இனி வாட்ஸ்அப்பிலும் பாடல்களை ஸ்டேட்டஸாக வைக்கலாம் – எப்படி தெரியுமா?
WhatsApp music feature: வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் உங்களுக்கு பிடித்த பாடலை சேர்க்கும் புதிய வசதி தற்போது கிடைக்கிறது. இதனை பயன்படுத்தி நீங்கள் உங்கள் உணர்வுகளை, நாளின் சிறப்பை உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் பகிர முடியும். வாட்ஸ் ஸ்டேட்டஸில் பாடல்களை எப்படி இணைப்பது என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
இன்றைய சமூக ஊடக உலகில் (Social Media), வாட்ஸ்அப் (WhatsApp) ஸ்டேட்டஸ் என்பது நம் உணர்வுகளை மற்றவர்களுடன் பகிரும் ஒரு முக்கியமான வழியாக மாறியுள்ளன. மக்கள் தங்கள் வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வாயிலாக தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தெரியப்படுத்தி வருகின்றனர். மேலும் சமூக்தின் முக்கிய நிகழ்வுகள் குறித்து கருத்து சொல்லும் இடமாகவும் வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ்கள் திகழ்கின்றன. மேலும் ஒரு சிலர் தங்களுக்கு பிடித்த பாடல்களை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். இப்படியான பாடல்களை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைப்பதற்கு தனியாக யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பேஜ்கள் செயல்பட்டுவருகின்றன. மக்கள் அதில் தங்களுக்கு விருப்பமானவற்றை டவுன்லோடு செய்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்து வருகின்றனர்.
இனி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் பாடல்கள் வைப்பதற்கு தனியாக மெனக்கெட தேவையில்லை. அதற்கான அப்டேட்டை வாட்ஸ்அப் கொண்டு வந்திருக்கிறது. இனி வாட்ஸ்அப்பில் உங்களுக்கு பிடித்த பாடலை ஸ்டேட்டஸாக வைத்து என்றால், அதை மறக்கமுடியாத அனுபவமாக மாற்றலாம். கீழே உள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் இசை ரசனையை நண்பர்களுடன் பகிரலாம்.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பாடல்களை இணைப்பது எப்படி?
-
வாட்ஸ்அப் செயலியைத் திறந்து ‘Updates’ பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.
-
‘Add Status’ எனக் கூறும் கேமரா ஐகானை தட்டவும்.
-
உங்கள் கேலரியிலிருந்து ஒரு புகைப்படத்தைத் தேர்வுசெய்யவும் அல்லது புதிதாக ஒரு புகைப்படத்தை எடுக்கவும்.
-
மேல் பகுதியிலுள்ள புதிய ‘Music’ ஐகானை தட்டவும்.
-
அதில் உங்களுக்கு விருப்பமான பாடலை தேர்வு செய்து, நீங்கள் ஸ்டேட்டஸில் காட்ட விரும்பும் பகுதியை தேர்ந்தெடுக்கவும்.
போட்டோ மட்டும் வைக்கும் ஸ்டேட்டஸுக்கு 15 வினாடிகள் வரை, வீடியோ ஸ்டேட்டஸுக்கு 60 வினாடிகள் வரை பாடல்களை பயன்படுத்தலாம். பாடலை சேர்த்த பிறகு, ஸ்டேட்டஸை பகிரலாம். இந்த வசதியில் உள்ள பாடல்கள் அனைத்தும் உரிமம் பெற்ற பாடல்கள் (licensed tracks). எனவே, சில பாடல்கள் கிடைக்காமல் இருக்கலாம். இதன் காரணமாக பயனர்கள் தங்களது சொந்த பாடல்களை பதிவேற்ற முடியாது. விரைவில் அனைத்து பாடல்களும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது வாட்ஸ்அப்பின் ஸ்டேட்டஸ் பகுதியில் பாடல்களை இணைக்கும் வசதி மக்களுக்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது. இனி நம் மனநிலையை, உணர்வுகளை அல்லது நாளின் சிறப்பை சொல்ல வார்த்தைகள் தேவையில்லை, ஒரு பாடல் போதும். இந்த புதிய வசதியை பயன்படுத்துவது மிகவும் எளிமையானதுடன், உங்கள் ஸ்டேட்டஸ்களை ரசிக்கும்படியாக மாற்றும் திறன் கொண்டது.
இதன் மூலம் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களைப் போலவே பயனர்களுக்கு ஆடியோ அனுபவத்தை வழங்க முயற்சிக்கிறது. தற்போதைக்கு, நமது போனின் லைப்ரரியில் இருந்து சொந்த பாடல்களைச் சேர்க்க முடியாதபோதும், லைசென்ஸ் பெற்ற வாட்ஸ்அப் மியூசிக் லைப்ரரியில் இருந்து ஏராளமான பாடல்களை தேர்வு செய்யும் வசதி உள்ளது.