Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நமது ஸ்மார்ட்போனில் போட்டோ லொகேஷனை பார்ப்பது எப்படி ?

Track photo locations: இப்போது ஸ்மார்ட்போன்கள் நம்முடைய வாழ்க்கையை மிகவும் எளிமையாக்கி விட்டன. புகைப்படங்கள் எடுக்க மட்டுமல்லாமல், அந்த புகைப்படங்கள் எங்கே எடுத்தது என்பதையும் மிகச் சரியாக பதிவு செய்கின்றன. இதை நீங்கள் எப்படி காணலாம் என்று தெரிந்துகொள்வதற்கான வழிமுறைகள் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது.

நமது ஸ்மார்ட்போனில் போட்டோ லொகேஷனை பார்ப்பது எப்படி ?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 15 Apr 2025 21:51 PM

இன்றைய நவீன வழிகளில் ஸ்மார்ட்போன்கள் (Smartphones) நம் அன்றாட வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தகவல் தொடர்பு கருவியாக மட்டும் அல்லாமல் முக்கிய நிகழ்வுகளை போட்டோ எடுப்பது, வீடியோ எடுப்பது என உலகத்தையே நம் உள்ளங்கையில் கொண்டுவந்திருக்கிறது. புகைப்படங்கள் என்பது நம் வாழ்க்கையின் பல முக்கிய பக்கங்களை திரும்பி பார்க்கும் ஒரு கருவி. ஒரு புகைப்படம் நம்மை அது எடுக்கப்பட்ட காலத்திற்கே அழைத்து செல்லும். ஆனால் ஸ்மார்ட்போன்களின் வருகைக்கு பிறகு வகை தொகை தெரியாமல் புகைப்படங்கள் எடுக்கிறோம். குறிப்பாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்பவர்கள் தங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் நியாகர்த்தமாக புகைப்படங்கள் எடுக்கிறார்கள். சில நேரங்களில் ஒரு போட்டோவை எங்கே எப்பொழுது எடுத்தோம் என்பது கூட தெரியாத அளவுக்கு நாம் புகைப்படங்களை சேமித்து வைக்கிறோம். கூகுள் போட்டோஸ் (Google Photos) போன்ற செயலிகள் ஒவ்வொரு வருடமும் நாம் எடுக்கும் புகைப்படங்களை அடிக்கடி நினைவுபடுத்துகின்றன.

ஆனால் கூகுள் போட்டோஸில் இணைக்கப்படவில்லை என்றால் நாம் போட்டோ எடுத்த இடம் போன்ற முக்கிய தகவல்கள் தெரியாமல் போய்விடும். பல நேரம் போட்டோ எடுக்கும் போது நம்முடன் இருந்த நண்பர்களுக்கு அனுப்பி கேட்க வேண்டி நிலை இருக்கிறது. இந்த கட்டுரையில் போனில் உள்ள போட்டோக்களின் லொகேஷனை தெரிந்துகொள்வது எப்படி என பார்க்கலாம்.

புகைப்படத்தின் லொகேஷனை கண்டுபிடிப்பது எப்படி?

புகைப்படம் எடுக்கும் போது, அந்த இடத்தின் சரியான ஜிபிஎஸ் மூலம் லொகேஷன்களை பதிவு செய்வது ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சமாக இருக்கிறது. இது முக்கியமாக பயணங்கள், நிகழ்வுகள், அல்லது அலுவலகங்களில் எடுத்த புகைப்படங்களை எங்கு எடுத்தோம் என்பதைக் கண்டறிய உதவுகிறது. Google Photos அல்லது உங்கள் போனில் உள்ள கேலரியில் அந்த புகைப்படத்தைத் தேர்வு செய்து ‘Info’ அல்லது ‘Details’ என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுங்கள். அங்கு “Location” பகுதியில், அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட இடம் துல்லியமாகத் தெரியும். இது Android மற்றும் iOS இரண்டிலும் இந்த வசதி இருக்கும்.

லொகேஷனை தெரிந்துகொள்வதில் உள்ள முக்கியத்துவம்

இந்த தகவல்கள் எல்லாம் புகைப்படத்தின் செட்டிங்ஸ் என்ற பகுதியில்தான் இருக்கும். இந்த வகை தகவல்கள் உங்கள் புகைப்படங்களை சரியாக வகைப்படுத்தவும், நினைவுகளைப் பாதுகாக்கவும் பெரிதும் உதவுகின்றன. இதனால், இப்போது உங்கள் புகைப்படங்களை நீங்கள் எப்போது எடுத்து, எங்கே எடுத்தீர்கள் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டியதை உங்கள் போன் எளிமையாக்குகிறது.

இன்றைய ஸ்மார்ட்போன்களில் உள்ள லொகேஷனை குறிப்பிடும் வசதி, புகைப்படத்தை எங்கு எடுத்தது என்பதை எளிதாக கண்டுபிடிக்க உதவுகிறது. Google Photos மற்றும் iCloud போன்ற ஆப்களில் அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட இடம் பதிவு செய்யப்படுகிறது. இதன் மூலம் பயணங்கள், முக்கிய நிகழ்வுகள் மற்றும் ஒவ்வொரு புகைப்படத்தின் நேரம் மற்றும் இடம் பற்றி நம்பகமான தகவல்களை காணலாம். இது நினைவுகளை பாதுகாக்கும் ஒரு சிறந்த வழியாகும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)

பாஜகவுடன் கூட்டணி ஆட்சியா? இபிஎஸ் பரபரப்பு பதில்!
பாஜகவுடன் கூட்டணி ஆட்சியா? இபிஎஸ் பரபரப்பு பதில்!...
உண்மையான கராத்தே பாபு இவரா? நடிகர் ரவி மோகன் சொன்ன கலகல சம்பவம்!
உண்மையான கராத்தே பாபு இவரா? நடிகர் ரவி மோகன் சொன்ன கலகல சம்பவம்!...
இனி தமிழில் தான் கையெழுத்து... அரசு அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு
இனி தமிழில் தான் கையெழுத்து... அரசு அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு...
ரேஷன் கடையில் ஒரே நாளில் அனைத்து பொருளும் கிடைக்குமா?
ரேஷன் கடையில் ஒரே நாளில் அனைத்து பொருளும் கிடைக்குமா?...
வெளுக்கப்போகும் தென்மேற்கு பருவமழை.. தமிழகத்தில் எப்படி?
வெளுக்கப்போகும் தென்மேற்கு பருவமழை.. தமிழகத்தில் எப்படி?...
கோலிவுட் சினிமாவில் வரிசைக்கட்டும் படங்கள்...
கோலிவுட் சினிமாவில் வரிசைக்கட்டும் படங்கள்......
பள்ளி கல்வித்துறை சார்பாக ஏப் 24-இல் முக்கிய அறிவிப்பு: அமைச்சர்
பள்ளி கல்வித்துறை சார்பாக ஏப் 24-இல் முக்கிய அறிவிப்பு: அமைச்சர்...
குழந்தை கடத்தல்.. முக்கிய உத்தரவை போட்ட உச்ச நீதிமன்றம்
குழந்தை கடத்தல்.. முக்கிய உத்தரவை போட்ட உச்ச நீதிமன்றம்...
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்க விஜய் சேதுபதி சம்மதித்தது ஏன்
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்க விஜய் சேதுபதி சம்மதித்தது ஏன்...
காலையிலேயே அதிர்ச்சி.. ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்
காலையிலேயே அதிர்ச்சி.. ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்...
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் பரபரப்பு... நடந்தது என்ன?
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் பரபரப்பு... நடந்தது என்ன?...