இனி ஈஸியா மீம் கிரியேட் பண்ணலாம்! கூகுளின் புதிய ஏஐ மீம் ஜெனரேட்டர் – என்ன ஸ்பெஷல்?
AI Meme Generator: இனி மீம்களை ஈஸியாக உருவாக்க கூகுள் புதிய ஏஐ மீம் ஜெனரேட்டரை அறிமுகப்படுத்தவிருக்கிறது. இதன் மூலம் நமது கூகுள் கீபோர்டு மூலமாகவே மீம்களை உருவாக்க முடியும். அதில் என்ன ஸ்பெஷல் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்பது மனதிர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது மனிதர்களையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு அதன் வளர்ச்சி இருக்கிறது. மனிதர்களுக்கு தேவையான டேட்டாக்களை வழங்க, ஆய்வுகளுக்கு உதவ, அவர்களின் பல வேலைகளை எளிதிகாக்க என ஏஐன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் மனித தவறுகளால் உருவாகும் பிரச்னைகளை அது குறைத்தும் வருகிறது. தற்போது அனைத்து துறைகளிலும் ஏஐ சிறப்பாக வளர்ந்து வருகிறது. சமீபத்தில் ஜொமேட்டோவின் (Zomato) வாடிக்கையாளர் சேவை மையத்தில் ஏஐ-ன் வரவால் 800 பேர் வேலை இழந்திருக்கின்றனர். மருத்துவ ஆய்வுகள், நோய் கண்டறிதல் போன்ற அதிமுக்கியமான பணிகளையும் செய்துவருகிறது. உலக அளவில் மிகப்பெரிய தேடுதல் தளமான கூகுள் (Google) தனது கூகுள் மேப், கூகுல் போட்டோஸ் போன்ற பல சேவைகளுக்கு ஏஐ டூல்களை கொண்டு வந்திருக்கிறது.
கூகுள் தற்போது தனது கூகுள் சர்ச் இன்ஜினில் பயனர்களின் தேடுலை எளிதாக்க சரியாக புரிந்துகொண்டு துல்லியமாக வழங்க ஏஐ கொண்டு வந்திருக்கிறது. அதே போல போகும் பாதையில் உள்ள வாகன நெரிசல்களையும் முன் கூட்டியே தெரிந்துகொள்ள கூகுள் மேப்பிலும் ஏஐ கொண்டு வந்திருக்கிறது. அதே போல ஏஐ காரணமாக முன்பு போல் அல்லாமல் இப்பொழுது மொழிபெயர்ப்பும் எளிதாக்கியிருக்கிறது.
கூகுளின் புதிய ஏஐ மீம் ஜெனரேட்டர்
இந்த நிலையில் ஜிபோர்டு ஏஐ மீம் ஜெனரேட்டர் என்ற பெயரில் உங்கள் மொபைல் கீபோர்டிலேயே மீம் உருவாக்கும் வசதியை கூகுள் அறிமுகப்படுத்தவிருக்கிறது. இதன் மூலம், நீங்கள் எளிதாக கீபோர்டு மூலம் AI உதவியுடன் மீம்களை உருவாக்க முடியும். இந்த வசதி, சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு, வேகமாக மீம்களை உருவாக்கி பகிர முடியும். மேலும் நண்பர்களுடன் சாட் செய்யும்போது அவருக்கு சட்டென மீம்கள் மூலம் பதிலளிக்க முடியும். முன்பு போல மீம்களை உருவாக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ள தேவையில்லை. இதன் பிறகு அனைவரும் மீம் கிரியேட்டர்கள் தான்.
ஜிப்லி இமேஜ்கள் ஏற்படுத்திய தாக்கம்
சாட்ஜிபிடி, குரோக் போன்றவை பயனர்களின் விருப்பப்படி அவர்களுக்கு இமேஜை உருவாக்கி கொடுத்து பிரபலமாகியிருக்கிறது. இதனையடுத்தே கூகுள் இந்த முடிவில் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் கிப்லி என்ற ஜப்பானிய அனிமி ஸ்டைலில் கிப்லி இமேஜ்களை சாட்ஜிபிடி உருவாக்கித் தந்தது. இதனையடுத்து அது உலக அளவில் டிரெண்டானது. இதனயைடுத்து கூகுளும் அந்த டிரெண்டில் இணையும் நோக்கி பயனர்களின் விருப்பத்துக்கு ஏற்ப மீம்களை உருவாக்கி தர ஏஐ மீம் ஜெனரேட்டரை கொண்டு வர முயற்சித்து வருகிறது.
சமூக வலைதளங்கள் எல்லாவற்றுக்கும் மீம்ஸ் தான். மீம் கிரியேட்டர்கள் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தனர். சமூகத்தில் நடக்கும் சம்பவங்களை சிம்பிளான எளிய மீம்களைப் போட்டு எதிர்வினையாற்றுவார்கள். பல வார்த்தைகளில் சொல்ல வேண்டியதை ஒரு மீம் சொல்லிவிட்டு போய்விடும். அது சட்டென புரியக் கூடியதாக இருக்கும் என்பதால் அதற்கு வரவேற்பு அதிகம். இனி ஏஐ மூலம் மீம்களை உருவாக்க முடியும் மகிழ்ச்சியளிக்க கூடிய விஷயம்.