Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இன்காக்னிட்டோ டேபில் “Search History”-ஐ டெலிட் செய்வது எப்படி?.. இந்த சிம்பிள் ஸ்டெப்ஸ்களை பின்பற்றுங்கள்!

Google Chrome Incognito Search | கூகுள் குரோமில் உள்ள இன்காக்னிட்டோ டேபில் தேடப்படும் தகவல்களின் விவரங்களை எவ்வாறு டெலிட் செய்வது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் தனியுரை பாதுகாப்பாக இருக்கும்.

இன்காக்னிட்டோ டேபில் “Search History”-ஐ டெலிட் செய்வது எப்படி?.. இந்த சிம்பிள் ஸ்டெப்ஸ்களை பின்பற்றுங்கள்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 28 Mar 2025 18:43 PM

ஏதேனும் ஒரு விஷயம் குறித்தோ, கேள்விகள் குறித்தோ நொடி பொழுதில் விடைகளை தெரிந்துக்கொள்வதற்காக பல தேடுபொறி (Search Engine) செயலிகள் மற்றும் தளங்கள் உள்ளன. முன்பெல்லாம் ஏதேனும் தகவல் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால், அந்த துறையை சார்ந்த நிபுணர்கள், புத்தகங்கள் மூலம் தான் தெரிந்துக்கொள்ள முடியும். ஆனால், தற்போது அதற்கான அவசியல் எல்லாம் இல்லை. இந்த தேடுபொறிகள் மூலம் மிக எளிதாக எந்த விதமான தகவல் என்றாலும் அதனை சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம்.

நொடி பொழுதில் தகவல்களை வழங்கும் கூகுள்

அந்த வகையில் உலகம் முழுவதும் ஏராளமான மக்களால் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான தேடுபொறி தான் கூகுள் (Google). கூகுள் நிறுவனத்தின் தேடுபொறி தகவல்களை தேடுவதற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ள நிலையில், ஏராளமான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் இதனை பயன்படுத்துகின்றனர். தகவல்களை தெரிந்துக்கொள்வது மட்டுமன்றி, சக மனிதர்களிடம் கேட்க முடியாத சில தனிப்பட்ட தகவல்களையும் பெரும்பாலான மக்கள் இந்த தேடுபொறி மூலம் தேடுகின்றனர்.

அவ்வாறு ரகசிய மற்றும் தனிப்பட்ட தகவல்களை தேடும் நபர்கள் இன்காக்னிட்டோ டேபை (Incognito Tab) பயன்படுத்துகின்றனர். ஆனால், அதனை பயன்படுத்தி ஏதேனும் தகவல்களை தேடும்போது அந்த விவரங்களை வேறு யேரேனும் பார்த்து விடுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், உங்கள் தேடுதல் விவரங்களை யாரும் பார்க்க கூடாது என்றால், அதனை எப்படி அழிப்பது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இன்காக்னிடோ டேபில் “Search History”-ஐ டெலிட் செய்வது எப்படி?

கூகுள் க்ரோமில் (Google Chrome) தேடுதல் விவரங்களை டெலிட் செய்வதை போலவே, கூகுளின் இன்காக்னிட்டோ டேபிலும் தேடுதல் விவரங்களை மிக எளிதாக டெலிட் செய்யலாம். இந்த நிலையில், அதனை எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

  1. அதற்கு முதலில் உங்கள் கூகுள் குரோம் தேடு பொறியில் செட்டிங்க்ஸை (Setting) திறக்க வேண்டும்.
  2. அதில் பிரைவசி (Privacy) என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  3. பிறகு அதில் இருக்கும் கிளியர் பிரவுசிங் டேட்டா  (Clear Browsing Data) என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
  4. பிறகு நீங்கள் எந்த காலக்கட்டத்தில் உள்ள தேடுதல் விவரங்களை அழிக்க விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  5. அதன் பிறகு கிளியர் டேட்டா (Clear Data) என்ற ஆப்ஷனை தேர்வு செய்து தரவுகளை டெலிட் செய்துக்கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறைகளை பின்பற்றி மிகவும் சுலபமாக உங்கள் கூகுள் க்ரோமில், இன்காக்னிட்டோ டேபில் தேடப்படும் தகவல்களின் தரவுகளை மிக சுலபமாக டெலிட் செய்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூயார்க்கா இது? நம்ம ஊர் பரவால போல இருக்கே?! வைரலாகும் வீடியோ
நியூயார்க்கா இது? நம்ம ஊர் பரவால போல இருக்கே?! வைரலாகும் வீடியோ...
பஹல்காம் தாக்குதலில் 10 பேர் பலி - அதிகாரப்பூர்வ தகவல்
பஹல்காம் தாக்குதலில் 10 பேர் பலி - அதிகாரப்பூர்வ தகவல்...
கலக்கிய கே.எல்.ராகுல்.. லக்னோவை வீழ்த்தி டெல்லி அசத்தல்!
கலக்கிய கே.எல்.ராகுல்.. லக்னோவை வீழ்த்தி டெல்லி அசத்தல்!...
மதுரை அருகே மினி குற்றாலம் - குட்லாம்பட்டி அருவி தெரியுமா?
மதுரை அருகே மினி குற்றாலம் - குட்லாம்பட்டி அருவி தெரியுமா?...
வீடியோ கிரியேட்டர்களுக்கு ஏற்ற விவோ எக்200எஸ் - என்ன ஸ்பெஷல்?
வீடியோ கிரியேட்டர்களுக்கு ஏற்ற விவோ எக்200எஸ் - என்ன ஸ்பெஷல்?...
நீதிக்கட்சியின் நீட்சிதான் இந்த ஆட்சி.. CM ஸ்டாலின் பெருமிதம்!
நீதிக்கட்சியின் நீட்சிதான் இந்த ஆட்சி.. CM ஸ்டாலின் பெருமிதம்!...
இரு மாநில திருமணம்.. பிரிட்டிஷ் இன்ஃபுளூயன்சர் வைரல் வீடியோ!
இரு மாநில திருமணம்.. பிரிட்டிஷ் இன்ஃபுளூயன்சர் வைரல் வீடியோ!...
அஜித் குட் பேட் அக்லி படத்திலிருந்து வெளியான God Bless U வீடியோ!
அஜித் குட் பேட் அக்லி படத்திலிருந்து வெளியான God Bless U வீடியோ!...
பஹல்காமில் மோசமடையும் நிலைமை! 30க்கு அதிகமானோர் உயிரிழந்தாக தகவல்
பஹல்காமில் மோசமடையும் நிலைமை! 30க்கு அதிகமானோர் உயிரிழந்தாக தகவல்...
ஸ்விகி, ஜொமேட்டோ ஊழியர்களுக்கு பென்சன்? புதிய திட்டம்!
ஸ்விகி, ஜொமேட்டோ ஊழியர்களுக்கு பென்சன்? புதிய திட்டம்!...
சூரிய ஒளிக்கும் கல்லீரல் நோய் எதிர்ப்புக்கும் தொடர்புள்ளதா?
சூரிய ஒளிக்கும் கல்லீரல் நோய் எதிர்ப்புக்கும் தொடர்புள்ளதா?...