எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.32,000 வரை விலை குறைத்த ஹீரோ – என்ன ஸ்பெஷல்?
Hero cuts Vida V2 prices : ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது விடா வி2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு அதிரடியாக ரூ.32,000 வரை விலை குறைப்பை அறிவித்துள்ளது. இந்த மாடல்களில் உள்ள பேட்டரி வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பெட்ரோல் (Petrol) , டீசல் விலை உயர்வு, காற்று மாசுபாடு போன்ற காரணங்களுக்காக இந்தியாவில் பலரும் எலக்ட்ரிக் பைக்குகள் (Electric Bikes) மற்றும் கார்களைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கியிருக்கின்றனர். ஓலா, ஏதர், டிவிஎஸ், ஹீரோ போன்ற நிறுவனங்கள் இந்த துறையில் கால் பதித்து மக்களிடையே பிரபலமாகி வருகின்றன. தினமும் குறைவான தூரமே பயணிப்பவர்கள், காற்று மாசுபாட்டை குறைக்க விரும்புபவர்கள், வாகன பராமரிப்பை குறைக்க விரும்புபவர்களுக்கு எலக்ட்ரிக் பைக் சரியான தேர்வாக கருதப்படுகின்றன. இந்த நிலையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் விடா வி2 (Hero Vida V2) விலைகளில் பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு காரணமாக, டிவிஎஸ், பஜாஜ் போன்ற பிற பிரபல எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விட, விடா வி2 இப்போது மிகவும் மலிவாக கிடைக்கிறது. இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் இது புதிய போட்டியை உருவாக்கியுள்ளது.
விடா வி2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை குறைப்பு விவரம்
ஹீரோ மொட்டோகார்ப் நிறுவனம் தயாரிக்கும் விடா வி2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை குறைவால் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் மூன்று வெவ்வேறு வெரியண்ட்களிலும் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. ஹீரோ நிறுவனத்தின் விடா வி2 லைட் (Vida V2 Lite) மாடலில் ரூ.22,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் விடா வி2 ப்ளஸ் (Vida V2 Plus) மாடலில் ரூ.32,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இது மூன்று மாடல்களில் மிக அதிகமான தள்ளுபடியை கொண்டது. அதே போல விடா வி2 புரோ (Vida V2 Pro) மாடலில் ரூ.14,700 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
பேட்டரிகளின் விவரம்
பேட்டரி மற்றும் ரேஞ்ச் விவரங்களைப் பார்க்கும்போது, விடா வி2 லைட் மாடல் 2.2 kWh திறன் கொண்ட பேட்டரியுடன் வருகிறது. இதனால், ஒரு முறை சார்ஜ் செய்தால் 94 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய முடியும். மேலும் அதிகபட்சமாக மணிக்கு 69 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். விடா வி2 பிளஸ் மாடல் 3.44 kWh பேட்டரியுடன் கிடைக்கிறது. இது 143 கிமீ வரை பயணிக்கக்கூடிய சக்தியைக் கொண்டது. இதில் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக மணிக்கு 85 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். விடா வி2 புரோ மாடலில் 3.94 kWh திறன் கொண்ட பெரிய பேட்டரி உள்ளது. இதில் ஒருமுறை சார்ஜி செய்தால் 165 கிமீ வரை பயணிக்க முடியும். மேலும் இதில் அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும்.
விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் அதன் சிறப்பம்சங்களும் விடா வி2 சீரிஸை இந்திய சந்தையில் மிகவும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விலை குறைப்பு மட்டுமின்றி ரேஞ்ச் மற்றும் ஸ்பீடிலும் இது மக்களுக்குப் பயன்படக்கூடியதாக உள்ளது.