Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சாட் ஜிபிடியில் கருப்பு வெள்ளை போட்டோவை கலர் போட்டோவாக மாற்றலாம் – எப்படி தெரியுமா?

Add Color with ChatGPT: சாட் ஜிபிடி போன்ற ஏஐ டூல்கள் மனிதர்களின் வாழ்க்கையை எளிதாக மாற்றியிருக்கிறது. உலக அளவில் பல அசாத்தியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் சாட் ஜிபிடியில் உங்கள் கருப்பு வெள்ளை போட்டோவை கலர் போட்டோவாக மாற்றலாம். அது எப்படி என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

சாட் ஜிபிடியில் கருப்பு வெள்ளை போட்டோவை கலர் போட்டோவாக மாற்றலாம் – எப்படி தெரியுமா?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 19 Apr 2025 21:26 PM

மனிதர்களுக்கு கிடைத்த மேஜிக் ஸ்டிக் போல மாறிவிட்டது ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு. மனிதர்களின் வாழ்க்கையை சுலபமாக மாற்றியிருக்கிறது. சாட் ஜிபிடி (Chat gpt) போன்ற ஏஐ டூல்களிடம் கலந்தாலோசிக்காமல் எதுவும் செய்வதில்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. மனிதர்களால் செய்ய முடியாததைக் கூட ஏஐ உதவியுடன் செய்து முடிக்க முடியும். சமீபத்தில் மருத்துவர்களால் கண்டறியாத நோய்களை கூட ஏஐ கண்டறிந்து சொல்கிறது. மேலும் குணப்படுத்த முடியாது என மருத்துவர்கள் தீர்மானித்த நோய்களுக்கு எல்லாம் தீர்வு சொல்லி ஆச்சரியப்படுத்துகிறது. ஏஐ டூல்களை சரியாக கையாளத் தெரிந்தால் நாம் தான் ராஜா. அந்த அளவுக்கு அசாத்தியங்களை செய்யக் கூடியதாக இருக்கிறது. வருங்காலத்தில் ஏஐ இன்றி அமையாது உலகு என குறளை மாற்றி சொல்லும் அளவுக்கு அதன் தேவை இருக்கும். அதில் டேட்டாக்களை தவறாக பயன்படுத்துதல் என்ற ஆபத்தும் இருக்கிறது. அதனால் அதனை எச்சரிக்கையுன் பயன்படுத்துவது அவசியம்.

ஏஐ ஆல் பலர் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் உணவு  டெலிவரி செய்யும் நிறுவனமான ஜொமேட்டோ அதன் வாடிக்கையாளர் சேவை மையத்தில் ஏஐ வருகையால் சமீபத்தில் 800 பேரை வேலையை விட்டு நீக்கியிருக்கிறது. இது மற்ற நிறுவனங்களில் தொடர்ந்து வருகிறது. மேலும் கிப்லி இமேஜ் போன்ற மனிதர்களின் முயற்சியில் உருவானவற்றை ஜிப்லி எளிதில் செய்து முடிப்பது கலைஞர்களுக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்படி பிரச்னைகள் ஒருபுறம் இருந்தாலும் பல அசாதரமான செயல்களையும் ஏஐ செய்துவருகிறது. இந்த நிலையில், இந்த நிலையில் கருப்பு வெள்ளை புகைப்படங்களை வண்ண படங்களாக மாற்றுவது சாட்ஜிபிடியினால் எளிதாக மாறியிருக்கிறது. முன்பெல்லாம் கருப்பு வெள்ளை புகைப்படங்களை வண்ண படங்களாக மாற்ற போட்டோ ஸ்டுடியோவுக்கு சென்று நீண்ட நாட்களுக்கு காத்திருக்க வேண்டும். அதற்கு குறிப்பிட்ட தொகையை செலவு செய்ய வேண்டும். இந்த நிலையில் சாட்ஜிபிடி நொடிகளில் நமது படங்களை ஏஐ டூல்களாக மாற்றித் தருகிறது. அதனை எப்படி மாற்றுவது என இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

கருப்பு வெள்ளை படங்களை கலர் படங்களாக மாற்றுவது எப்படி?

முதலில் சாட்ஜிபிடி மொபைல் ஆப்பிற்கோ அல்லது வெப்சைட்டிற்கோ செல்ல வேண்டும். பின் அதன் சாட்டில் உங்கள் கருப்பு, வெள்ளை புகைப்படத்தை பதிவேற்றுங்கள். Drag and drop செய்தாலே போதும். புகைப்படத்தை அப்லோட் செய்த பிறகு,  Can you colorize this black and white photo? என கேளுங்கள். அல்லது தமிழில் இந்த புகைப்படத்தில் நிறம் சேர்க்க முடியுமா? என்று கேட்டால் போதும். Make the colors warmer, Add a vintage look , Enhance the sky color என்று உங்களுக்கு தேவையான மாற்றங்களை கேளுங்கள். போட்டோவின் தரத்தை அதிகப்படுத்தி கேளுங்கள் என்றும் சொல்லலாம். இதன் மூலம் உங்கள் கருப்பு வெள்ளை போட்டோவை வண்ண புகைப்படமாக மாற்றலாம்.

2026 சட்டமன்ற தேர்தலில் யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் - நயினார்
2026 சட்டமன்ற தேர்தலில் யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் - நயினார்...
வெயிலும் மழையும் தொடரும் – வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை
வெயிலும் மழையும் தொடரும் – வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை...
எலுமிச்சையை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? ஆச்சரிய தகவல்!
எலுமிச்சையை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? ஆச்சரிய தகவல்!...
சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!
சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!...
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி...
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்...
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!...
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!...
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?...
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?...
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!...