுதியில் பகிரப்படும்.
Blend அம்சத்தை எப்படி பயன்படுத்துவது:
-
Instagram ஆப்பைத் திறக்கவும்.
-
ஒரு நண்பர் அல்லது குரூப்பில் உள்ள டைரக்ட் மெசேஜை திறக்கவும்.
-
மேல் வலது மூலையில் உள்ள ‘Blend’ ஐகானைக் கிளிக் செய்யவும்.
-
‘Invite’ என்பதைத் தேர்ந்தெடுத்து, Blend அழைப்பை அனுப்பவும்.
-
நண்பர் அல்லது குழுவினர் அழைப்பை ஏற்றுக்கொண்ட பிறகு, உங்கள் ஃபீடு உருவாகும்.
இந்த புதிய அம்சம் இன்ஸ்டாகிராமில் உள்ள Reels பகிர்வை மேலும் பயனுள்ளதாக மாற்றுகிறது. நீங்கள் மற்றும் உங்கள் நண்பர்கள், ஒரே இடத்தில் வீடியோக்களை பகிர்ந்து, அதைப் பற்றி விவாதிக்கலாம். இது, உங்கள் சமூக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)