Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்த கூகுள்!

Google Employee Layoffs | உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள கூகுளில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பனியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், கூகுள் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றி வரும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. கூகுளின் இந்த நடவடிக்கை ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்த கூகுள்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 11 Apr 2025 18:34 PM

உலக அளவிக் மிகப்பெரிய நிறுவனமாக உள்ள கூகுள் (Google), அதிக ஊழியர்களை கொண்டுள்ளது. இந்த நிலையில், நூற்றுக்கணக்கான பயனர்களை கூகுள் நிறுவனம் நீக்கம் செய்துள்ளது. குறிப்பாக, கூகுள் நிறுவனத்தில் உள்ள ஆண்ட்ராய்டு (Android), பிக்சல் (Pixel), க்ரோம் (Chrome) உள்ளிட்டவற்றில் பணியுரியும் ஊழியர்களை நீக்கம் செய்துள்ளது. இதன் காரணமாக ஊழியர்கள் தங்களது வாழாதாரத்தை இழந்துள்ளனர். இந்த நிலையில், கூகுள் நிறுவனம் ஏன் தனது பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உலக அளவில் மிகப்பெரிய நிறுவனமாக விளங்கும் கூகுள்

உலகம் முழுவதும் ஏராளமான மென்பொருள் நிறுவனங்கள் (Software Companies) செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு எல்லாம் ராஜாவாக உள்ள நிறுவனம் தான் கூகுள். கூகுள் உலக அளவில் மிகெப்பெரிய நிறுவனமாக உள்ளது. கூகுள் நிறுவனம் உலகம் முழுவதும் தனது சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, ஜிமெயில் (Gmail), கூகுள் க்ரோம் (Google Chrome), கூகுள் மேப் (Google Map), கூகுள் ப்ளே (Google Map) ஸ்டோர் உள்ளிட்ட ஏராளமான சேவைகளை வழங்கி வருகிறது.

கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் செயலி, கூகுள் க்ரோம் உள்ளிட்ட செயலிகளை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் கூகுளின் சேவைகளை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் நிலையில், பொதுமக்களுக்கு சேவைகளை முறையாக வாங்குவதற்காக கூகுள் லட்சக்கணக்கான ஊழியர்களை பணியில் வைத்துள்ளது. இந்த நிலையில் தான் தனது நூற்றுக்கணக்கான கணக்கான ஊழியர்களை கூகுள் நீக்கம் செய்துள்ளது.

நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்த கூகுள்

செய்றகை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது முதலே பல முன்னணி மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. அதனை தொடர்ந்து தற்போது கூகுள் நிறுவனமும் தனது நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி செய்துள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் ஏன் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்தது என்பது குறித்த காரணத்தை இன்னும் அறிவிக்காமல் உள்ளது.

செயற்கை நுண்ணறிவு அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது முதலே ஊழியர்களுக்கு பதிலாக நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு செயலிகள், சாட்பாட் உள்ளிட்ட அம்சங்களை பயன்படுத்த தொடங்கி விட்டன. இதன் காரணமாக ஏராளமான ஊழியர்கள் தங்களது பணியை இழந்து வரும் நிலையில், மிகப்பெரிய நிறுவனங்களான மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்களும் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா
கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா...
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!...
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!...
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?...
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை......
சென்னையில் கனமழை தொடரும்.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
சென்னையில் கனமழை தொடரும்.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!...
சம்மர் விடுமுறையை டெல்லியை சுற்றியும் கொண்டாடலாம் வாங்க..!
சம்மர் விடுமுறையை டெல்லியை சுற்றியும் கொண்டாடலாம் வாங்க..!...
நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!...
ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளதை உறுதி செய்த சிவராஜ்குமார்
ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளதை உறுதி செய்த சிவராஜ்குமார்...
SC: விசாரணைக்கு வரும் வக்ஃப் சட்ட திருத்தத்துக்கு எதிரான மனுக்கள்
SC: விசாரணைக்கு வரும் வக்ஃப் சட்ட திருத்தத்துக்கு எதிரான மனுக்கள்...