இனி ஸ்டோரி போட்டாலும் பணம் – பேஸ்புக்கின் புதிய அறிவிப்பு !

Facebook: இதுவரை பயனர்கள் பதிவிடும் வீடியோக்கள், ரீல்ஸ் (Reels) போட்டோஸ் ஆகியவற்றுக்கு அதன் விளம்பர வருவாயிலிருந்து குறிப்பிட்ட தொகையை வழங்கி வந்தது. இனி கூடுதலாக பேஸ்புக்கில் ஸ்டோரி பதிவிடுபவர்களுக்கும் இனி வருவாய் அளிக்கவுள்ளது. சமீப காலமாக பேஸ்புக் கிரியேட்டர்கள் வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளை, அப்டேட்டுகளை ஸ்டோரியாக பகிர்ந்துவருகின்றனர்.

இனி ஸ்டோரி போட்டாலும் பணம் - பேஸ்புக்கின் புதிய அறிவிப்பு !

பேஸ்புக்

Published: 

22 Mar 2025 03:39 AM

பல சமூக வலைதளங்கள் (Social Media) புதிதாக அறிமுகமாகி கொண்டிருக்கும்போதும் பேஸ்புக் (Facebook) மக்களிடையே பிரபலமாக இருப்பதற்கு காரணம் அது காலத்துக்கு ஏற்ற வகையில் அப்டேட் ஆகிக்கொண்டிருப்பது தான். இந்த நிலையில் பேஸ்புக் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி இனி அதில் ஸ்டோரி பதிவிடுபவர்களுக்கு விளம்பர வருவாயை பகிர்ந்தளிக்கவுள்ளது. இதுவரை பயனர்கள் பதிவிடும் வீடியோக்கள், ரீல்ஸ் (Reels) போட்டோஸ் ஆகியவற்றுக்கு அதன் விளம்பர வருவாயிலிருந்து குறிப்பிட்ட தொகையை வழங்கி வந்தது. இனி கூடுதலாக பேஸ்புக்கில் ஸ்டோரி பதிவிடுபவர்களுக்கும் இனி வருவாய் அளிக்கவுள்ளது. சமீப காலமாக பேஸ்புக் கிரியேட்டர்கள் வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளை, அப்டேட்டுகளை ஸ்டோரியாக பகிர்ந்துவருகின்றனர். அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இந்த அறிவிப்பை பேஸ்புக் வெளியிட்டுள்ளது.

பேஸ்புக்கில் விளம்பர வருவாய் பெற தகுதி

ஏற்னவே கிரியேட்டர்கள் அவர்களின் வீடியோக்களுக்கும் பதிவுகளுக்கும் வரும் விளம்பரங்களுக்கு ஏற்ற வகையில் விளம்பர வருவாய் அளித்துவந்தது. அதாவது எத்தனை பேர் அவர்களது பதிவை பார்த்திருக்கிறார்கள், எத்தனை பேருக்கு விளம்பரங்கள் போய் சேர்ந்திருக்கின்றன. அதே போல இனி ஸ்டோரி பதிவிடும் கிரியேட்டர்ஸ்களுக்கும் அவர்களுக்கு வரும் விளம்பரம் மற்றும் அது எத்தனை பேரை சென்றடைந்திருக்கிறது ஆகியவற்றின் அடிப்படையில் வருவாய் பகிர்ந்தளிக்கப்படும். ஏற்கனவே மானிடைசேஷனுக்கு தகுதி பெற்றவர்களுக்கு நேரடியாக ஸ்டோரிஸ்களுக்கான விளம்பர வருவாய் அளிக்கப்படும் எனவும் புதிதாக இணைய விரும்பும் கிரியேட்டர்கள் அவர்கள் இணைந்த பிறகு அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்படுள்ளது.

உலக அளவில் பிரபலமாக இருக்கும் பேஸ்புக் அதன் வருவாயின் பெரும்பகுதியை விளம்பங்கள் பெறப்படுவதாக கூறப்படுகிறது. யூசர்களின் ஆர்வம், செயல்பாடுகள் ஆகியவற்றை கண்டறிந்து அதன் அடிப்பைடயில் விளம்பரங்களை பகிர்கிறது. யூசர்கள் பார்க்கும் வீடியோக்களின் இடையில், நியூஸ் வீட் போன்றவற்றிற்கு இடையில் விளம்பரங்களை வெளியிடுகிறது.

வருவாய் எப்படி பகிர்ந்தளிக்கப்படுகிறது?

யூடியூப் போல பேஸ்புக்கில் வீடியோக்களில் விளம்பரங்கள் அதன் துவக்கத்தில் இறுதியிலும் செய்யப்படுகின்றன. தகுதியான கிரியேட்டர்ஸ்களுக்கு விளம்பர வருவாயிலிருந்து 55 சதவிகிதமும், பேஸ்புக்கிற்கு 45 சதவிகிதமும் அளிக்கப்படும். மேலும் யூசர்கள் தங்களுக்கு பிடித்தமான கிரியேட்டர்ஸ்களை சப்கிரைப் செய்துகொள்வதன் மூலம் அவர்களுக்கு மாத சந்தா செலுத்துவார்கள். கிரியேட்டர்கள் சில விளம்பரதாரர்களுடன் இணைந்து வீடியோ வெளியிடுவதன் மூலம் அவர்களுக்கு வருமானம் கிடைக்கும். பேஸ்புக் நிறுவனமானது கடந்த 2022 ஆம் ஆண்டு தகவலின் படி மாதம் 2.936 பில்லியன் யூசர்கள் தொடர்ந்து பேஸ்புக் பயன்படுத்துகின்றனராம். இந்தியா தான் பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்தும் நாடாக இருக்கிறது. இந்தியாவில் மட்டும் 329 மில்லியன் யூசர்கள் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர். அதற்கு அடுத்து அமெரிக்காவில் 179 மில்லியன் யூசர்கள் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர்.

மெட்டா நிறுவனம் கம்யூனிட்டி நோட்ஸ் என்ற முறையை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், திரெட்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது. இதன் மூலம் யூசர்கள் ஒரு பதிவின் உண்மைத் தன்மை குறித்து நோட்ஸில் குறிப்பிட முடியும். ஒரு பதிவு சம்பந்தமான லிங்க் இருந்தால் இணைக்க முடியும். இப்படி செய்வதால் ஒரு பதிவின் உண்மைத் தன்மை அதன் யூசர்களுக்கு தெரிய வரும் என்று கூறப்படுகிறது. விரைவில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது. யூடியூபில் ஒரு வருடத்தில் ஆயிரம் சப்ஸ்கிரைபர்களும் 4000 மணி நேர பார்வைகளும் பெற்றிருக்க வேண்டும். அதே போல பேஸ்புக்கில் 60 நாட்களில் 10,000 பாலோயர்களும் 30,000 வியூஸும் பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.