இந்தியாவில் ஒரே நிதியாண்டில் 60% உயர்ந்த ஐபோன் உற்பத்தி!
India's iPhone Manufacturing Boom | உலக அளவில் மிகவும் பிரபலமாகவும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்களை இந்தியா உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில் 2024 - 2025 நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் ஐபோன் உற்பத்தி சுமார் 60 சதவீதம் வரை உயர்ந்துள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் அதிக மக்களால் விரும்பி பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களாக (Smartphone) ஐபோன்கள் (iPhone) உள்ளன. ஐபோன்கள் மற்ற நிறுவன ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடுகையில் சற்று விலை உயர்ந்ததாக கருதப்படும் நிலையில், எப்படியாவது சிலர் அந்த ஸ்மார்ட்போன்களை வாங்கிடுகின்றனர். உலக நாடுகள் மட்டுமன்றி இந்தியாவிலும் ஐபோன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஐபோன் பயன்பாடு மட்டுமன்றி, உற்பத்தியும் அதிகரித்துள்ளது. அதாவது, இந்தியாவில் 2024 நிதியாண்டில் மட்டும் ஐபோன் உற்பத்தி 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே ஆண்டில் 60 சதவீதம் அதிகரித்த ஐபோன் உற்பத்தி
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஐபோன் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. உலக அளவின் ஐபோன் பயன்பாடு அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், 2024 நிதியாண்டில் இந்தியாவில் ஐபோன் உற்பத்தி 60 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த 2024 – 2025 நிதியாண்டில் ஐபோன் விற்பனை ரூ.1.85 லட்சம் கோடியாக இருந்தது. இதில் ஏற்றுமதி செய்யப்பட்ட ஐபோன்களின் மதிப்பு மட்டும் சுமார் 1.5 லட்சம் கோடி என்று மத்திய மிண்ணனு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை (Ministry of Electronics and Information Technology) அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஐபோன் உற்பத்தில் சாதனை படைத்த இந்தியா
𝗕𝗶𝗴 𝗣𝗼𝘀𝗶𝘁𝗶𝘃𝗲 𝗡𝗲𝘄𝘀 🚨
Export of iPhones, smartphones, laptops and tablets from India to US will be 20% cheaper compared to China 🔥
iPhone production in India rose 60% in FY25 🔥
1 out of 5 iPhones are manufactured in India 🔥
Which one do you like ? pic.twitter.com/dqvBjRmhYL
— Chart Wallah (@Chart_Wallah108) April 14, 2025
ஐபோன் உற்பத்தில் மேலும் உயரும் வாய்ப்பு
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே ஏற்பட்டுள்ள வர்த்தக போர் காரணமாக சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை குறையும் என்றும் ஏற்றுமதி பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. வர்த்தக போர் மட்டுமன்றி, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு அமெரிக்க மிக குறைந்த அளவில் வரி விதிக்கிறது.
இந்தியாவில் ஐபோன் உற்பத்தில் அதிகரிக்க இது மேலும் ஒரு முக்கிய காரணமாக இருக்க கூடும் என்று இனி வரும் நாட்களில் இந்த சதவீதம் மேலும் உயருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போதைய நிலவரத்தின் படி உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஐபோன்களில் 5-ல் ஒன்று இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுவதாக தரவுகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.