இந்த 3 துறைகளில் மனிதர்களை ஏஐ Replace செய்யாது.. உறுதியாக சொல்லும் பில் கேட்ஸ்!

Bill Gates on Artificial Intelligence | உலக பணக்காரரான பில் கேட்ஸ் சமீபத்தில் பங்கேற்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் செயற்கை நுண்ணறிவு அம்சம் குறித்து பேசியுள்ளார். அதில், 3 துறைகளை செயற்கை நுண்ணறிவு துறை பாதிக்காது என்று தெரிவித்துள்ளார். அது என்ன என்ன துறை என்பது குறித்து விரிவாகா பார்க்கலாம்.

இந்த 3 துறைகளில் மனிதர்களை ஏஐ Replace செய்யாது.. உறுதியாக சொல்லும் பில் கேட்ஸ்!

பில் கேட்ஸ்

Published: 

17 Apr 2025 12:47 PM

உலக பணக்காரரான பில் கேட்ஸ் (Bill Gates) சமீபத்தில் பங்கேற்ற பாட்காஸ்ட் (Podcast) ஒன்றில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Intelligence Technology) எப்படி வரும் காலத்தில் வேலையை மாற்றி அமைக்கும், எந்த எந்த துறைகளை சேர்ந்தவர்கள் வேலை இழக்க நேரிடும் என்பது குறித்து பேசியுள்ளார். பெரும்பாலான துறைகளை செயற்கை நுண்ணறிவு அம்சம் ஆட்கொண்டு விடும் என்று கூறியுள்ள பில் கேட்ஸ், மூன்று துறைகளில் மட்டும் மனிதர்களை செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் மாற்றம் செய்ய முடியாது என்று கூறியுள்ளார். அவர் கூறிய அந்த மூன்று துறைகள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மனிதர்களின் வேலையை பறிக்கும் செயற்கை நுண்ணறிவு

தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கிய அம்சமாக கருதப்படுவது தான் செயற்கை நுண்ணறிவு. தொழில்நுட்ப வசதியுடன் சாதாரணமாக பல மணி நேரம் செய்து வந்த வேலைகளை இந்த செயற்கை நுண்ணறிவு அம்சம் மூலம் சில மணி நேரங்களில் மிகவும் எளிதாக செய்து முடித்துவிட முடியும். இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் மனிதர்களுக்கு பதிலாக இந்த செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பணியில் அமர்த்துகின்றனர்.

குறிப்பாக, பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப (Information Technology) நிறுவனங்கள் இந்த வேலையை செய்கின்றனர். இதன் காரணமாக ஏராளமான ஐடி ஊழியர்கள் தங்களது பணியை இழந்துள்ளனர். இதே நிலை நீடித்தால் பெரும்பாலான துறைகளில் செயற்கை நுண்ணறிவு காரணமாக மனிதர்கள் பணியை இழக்கும் அபாயம் ஏற்படும் என ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில், பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற பில் கேட்ஸ் செயற்கை நுண்ணறிவால் மூன்று துறைகளுக்கு எந்த வித பாதிப்பு ஏற்படாது என்று கூறியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவால் இந்த 3 துறைகளுக்கு ஆபத்து இல்லை – பில்கேட்ஸ்

பலவேறு துறைகளில் மனிதர்களை செயற்கை நுண்ணறிவு அம்சம் மாற்றம் செய்தாலும் சில துறைகளில் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று பில் கேட்ஸ் கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மனிதர்களை அவர்கள் விரும்பும் செயல்களை செய்ய வைக்கும் என்று அவர் கூறியுள்ளார். இன்னும் 20 ஆண்டுகளில் இந்த முதலாளித்துவ வேலை வாய்ப்பு காணாமல் போய்விடும் என்று கூறியுள்ள பில் கேட்ஸ், இனி வரும் காலங்களில் பொதுமக்கள் வாரத்தில் 2 முதல் 3 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் நிலையை செயற்கை நுண்ணறிவு அம்சம் உருவாக்கும் என்றும் கூறியுள்ளார்.

பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய பில் கேட்ஸ்

செயற்கை நுண்ணறிவு அம்சம் மனிதர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என பலருக்கும் அச்சம் எழுந்துள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் வாழ்வை மிகவும் சுலபமானதாக மாற்றும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார். என்னதான் செயற்கை நுண்ணறிவு வேலைகளை பறித்தாலும் உயிரியலாளர்கள் (Biologists), ஆற்றல் நிபுணர்கள் (Energy Experts) மற்றும் கோடிங் (Coders) செய்யும் நபர்களின் பணிகளை செயற்கை நுண்ணறிவால் பறிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.