Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பட்ஜெட் விலையில் ஃபேமிலி காரை தேடுகிறீர்களா? 8 லட்சத்திற்குள் டாப் 5 கார்கள் இதோ!

Top 5 Budget Cars: கார்கள் என்பது தற்போது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. குறிப்பாக குடும்பத்துடன் பயணிக்க இப்பொழுது கார் மிகவும் அவசியம். இந்த கட்டுரையில் ரூ.8 லட்சத்திற்குள் சந்தையில் கிடைக்கக் கூடிய பட்ஜெட் விலையில் சிறந்த 5 கார்களை பார்க்கலாம்.

பட்ஜெட் விலையில் ஃபேமிலி காரை தேடுகிறீர்களா?  8 லட்சத்திற்குள் டாப் 5 கார்கள் இதோ!
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 16 Apr 2025 17:37 PM

பொதுவாக குடும்பத்தை மனதில் வைத்து கார் (Car) வாங்குவது என்பது எப்பொழுதுமே ஒரு பெரிய முடிவாக பார்க்கப்படுகிறது. எந்த காரை வாங்குவது, அதில் இடவசதி எப்படி இருக்கும், எவ்வளவு மைலேஜ் (Mileage ) தரும் என ஒரு காரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் சவாலான பணி. குறிப்பாக மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு அது ஒரு பெரும் கனவு. வாழ்க்கை முறை மாற்றத்தின் காரணமாக கார்கள் என்பது அடிப்படை தேவைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. வார இறுதியில் குடும்பத்துடன் வெளியே செல்ல, குழந்தைகளை பள்ளிகளில் விட்டு வர, பெரியவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல என கார் என்பது வசதிக்காக மட்டும் அல்லாது,  அது ஒரு நம்பிக்கையான துணையாகவும் மாறியிருக்கிறது. ஆனால் அவ்வளவு பெரிய கார் வாங்க பட்ஜெட் இல்லையே என்பது தான் பலரது கவலை. இந்த நிலையில் ஒரு சிறிய குடும்பம் பயணிக்க ஏற்ற வகையில்  8 லட்சம் ரூபாய்க்குள் பல தரமான கார்கள் இன்று சந்தையில் கிடைக்கின்றன.

டாடா டியாகோ (Tata Tiago)

பட்ஜெட் விலை கார் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது டாடா டியாகோ. இது ஒரு எளிமையான அதே நேரம் செயல்திறன் வாய்ந்த ஹேட்ச்பேக் கார்.  மேலும் இதன் விலை ரூ. 4.99 லட்சம் முதல் தொடங்கும் இந்த கார் பெட்ரோல், சிஎன்ஜி, மற்றும் எலக்ட்ரிக் என மூன்று வகையிலும் கிடைக்கிறது. மேலும் 1.2 லிட்டர் இன்ஜினுடன் வரும் இது பெட்ரோலில் 19.8 கிலோமீட்டர் வரையும், சிஎன்ஜியில் 28 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரக்கூடியது என கூறப்படுகிறது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios)

ஹூண்டாயின் நம்பிக்கையான ஹேட்ச்பேக் வகை கார் இது. சந்தை மதிப்பில் ரூ.5.92 லட்சம் விலையில் தொடங்கும் இந்த கார் ஒரு 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. பெட்ரோலில் 18 கிமீ மைலேஜ் தரும் இந்த கார், சிஎன்ஜியில் 27 கிமீ வரை தரக்கூடியதாகவும் அறியப்படுகிறது. இன்டீரியர் வசதிகள் மற்றும் வாகனத்தின் ஸ்மார்ட் லுக்கும் இந்த காரின் முக்கிய பலமாக இருக்கின்றன.

டாடா பஞ்ச் (Tata Punch)

ஒரு சிறிய குடும்பத்துக்கு ஒரு எஸ்யூவீப் போல தோற்றம் தரும் இந்த கார் ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. சந்தையில் ரூ.6.19 லட்சத்தில் தொடங்கும் இந்த கார், சின்னதொரு குடும்பத்துக்கு ஏற்றது. இது பெட்ரோல், சிஎன்ஜி, மற்றும் எலக்ட்ரிக் மூன்றிலும் கிடைக்கிறது. மைலேஜ் விஷயத்தில் பெட்ரோலுக்கு 20 கிமீ, சிஎன்ஜிக்கு 27 கிமீ எனவும் சொல்லப்படுகிறது.

நிசான் மேக்னைட் (Nissan Magnite )

இந்த காரானது ரூ.6.14 லட்சம் முதல் கிடைக்கும். மேலும் இந்த கார், 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் 19.9 கிமீ வரை மைலேஜ் தரும் என கூறப்படுகிறது.

மாருதி ஸ்விப்ட் (Maruti Swift)

 இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் காராக உள்ளது. மேலும் சந்தையில்  ரூ. 49 லட்சம் முதல் கிடைக்கும்.  இந்த காரின் புதிய 2024 ஜெனரேஷன் மாடல் தற்போது விற்பனையாகிறது. இது பெட்ரோலில் 24 கிமீ, சிஎன்ஜியில் 32 கிமீ வரை மைலேஜ் தரும் என கூறப்படுகிறது.

இந்த ஐந்து கார்கள் அனைத்தும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தவையாக இருக்கின்றன. சிறிய குடும்பத்திற்கு குறைந்த விலையில் நம்பகமான காரை விரும்புவோர் இந்த பட்டியலில் உள்ள ஒரு காரை உங்கள் தேவையைப் பொறுத்து தேர்வு செய்யலாம். கார் என்பது வெறும் ஒரு வாகனம் அல்ல, அது ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

சென்னையில் இன்று முதல் ஏசி மின்சார ரயில்... நேர அட்டவணை இதோ
சென்னையில் இன்று முதல் ஏசி மின்சார ரயில்... நேர அட்டவணை இதோ...
பெங்களூருவை வச்சு செய்த வதேரா.. வெற்றி நடைப்போகும் ஷ்ரேயாஸ் படை!
பெங்களூருவை வச்சு செய்த வதேரா.. வெற்றி நடைப்போகும் ஷ்ரேயாஸ் படை!...
'தாஜ்மஹால் எனக்கு சொந்தமானது' - உரிமை கோரிய நபரால் பரபரப்பு
'தாஜ்மஹால் எனக்கு சொந்தமானது' - உரிமை கோரிய நபரால் பரபரப்பு...
வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? - வாஸ்து சொல்லும் டிப்ஸ் இதுதான்
வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? - வாஸ்து சொல்லும் டிப்ஸ் இதுதான்...
ப்ரொபோஸ் செய்யும் போது நீர்வீழ்ச்சியில் விழுந்த மோதிரம் - வைரல்!
ப்ரொபோஸ் செய்யும் போது நீர்வீழ்ச்சியில் விழுந்த மோதிரம் - வைரல்!...
ரூ.2,000-க்கு மேல் செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு GST?
ரூ.2,000-க்கு மேல் செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு GST?...
மருதமலை முருகன் கோயிலுக்கு போறீங்களா? முக்கிய அறிவிப்பு இதோ!
மருதமலை முருகன் கோயிலுக்கு போறீங்களா? முக்கிய அறிவிப்பு இதோ!...
'ஹேராம்' பட அனுபவங்களை பகிர்ந்துகொண்ட ராணி முகர்ஜி
'ஹேராம்' பட அனுபவங்களை பகிர்ந்துகொண்ட ராணி முகர்ஜி...
கிளாம்பாக்கம் நடை மேம்பாலத்தின் மதிப்பு ரூ.350 கோடியா..!
கிளாம்பாக்கம் நடை மேம்பாலத்தின் மதிப்பு ரூ.350 கோடியா..!...
யுவன் இசையில் விஜய் பாடிய முதல் பாடல் எது தெரியுமா?
யுவன் இசையில் விஜய் பாடிய முதல் பாடல் எது தெரியுமா?...
இளையராஜாவுக்கு மிஸ்ஸான தேசிய விருது? தேவர் மகனில் நடந்த சம்பவம்!
இளையராஜாவுக்கு மிஸ்ஸான தேசிய விருது? தேவர் மகனில் நடந்த சம்பவம்!...