Gmail: ஜிமெயில் கணக்குக்கு ஆபத்து.. இந்த ஒரு தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்!

Gmail Account Protection | ஜிமெயில் செயலி மூலம் முக்கிய தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படும் நிலையில், அது பாதுகாப்பாக இருப்பது அவசியம். இந்த ஒரு தவறு மூலம் ஜிமெயில் செயலியில் இருந்து தகவல் திருடப்பட்டு மோசடிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Gmail: ஜிமெயில் கணக்குக்கு ஆபத்து.. இந்த ஒரு தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்!

மாதிரி புகைப்படம்

Published: 

21 Mar 2025 15:03 PM

தொழில்நுட்ப வளர்ச்சியின் (Technology Development) உச்சக்கட்டத்தை அடைந்துள்ள துறை என்றால் அது தொலைத்தொடர்பு துறை (Telecommunication) தான். தொலைத்தொடர்பு மிக வேகமாக வளாட்ர்ச்சியடைந்து வரும் துறையாக உள்ளது. தொலைத்தொடர்பு அம்சங்களை பயன்படுத்தி ஒருவர் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவரை மிக எளிதாக தொடர்புக்கொள்ள முடியும். அத்தகைய தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் செயலிகளில் ஒன்றுதான் ஜிமெயில் (Gmail).

சிறந்த தகவல் பரிமாற்ற செயலியாக உள்ள ஜிமெயில்

கூகுள் (Google) நிறுவனத்தின் இந்த ஜிமெயில் செயலியை உலகம்  முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களுடன் உரையாட, தகவல்களை பகிர்ந்துக்கொள்ள இந்த செயலியை பயன்படுத்துகின்றன. ஜிமெயில் செயலி மிகவும் பாதுகாப்பாக கருதப்படுவதால் அதில் சில முக்கிய தகவல்களையும் பகிர்ந்துக்கொள்கின்றனர். ஆனால், ஜிமெயில் செயலியில் இந்த ஒரு சிறிய தவறை செய்வதன் மூலம், கணக்கு ஹேக் செய்யப்படுவதற்கான அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தவறு மூலம் உங்கள் ஜிமெயில் கணக்கிற்கு பெரிய சிக்கல் வரலாம்

பொதுமக்கள் ஜிமெயில் கணக்கை தங்களது அன்றாட வாழ்வில் பல இடங்களில் பயன்படுத்துகின்றனர். ஏதேனும் வங்கி உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், கடைகளில் இ பில் பெறுவதற்காக, புதிய செயலிகளை பதிவிறக்கம் செய்யும்போது, புதிய இணையதளங்களை பயன்படுத்தும் போது என ஜிமெயில் செயலியில் பயன்பாடு நீட்டித்துக்கொண்டே போகும். ஆனால் இதில் தான் ஒரு பெரிய சிக்கல் உள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போன்களில் புதிய செயலிகளை பதிவிறக்கம் செய்யும்போது கொடுக்கப்படும் ஜிமெயில் கணக்கின் மூலம் பெரிய ஆபத்து ஏற்படலாம் என கூறப்படுகிறது.

பொதுவாக எந்த ஒரு செயலியை பதிவிறக்கம் செய்தாலும் அதில் Allow Permission என கேட்கும். அதற்கு அனுமதி அளிக்கும்  பட்சத்தில் தான் செயலியை பயன்படுத்த முடியும். செயலியை பதிவிறக்கம் செய்து அதனை ஸ்மார்ட்போனில் இருந்து நீக்கிய போதும் அந்த செயலிக்கு வழங்கிய அனுமதியை துண்டிக்காமல் இருப்போம். இதன் மூலம் தகவல்கள் திருடப்பட்டு மோசடி நடைபெறுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, நீக்கம் செய்யப்பட்ட செயலிகளுக்கான அனுமதியை துண்டிப்பது கட்டாயமாகிறது.

செயலிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை துண்டிப்பது எப்படி?

  • அதற்கு முதலில் ஜிமெயில் செயலிக்கு சென்று ஃப்ரொபைல் (Profile) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் உள்ள மேனேஜ் யுவர் அக்கவுண்ட் (Manage Your Account) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • பிறகு அதில் உள்ள செக்யூரிட்டி (Security) ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் இருக்கும் யுவர் கனக்க்ஷென் டூ தேர்ட் பார்ட்டி ஆப்ஸ் (Your Connection to Third Party Apps) என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
  • அதில் உங்கள் ஜிமெயில் கணக்கு எந்த எந்த செயலிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த முழு பட்டியல் தோன்றும்.
  • அதில் உங்களுக்கு தேவையில்லாத மற்றும் நீங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து நீக்கிய செயலிகளுக்கான அனுமதியை துண்டித்துவிடுங்கள்.

இந்த செயல்முறையை பின்பற்றி இணைப்புகளை துண்டிப்பதன் மூலம் உங்கள் ஜிமெயில் செயலி பாதுகாப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.