WhatsApp: குரல் செய்திகளை எழுத்துக்களாக மாற்றும் “Voice Note Transcript”.. பயன்படுத்துவது எப்படி?

WhatsApp Voice Note Transcript | வாட்ஸ்அப் செயலியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு "WhatsApp Voice Note Transcript" அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனை பயன்படுத்தி குரல் செய்திகளை எழுத்துக்களாக மாற்றம் செய்துக்கொள்ளலாம்.

WhatsApp: குரல் செய்திகளை எழுத்துக்களாக மாற்றும் Voice Note Transcript.. பயன்படுத்துவது எப்படி?

மாதிரி புகைப்படம்

Published: 

21 Mar 2025 15:04 PM

தொழில்நுட்ப வளர்ச்சியின் (Technology Development) காரணமாக, தொலைத்தொடர்புக்காக (Telecommunication) நாளுக்கு நாள் பல புதிய செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. என்னதான் பல புதிய செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டாலும் மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலிக்கு பயனர்கள் பட்டியல் அதிகம். உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த செயலியை பயன்படுத்துகின்றன.

வாட்ஸ்அப்பில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட “Voice Note Transcript” அம்சம் 

வாட்ஸ்அப் செயலி பயன்படுத்துவதற்கு மிக சுலபமாகவும், பல பயனுள்ள அம்சங்களை கொண்டிருப்பதாலும் ஏராளமான மக்கள் தகவல் பரிமாற்றம் செயவ்தற்காக அதனை பயன்படுத்துகின்றனர். ஏற்கனவே பல பயனுள்ள அம்சங்களை செயல்படுத்தி வரும் வாட்ஸ்அப், பயனர்களின் நலனுக்கான மேலும் மேலும் புதிய அம்சங்களை அறிமுக செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட அம்சம் தான் வாய்ஸ் நோட் டிரான்ஸ்கிரிப்ட் (Voice Note Transcript).

இந்த அம்சத்தை பயன்படுத்தி குரல் செய்திகளை எழுத்துக்களாக மாற்றம் செய்துக்கொள்ளலாம். இது மிகவும் பயனுள்ள அம்சமாக கருதப்படும் நிலையில், ஏராளமான பயனர்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், வாட்ஸ்அப் செயலியில் உள்ள இந்த வாய்ஸ் நோட் டிரான்ஸ்கிரிப்ட் அம்சத்தை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாட்ஸ்அப்பின் “Voice Note Transcript” அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

  1. அதற்கு முதலில் வாட்ஸ்அப் செயலிக்குள் நுழைய வேண்டும். அங்கு மேலே வலது பக்கத்தில் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்து செட்டிங்க்ஸ் (Settings) அம்சத்திற்குள் நுழைய வேண்டும்.
  2. பிறகு செட்டிங்ஸில் இருக்கும் சாட் (Chat) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  3. அதில் இருக்கும் வாய்ஸ் நோட் டிரான்ஸ்கிரிப்ட் (Voice Note Transcript) என்ற அம்சத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  4. பிறகு நீங்கள் எந்த மொழியில் மொழிப்பெயர்க்க விரும்புகிறீர்களோ அந்த மொழியை தேர்வு செய்ய வேண்டும்.
  5. தற்போதைய நிலவரம் படி, அந்த ஆப்ஷனில் வெறும் 4 மொழிகள் மட்டுமே உள்ளன. எனவே, அந்த 4 மொழிகளில் நீங்கள் எந்த மொழியில் மொழிப்பெயர்க்க விரும்புகிறீர்கள் என்பதனை தேர்வு செய்யுங்கள்.
  6. அந்த 4 மொழிகளில் ஆங்கிலம் உள்ளதால், நீங்கள் அதனை தேர்வு செய்யும் பட்சத்தில் உங்களால் மிக சுலபமாக மொழிப்பெயர்ப்பு செய்ய முடியும்.

மேற்குறிப்பிட்ட நடைமுறைகளை பின்பற்றி, வாய்ஸ் நோட் டிட்ரான்ஸ்கிரிப்ட் அம்சம் மூலம் மிக சுலபமாக மொழிப்பெயர்புன் செய்துக்கொள்ளலாம். முக்கியமான பணிகளின் போதோ, எங்கேனும் பயணம் செய்து கொண்டிருக்கும் போதோ, அல்லது இரைச்சல் மிகிந்த பகுதிகளில் இருக்கும் போதோ குரல் செய்திகளை கேட்க முடியாத சூழல் ஏற்படும். எனவே, அத்தகைய சூழல்களில் இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதுன் குற்ப்பிடத்தக்கது.