Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

WhatsApp : வாட்ஸ் அப் கணக்குகள் ஹேக் செய்யப்படுவது எப்படி?.. பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

WhatsApp Account Security | ஏராளமான மக்கள் தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட தேவைகளுக்காக தங்களின் அன்றாட வாழ்வில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், வாட்ஸ்அப் செயலி எவ்வாறு ஹேக் செய்யப்படுகிறது, அதில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என பார்க்கலாம்.

WhatsApp : வாட்ஸ் அப் கணக்குகள் ஹேக் செய்யப்படுவது எப்படி?.. பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 25 Mar 2025 06:33 AM

உலக அளவில் ஏராளமான மக்களால் பயன்படுத்தும் முக்கிய செயலிகளில் ஒன்றாக மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி (WhatsApp) உள்ளது. இந்த செயலி பொழுதுபோக்கு, உரையாடல், தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பல தேவைகளுக்காக பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாகவே ஏராளமான மக்கள் தங்களின் அன்றாட வாழ்வில் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

பலர், வாட்ஸ்அப் செயலி மூலம்  சிலர் தனிப்பட்ட மற்றும் முக்கியமான தகவல்களை பகிர்ந்துக்கொள்கின்றனர். தரவுகள், கடவுச்சொல் உள்ளிட்டவற்றையும் பதிவு செய்து வைக்கின்றனர். இந்த நிலையில், வாட்ஸ்அப்பில் இருக்கும் இந்த தகவல்கள் திருடப்பட்டு மோசடிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த வகை வாட்ஸ்அப் ஹேக் மூலம்  ஏராளமான மக்கள் மிகுந்த பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

வாட்ஸ்அப் எப்படி ஹேக் செய்யப்படுகிறது?

தற்போதை காலக்கட்டத்தில் தொழில்நுட்பம் அபார வளர்ச்சி அடைந்துள்ளது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை பலர் நல்ல செயல்களுக்கு பயன்படுத்தினாலும், சிலர் அவற்றை பயன்படுத்தி மோசடி உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். பொதுவாக ஹேக்கர்கள் வாட்ஸ்அப்பில் Fishing எனப்படும் மோசடி லிங்குகளை அனுப்பி அதன் மூதல் மோசடி செய்கின்றனர்.

அதாவது  பயனர்களின் வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் திருடும் லிங்கை அனுப்பி அதனை அவர்கள் கிளிக் செய்ததும் அதன் மூலம்  தகவல்களை திருடி மோசடி செய்கின்றனர். இது தவிர மால்வேர் தாக்குதல், மோசடி கால்கள், தரவு திருட்டு உள்ளிட்ட பல வகைகளிலும் மோசடிக்காரர்கள் இந்த மோசடி சம்பவங்களை அரங்கேற்றம் செய்து வருவது தொடர்கதையாக உள்ளது.

வாட்ஸ்அப் ஹேக்கில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

  1. முதலில் 2 இரண்டு அடுக்கு பாதுகாப்பு (Factor Authentication) அம்சத்தை அமைக்க வேண்டும். இதன் மூலம் வாட்ஸ்அப் கணக்குக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்.
  2. ஒருபோதும் உங்களுக்கு வரும் ஓடிபிக்களை யாருடனும் பகிர வேண்டாம். அதன் மூலம் மிக சுலபமாக மோசடி நடைபெற வாய்ப்புகள் உள்ளது.
  3. உங்கள் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தெரியாத எண்களில் இருந்து வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம். அதன் மூலம் உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்து உள்ளது.
  4. WhatsApp Web-ல் இணைக்கப்பட்டுள்ள செயலிகளை சரிபார்ப்பது மிகவும் அவசியம் ஆகும். காரணம் உங்களுக்கே தெரியாமல் உங்கள் கணக்கை வேறு யாரேனும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.
  5. தெரியாத எண்களில் இருந்து வாட்ஸ்அப் கால் அல்லது வீடியோ கால் வந்தால் பதில் அளிக்காதீர்கள். அவை மோசடிக்காரர்களின் அழைப்புகளாக இருக்கலாம்.

மேற்குறிப்பிட்ட இந்த சில டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் உங்கள் வாட்ஸ்அப் கணக்கு மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். இதன் மூலம் மோசடிக்கார்ரகளிடம் இருந்தும் உங்கள் வாட்ஸ்அப் கணக்குகளை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நோட் பண்ணுங்க.. அட்சய திரிதியை நாளில் என்ன வாங்கக்கூடாது?
நோட் பண்ணுங்க.. அட்சய திரிதியை நாளில் என்ன வாங்கக்கூடாது?...
வெறும் வயிற்றில் நடப்பதா அல்லது உணவு உண்ட பின் நடப்பதா?
வெறும் வயிற்றில் நடப்பதா அல்லது உணவு உண்ட பின் நடப்பதா?...
சமூக ஊடகங்களுக்கு சிறிய பிரேக்.. லோகேஷ் கனகராஜ் எடுத்த முடிவு!
சமூக ஊடகங்களுக்கு சிறிய பிரேக்.. லோகேஷ் கனகராஜ் எடுத்த முடிவு!...
போலீஸ் உடை அணிந்து தாக்குதல்! பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காரணமா..?
போலீஸ் உடை அணிந்து தாக்குதல்! பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காரணமா..?...
கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்ததாக சொல்லப்படும் 4 ராசிக்காரர்கள்!
கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்ததாக சொல்லப்படும் 4 ராசிக்காரர்கள்!...
ஏசியை ஏன் வருடத்திற்கு ஒருமுறை சர்வீஸ் செய்ய வேண்டும்?
ஏசியை ஏன் வருடத்திற்கு ஒருமுறை சர்வீஸ் செய்ய வேண்டும்?...
கர்வத்தால் திருப்பதியில் டிரம்ஸ் சிவமணிக்கு நடந்த சம்பவம்!
கர்வத்தால் திருப்பதியில் டிரம்ஸ் சிவமணிக்கு நடந்த சம்பவம்!...
திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே திட்டம்!
திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே திட்டம்!...
இந்த இரண்டு பாட்டுக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?
இந்த இரண்டு பாட்டுக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?...
திருமணம் பிரச்னை இல்லை.. ஆனால் அதற்கு.. மனம் திறந்த சிம்பு!
திருமணம் பிரச்னை இல்லை.. ஆனால் அதற்கு.. மனம் திறந்த சிம்பு!...
பாரம்பரிய அரிசியா? சாதாரண அரிசியா? நீரிழிவு நோய்க்கு எது நல்லது?
பாரம்பரிய அரிசியா? சாதாரண அரிசியா? நீரிழிவு நோய்க்கு எது நல்லது?...