Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கிரெடிட் ஸ்கோர் குறைவாக உள்ளதா?.. சுலபமாக அதிகரிக்க சில சிம்பிள் டிப்ஸ் இதோ!

How to Improve Credit Score | வங்கிகளில் கடன் பெற வேண்டும் என்றால் கிரெடிட் ஸ்கோர் சரியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இந்த நிலையில், குறைவாக உள்ள கிரெடிட் ஸ்கோரை அதிகரிப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கிரெடிட் ஸ்கோர் குறைவாக உள்ளதா?.. சுலபமாக அதிகரிக்க சில சிம்பிள் டிப்ஸ் இதோ!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 21 Mar 2025 15:09 PM

பொதுமக்களுக்கு கடன் வழங்குவதற்காக வங்கிகள் கேட்கும் முக்கியமான விஷயம் என்றால் எது கிரெடிட் ஸ்கோர் (Credit Score) தான். ஒருவருக்கு வங்கி கடன் (Bank Loan) வழங்க வேண்டும் என்றால் அந்த நபர், முறையாக கடனை திருப்பிச் செலுத்துவாரா, இதற்கு முன்னதாக ஏதேனும் கடன் வாங்கி அதனை கட்டாமல் வைத்துள்ளாரா என்பதை எல்லாம் சோதனை செய்வது அவசியம். ஆனால், ஒவ்வொரு தனி நபரையும் கண்காணித்து இந்த தகவல்களை சேகரிக்க முடியாது. எனவே தான் இந்த கிரெடிட் ஸ்கோர் அம்சம் பயன்பாட்டில் உள்ளது.

வங்கி கடன் வாங்க கிரெடிட் ஸ்கோர் மிகவும் அவசியம் – ஏன் தெரியுமா?

கிரெடிட் ஸ்கோர்கள் மூலம் ஒருவரின் கடன் விவரங்களை மிக சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம். அதாவது, ஒருவர் எந்த வித பிரச்சனைகளும் இன்றி முறையாக வங்கி கடன்களை திருப்பி செலுத்தி வருகிறார் என்றால் அவரது கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருக்கும். இதுவே ஒருவர் கடன்களை முறையாக திருப்பி செலுத்தாமல், காலம் தாழ்த்தி கடனை திருப்பி செலுத்துகிறார் என்றால் அவரது கிரெடிட் ஸ்கோர் மிகவும் குறைவாக இருக்கும். இதன் மூலம் வங்கிகள் அந்த நபருக்கு கடன் தர வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்யும்.

இந்த நிலையில், கிரெடிட் ஸ்கோர் குறைவாக உள்ள நபர்கள் சில யுக்திகளை கையாளுவதன் மூலம், தங்களது கிரெட் ஸ்கோரை உயர்த்த முடியும். அதன் மூலம் அவர்களுக்கு மிக எளிதில் வங்கி கடன் கிடைத்துவிடும். இந்த நிலையில், கிரெடிட் ஸ்கோரை மிக சுலபமாக அதிகரிப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கிரெடிட் ஸ்கோரை அதிகரிப்பது எப்படி?

  1. முதலில் உங்கள் கிரெடிட் ஸ்கோர் சரியாக தான் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு CRIF (Centre for Research in International Finance) கடன் அறிக்கையை சரிப்பார்க்க வேண்டும்.
  2. நீங்கள் மாத தவணைகளை கால தாமதமாக செலுத்தி வருகிறீர்கள் என்றால் அதனை உரிய தேதிக்குள் செலுத்த முயற்சி செய்யுங்கள்.
  3. கடனை அதிகரித்துக்கொண்டே செல்வதை தவிர்ப்பது அவசியம் ஆகும். ஏற்கனவே ஒன்றுக்கும் மேற்பட்ட கடன்கள் இருக்கும் பட்சத்தில் ஒன்று அல்லது இரண்டு கடன்களை வைத்திருப்பது இதற்கு பயனுள்ளதாக இருக்கும்.
  4. நீங்கள் நிலுவையில் வைத்துள்ள கிரெடிட் கார்டு பில் மற்றும் மாத தவணைகளை உடனடியாக செலுத்துங்கள்.
  5. வங்கிகளில் கடனுக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டால், உடனே மீண்டும் மீண்டும் விண்ணப்பம் செய்யாதீர்கள். குறைந்தது 6 மாத கால இடைவெளிக்கு பிறகு விண்ணப்பியுங்கள்.

மேற்குறிப்பிட்ட யுக்திகளை கையாளுவதன் மூலம் உங்கள் கிரெடிட் ஸ்கோரை சீராக பராமரிக்க முடியும். கிரெடிட் ஸ்கோர் வங்கி கடன் வாங்குவதற்கு மட்டுமன்றி, நிதி தொடர்பான பல விவகாரங்களுக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, கிரெடிட் ஸ்கோரை முறையாக பராமரிப்பது கட்டாயமாகிறது.

திருமண நாளில் கிஃப்ட்.. மீண்டும் தந்தையான விஷ்ணு விஷால்!
திருமண நாளில் கிஃப்ட்.. மீண்டும் தந்தையான விஷ்ணு விஷால்!...
படங்களில் கிளாமர் காட்சி.. சுந்தர்.சி சொன்ன வித்தியாசமான பதில்!
படங்களில் கிளாமர் காட்சி.. சுந்தர்.சி சொன்ன வித்தியாசமான பதில்!...
பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் வார விழா கொண்டாடப்படும்!
பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் வார விழா கொண்டாடப்படும்!...
திருச்சியை சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள் என்னென்ன? எப்படி செல்வது?
திருச்சியை சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள் என்னென்ன? எப்படி செல்வது?...
என்னோட மோசமான நடிப்பு.. தன் படங்களை சாடிய சமந்தா!
என்னோட மோசமான நடிப்பு.. தன் படங்களை சாடிய சமந்தா!...
நிற்கும் அம்மனுக்கு உட்கார்ந்த நிலையில் அலங்காரம் செய்யும் கோயில்
நிற்கும் அம்மனுக்கு உட்கார்ந்த நிலையில் அலங்காரம் செய்யும் கோயில்...
சென்னையில் மின்சார ரயில் தடம்புரண்டு விபத்து!
சென்னையில் மின்சார ரயில் தடம்புரண்டு விபத்து!...
தாயின் கருவறையில் இருமுறை பிறந்த ஒரே குழந்தை.. அதிசயம் ஆனால்..?
தாயின் கருவறையில் இருமுறை பிறந்த ஒரே குழந்தை.. அதிசயம் ஆனால்..?...
நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன் - ஏப்.27-ல் ஆஜர்!
நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன் - ஏப்.27-ல் ஆஜர்!...
டெல்லி - லக்னோ இன்று மோதல்! யார் யாரை வீழ்த்துவார்கள்..?
டெல்லி - லக்னோ இன்று மோதல்! யார் யாரை வீழ்த்துவார்கள்..?...
திடீரென மாறிய கதை.. ரெட்ரோ படம் உருவான விதம் இப்படித்தான்!
திடீரென மாறிய கதை.. ரெட்ரோ படம் உருவான விதம் இப்படித்தான்!...