பட்ஜெட் விலையில் சிறந்த லேப்டாப்புகளை தேர்ந்தெடுப்பது எப்படி?
Laptop: கொரோனா காலகட்டத்துக்கு பிறகு ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பது நமது வசதியானதாக மாறியிருக்கிறது. அதற்கு ஏற்ற வகையில் சந்தைகளில் மலிவு விலைகளில் லேப்டாப் கிடைக்கின்றன. இதில் சிறந்த பிராண்டுகளில் முக்கியமான மாடல்களை இந்த கட்டுரையில் காணலாம். குறிப்பாக லேப்டாப் வாங்கிய பிறகு அதற்கான சிறந்த சர்வீஸ்களை வழங்கும் மாடல்களை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம்.

லேப்டாப்புகளைப் (Laptop) பொறுத்தவரை அதன் பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் தேர்ந்தெடுப்பதே புத்திசாலித்தனமானதாக பார்க்கப்படுகிறது. நம் பயன்பாடுகளுக்கு ஏற்ப பல்வேறு பிராண்டுகளில் பல்வேறு செயல்திறன்களில் கிடைக்கின்றன. லேப்டாப்புகளை, டெஸ்க்டாப்புகளைப் போல் நமது விருப்பத்துக்கு ஏற்ப மேம்படுத்த முடியாது. இருப்பினும் அதனை எளிதில் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம் நம் பயன்பாடுகளுக்கு ஏற்ப அதன் பிராசசர், ரேம் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து தேர்ந்தெடுப்பது சிறந்தது. கொரோனா காலகட்டத்துக்கு பிறகு ஆன்லைன் வகுப்புகளில் (Online Class) பங்கேற்பது நமது வசதியானதாக மாறியிருக்கிறது. அதற்கு ஏற்ற வகையில் சந்தைகளில் மலிவு விலைகளில் லேப்டாப் கிடைக்கின்றன. இதில் சிறந்த பிராண்டுகளில் முக்கியமான மாடல்களை இந்த கட்டுரையில் காணலாம். குறிப்பாக லேப்டாப் வாங்கிய பிறகு அதற்கான சிறந்த சர்வீஸ்களை வழங்கும் மாடல்களை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம்.
வெறும் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்வதற்கும் சில அடிப்படை தேவைகளுக்கும் லேப்டாப் வாங்க விரு்புகிறீர்கள் என்றால் குரோம் புக் (Chromebooks) ஒன்றை பரிசீலிக்கலாம். இவை கூகுள் குரோம் ஒஎஸ் எனும் இயக்குதளத்தில் இயங்கும். மேலும் கூகுள் சூட் (Google Suite) செயலிகளை முழுமையாகப் பயன்படுத்தலாம், மேலும் Google Play Store மூலம் Android செயலிகளையும் பதிவிறக்கம் செய்யலாம்.
சிறந்த குரோம்புக் மாடல்கள்:
உங்களுக்கு விண்டோஸ் செயலிகள் அவசியமில்லையென்றால், குரோம்புக் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். குரோம் ஒஎஸ் (Chrome OS) விண்டோஸை விட எளிமையாகவும் வேகமாகவும் இயங்கும், மேலும் நீண்ட பேட்டரி ஆயுளைக் கொண்டிருக்கும். இது இலகுவான பயன்பாட்டை அளிப்பதுடன், மிகவும் குறைவான விலையில் கிடைக்கும். சிறந்த குரோம்புக் மாடல்களில் எச்பி குரோம்புக் 14ஏ (HP Chromebook 14a) ஆனது ₹27,999 விலையில் கிடைக்கிறது, இது Intel Celeron N4020, 4GB RAM, மற்றும் 14” HD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேலும், எச்பி குரோம்புக் 11ஏ மாடல் MediaTek MT8183 SoC, 4GB RAM மற்றும் 16 மணி நேர பேட்டரி ஆயுள் வழங்கக்கூடியதாக இருக்கிறது.
உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற சிறந்த லேப்டாப்கள்
லேப்டாப் தேர்வு செய்யும் முன், உங்கள் பட்ஜெட்டைத் தீர்மானித்து, அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக உங்கள் பட்ஜெட் ரூ.20, 000 முதல் 30,000 என்றால் அவற்றில் பெரும்பாலான மாடல்கள் Intel Celeron/Pentium CPU, 4GB RAM, HD டிஸ்ப்ளே கொண்டதாக இருக்கும். 1TB HDD விருப்பமாக இருக்கும். இந்த விலையில் அவிட்டா எசன்சியல்( Avita Essential), RDP ThinBook 1010 போன்ற பிராண்டுகள் கிடைக்கும்.
உங்களது பட்ஜெட் ரூ30,000 – 40,000 வரையில் இருந்தால் எச்பி, லெனோவா, டெல் போன்ற பிரபலமான பிராண்டுகளின் லேப்டாப்புகளை பெறலாம். இதில் Intel Core i3 10th Gen, AMD Ryzen 3 போன்ற சிறப்பான பிராசசர்களை (Processors) எதிர்பார்க்கலாம். பெரும்பாலான மாடல்கள் 1TB HDD கொண்டிருக்கும். இந்த மாடல்களில் 4GB RAM உடன் வரும், தேவை ஏற்பட்டால் 8GB-க்கு மேம்படுத்திக்கொள்ளலாம்.
உங்களது பட்ஜெட் ரூ. 40,000 – 45,000 வரை இருந்தால் வேகமான செயல்திறன், SSD சேமிப்பு, Full HD டிஸ்ப்ளே போன்ற சிறப்பம்சங்கள் கொண்ட HP லேப்டாப்புகள் கிடைக்கும், குறிப்பாக Intel Core i3 11th Gen, 8GB RAM, SSD போன்ற அம்சங்கள் கொண்ட மாடல்கள் கிடைக்கும்.