Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வீட்டுக்கு ஏசி வாங்கப்போறீங்களா? எப்படி தேர்ந்தெடுப்பது?

AC Buying Tips: அறையின் அளவு, மின்சார சேமிப்பு திறன், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் பட்ஜெட் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த ஏசிகளை தேர்வு செயவது அவசியம். மேலும் 5 ஸ்டார் ரேட்டிங், இன்வெர்டர் ஏசி என உங்கள் வசதிக்கு ஏற்ப சிறந்த ஏசிக்களை தேர்வு செய்வது எப்படி என இந்தப் பதிவில் பார்க்கலாம்.

வீட்டுக்கு ஏசி வாங்கப்போறீங்களா? எப்படி தேர்ந்தெடுப்பது?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 26 Apr 2025 18:52 PM

கோடைகாலத்தில் ஏசி இல்லாமல் சமாளிப்பது மிகவும் கடினம். வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க சரியான ஏர் கண்டிஷனரை (Air Conditioner) தேர்வு செய்வது முக்கியம். பல்வேறு சிறப்பம்சங்களுடன் பல்வேறு வகையான ஏசிக்கள் சந்தைகளில் கிடைக்கின்றன. நம் பட்ஜெட் மற்றும் நம் தேவைக்கு ஏற்ப அதில் ஒன்றை தேர்வு செய்வது கடினமானதாக இருக்கலாம். பொதுவாக ஏசிகளில் பல வகைகள் இருக்கின்றன. அறையின் அளவு, மின்சார பயன்பாடு, தொழில்நுட்ப அம்சங்கள், மற்றும் உங்கள் பட்ஜெட் (Budget) போன்றவற்றைக் கவனித்தாலே, நீண்ட நாட்களுக்குத் தேவையான சிறந்த ஏசியை எளிதில் தேர்வு செய்யலாம்.  உங்கள் வீட்டு அளவுக்கும், பயன்பாட்டிற்கும் ஏற்ற சிறந்த ஏசியை தேர்வு செய்ய தேவையான முக்கியமான அம்சங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

சிறந்த ஏசிகளை தேர்ந்தெடுப்பது எப்படி?

  • AC-யின் திறன் உங்கள் அறையின் பரப்பளவைப் பொறுத்தது. பொதுவாக 100 முதல் 120 சதுர அடி உள்ள ஒரு அறைக்கு 1 டன் ஏசி சரியாக இருக்கும். அதே போல 120 முதல் 180 சதுர அடி உள்ள ஒரு அறைக்கு 1.5 டன் ஏசி சரியாக இருக்கும். அதே போல 180 முதல் 240 சதுர அடி உள்ள ஒரு அறைக்கு 2 டன் ஏசி சரியாக இருக்கும்.
  • ஏசியைத் தேர்ந்தெடுக்கும் முன் அதன் வகைகளை தெரிந்து கொள்ளவேண்டும்.ஸ்பிலிட் ஏசி அமைதியான செயல்பாடும் சிறந்த குளிர்ச்சி விரும்புபவர்களுக்கு ஏற்றது. அதே போல விண்டோ ஏசியை குறைந்த செலவில் நிறுவ முடியும். ஆனால் சற்று சத்தமாக இருக்கும். போர்டபிள் ஏசியை பொறுத்தவரை இடம் மாற்றி அமைக்க கூடியது. ஆனால் குறைந்த செயல் திறன் மட்டுமே அளிக்கும். மேலும் VRF/VRV சிஸ்டம் போன்றவை பெரிய கட்டிடங்களுக்கு ஏற்றது.
  • உயர் ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசிக்கள் குறைந்த மின்சாரம் பயன்படுத்தி அதிக திறனுடன் செயல்படுகின்றன. 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசிக்கள் அதிக மின்சார சேமிப்பை வழங்குகின்றன
  • இன்வெர்டர் ஏசியானது கம்ப்ரெசர் வேகத்தை மாற்றி, மின்சார சேமிப்பை அதிகரிக்கிறது. நான் இன்வெர்டர் ஏசியானது நிலையான வேகத்தில் செயல்படுவதுடன் அதிக மின்சாரத்தையும் பயன்படுத்துகிறது. தொடர்ச்சியான பயன்பாட்டிற்கு இன்வெர்டர் AC சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது.
  • சில ஏசிக்கள் ஏர் பியூரிஃபயர் மற்றும் வாய்ஸ் கன்ட்ரோல் போன்ற கூடுதல் அம்சங்களுடன் வருகின்றன.
  • ஏசியின் செயல்திறன் என்பது அதனை சரியாக பொறுத்துவது மற்றும் பராமரிப்பைப் பொறுத்தது. அனுபவமுள்ள தொழில்நுட்ப நிபுணர்களை அணுகி, முறையான நிறுவலை உறுதி செய்யுங்கள். ஆண்டுதோறும் பராமரிப்பு சேவையை பெறுவது முக்கியம்.
  • நம்பகமான பிராண்டுகளை தேர்வு செய்யுங்கள். LG, Samsung, Daikin, Voltas, Blue Star போன்ற பிராண்டுகள் நல்ல வாடிக்கையாளர் சேவையை வழங்குகின்றன.
  • உங்கள் பட்ஜெட்டைப் பொறுத்து AC தேர்வு செய்யுங்கள். பல நிறுவனங்கள் மாதத்தவணை வசதிகளை வழங்குகின்றன, இதை பயன்படுத்தி உங்கள் செலவுகளை குறைக்கலாம்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)

இளநீர் டீ குடிச்சிருக்கீங்களா ? வைரலாகும் வீடியோ !
இளநீர் டீ குடிச்சிருக்கீங்களா ? வைரலாகும் வீடியோ !...
அமெரிக்க மாணவர்களுக்கு Gemini Advanced இலவசம்!
அமெரிக்க மாணவர்களுக்கு Gemini Advanced இலவசம்!...
166 பயணிகள்.. சென்னை விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு!
166 பயணிகள்.. சென்னை விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு!...
பிஎஃப் பணத்தை எத்தனை முறை எடுக்கலாம் - விதிகள் கூறுவது என்ன?
பிஎஃப் பணத்தை எத்தனை முறை எடுக்கலாம் - விதிகள் கூறுவது என்ன?...
செவ்வாய் மற்றும் சந்திரன் ராசி மாற்றம்.. பணமழை கொட்டும் ராசிகள்!
செவ்வாய் மற்றும் சந்திரன் ராசி மாற்றம்.. பணமழை கொட்டும் ராசிகள்!...
வயதான தலைவர்களால் இளைஞர் சலிப்படைந்துள்ளனர் - ஆதவ் அர்ஜுனா!
வயதான தலைவர்களால் இளைஞர் சலிப்படைந்துள்ளனர் - ஆதவ் அர்ஜுனா!...
கை, கால்கள் சுண்டி இழுக்கும்.. கால்சியம் குறைபாடு பிரச்னைகள்!
கை, கால்கள் சுண்டி இழுக்கும்.. கால்சியம் குறைபாடு பிரச்னைகள்!...
பயணத்தின் போது வெப்ப அலை தாக்கத்திலிருந்து பாதுகாக்க எளிய வழிகள்!
பயணத்தின் போது வெப்ப அலை தாக்கத்திலிருந்து பாதுகாக்க எளிய வழிகள்!...
இந்தியாதான் டாப்.. 6 விஷயங்களில் பின்தங்கும் பாகிஸ்தான்!
இந்தியாதான் டாப்.. 6 விஷயங்களில் பின்தங்கும் பாகிஸ்தான்!...
அனிருத்தின் குரலில்.. நானியின் ஹிட் 3 படத்தின் அடுத்த பாடல்!
அனிருத்தின் குரலில்.. நானியின் ஹிட் 3 படத்தின் அடுத்த பாடல்!...
பிருத்விராஜின் இந்த மலையாள க்ரைம் திரில்லர் படத்தை பாருங்கள்!
பிருத்விராஜின் இந்த மலையாள க்ரைம் திரில்லர் படத்தை பாருங்கள்!...