Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வாட்ஸ்அப் பழைய வெர்ஷன் யூஸ் பண்றீங்களா? காத்திருக்கும் ஆபத்து – மத்திய அரசு எச்சரிக்கை

Government Warns WhatsApp Users: வாட்ஸ்அப்பின் பழைய வெர்சனில் உள்ள சிக்கல்கள் காரணமாக அதனை ஹேக்கர்கள் தவறாக பயன்படுத்தக் கூடும் என்பதால் உடனே புது வெர்ஷனை அப்டேட் செய்ய வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கைவிடுத்திருக்கிறது. வாட்ஸ்அப்பில் உள்ள பிரச்னைகள் மற்றும் அதனை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வாட்ஸ்அப் பழைய வெர்ஷன் யூஸ் பண்றீங்களா? காத்திருக்கும் ஆபத்து – மத்திய அரசு எச்சரிக்கை
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 11 Apr 2025 16:22 PM

மத்திய அரசு வாட்ஸ்அப் (Whatsapp) பயனர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன் படி ஆண்ட்ராய்டு(Android) மற்றும் iOS ஆகியவற்றில் பயன்படுத்தப்படும்  v2.22.16.12 என்ற பழைய வாட்ஸ்அப் வெர்ஷனில் குறைபாடுகள் கண்டறியப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் ஹேக்கர்கள் உங்களுக்கு வீடியோ கால் செய்வதன் மூலமோ அல்லது சந்தேகத்திற்குரிய வீடியோ ஃபைல்களை அனுப்பவுதன் மூலமோ உங்களது கம்ப்யூட்டருக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியும் என எச்சரித்துள்ளது. மேலும் இதனைத் தடுக்க பயனர்கள் தங்களது வாட்ஸ் அப்பை சமீத்திய வெர்ஷனுக்கு உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும் எனவும் மத்தி அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தியன் கம்ப்யூட்டர் எம்ர்ஜென்சி ரெஸ்பான்ஸ் (CERT-In) அமைப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பாக வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பயன்படுத்துபவர்கள் பழைய வெர்ஷனை பயன்படுத்தினால் உடனடியாக அப்டேட் செய்யுமாறு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக தெரியாத எண்களில் இருந்து சந்தேகத்திற்கு குரிய மெசேஜ்கள் வந்தால் அதை திறக்க வேண்டாம் என எச்சரித்திருக்கிறது. அப்படி வரும் சந்தேகத்திற்குரிய பைல்கள் நமது டெஸ்க்டாப்பை சேதப்படுத்தவோ அல்லது தகவல்களை திருடவோ வாய்ப்பிருக்கிறது. வாட்ஸ்அப்பின் முந்தயை வெர்ஷனில் உள்ள குறைபாட்டை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனால் வாட்ஸ்அப்பை அவ்வப்போது அப்டேட் செய்து வைத்திருப்பது நல்லது.

வாட்ஸ்அப்பில் இருக்கும் ஆபத்துகள்

வாட்ஸ்அப் என்பது உலகளவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் செய்தி பரிமாற்ற செயலியாகும். இது மிகவும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. உறவுகள், நண்பர்களுடன் தொடர்புகொள்ள மட்டுமல்லாமல் வேலை சார்ந்தும் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதனால் அனைத்து முக்கிய தகவல்களையும் வாட்ஸ் அப் வாயிலாக பகிர்ந்து கொள்வதால் அதனை மிகவும் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். வாட்ஸ் அப் மூலம் சமீப காலமாக ஆன்லைன் கடன் மோசடிகள் போன்றவை நடைபெற்றுவருகின்றன. குறிப்பாக வயதானவர்களும் குழந்தைகளும் பயன்படுத்துவதால் அவர்களுக்கு வாட்ஸ்அப்பில் உள்ள சிக்கல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.

வாட்ஸ்அப்பை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

உங்களுக்கு தெரியாத எண்களில் இருந்து வரும் லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம். அதே போல, வீடியோ, போட்டோ ஆகியவற்றை கிளிக் செய்யாமல் இருப்பது நல்லது. வேலை தொடர்பாக நமது அலுவலக கம்ப்யூட்டர்களில் வாட்ஸ் அப் லாகின் செய்யப்பட்டிருந்தால் பணி முடிந்ததும் அதனை லாக் அவுட் செய்வது நல்லது. நமது புரொபைல் போட்டோ, லாஸ்ட் சீன் முடிந்தவற்றை நமது காண்டாக்ட்டில் இருப்பவர்கள் மட்டும் பார்க்குமாறு செட்டிங்ஸில் சென்று மாற்ற அமைக்கவும். மேலும் 2 ஸ்டெப் வெரிஃபிகேஷனை பயன்படுத்தவும். இது உங்கள் வாட்ஸ் அப் கணக்கை கூடுதலாக பாதுகாக்கும்.

 

கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா
கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா...
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!...
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!...
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?...
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை......
சென்னையில் கனமழை தொடரும்.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
சென்னையில் கனமழை தொடரும்.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!...
சம்மர் விடுமுறையை டெல்லியை சுற்றியும் கொண்டாடலாம் வாங்க..!
சம்மர் விடுமுறையை டெல்லியை சுற்றியும் கொண்டாடலாம் வாங்க..!...
நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!...
ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளதை உறுதி செய்த சிவராஜ்குமார்
ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளதை உறுதி செய்த சிவராஜ்குமார்...
SC: விசாரணைக்கு வரும் வக்ஃப் சட்ட திருத்தத்துக்கு எதிரான மனுக்கள்
SC: விசாரணைக்கு வரும் வக்ஃப் சட்ட திருத்தத்துக்கு எதிரான மனுக்கள்...