2025-ல் அதிக கூலிங் கொடுக்கக் கூடிய டாப் 5 சிறந்த ஏசிகள் – இந்த சம்மரை சமாளிக்க பெஸ்ட் சாய்ஸ்
Best 1.5 Ton AC : இந்தியாவின் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ப, 2025ல் சந்தைகளில் கிடைக்கக் கூடிய சிறந்த 1.5 டன் ஏசிகளை இந்த பதிவில் பார்க்கலாம். ஸ்டார் ரேட்டிங், நாய்ஸ் மற்றும் மின் பயன்பாடு ஆகியவற்றை அடிப்படையில் ஏசிகள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

டிவி சேனல்களில் ஏசி (AC) விளம்பரங்கள் வரத் தொடங்கினாலே கோடைகாலம் (Summer) துவங்கிவிட்டதாக அர்த்தம்.தற்சமயம் ஏ.சி என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக வெயில் சுட்டெரிக்கும் கோடைகாலத்தில் ஏசி இல்லாமல் சமாளிப்பது கடினம். ஆனால் ஏசிகளை எப்படி தேர்ந்தெடுப்பது என்பது தான் நம் முன்னால் இருக்கும் சவால். வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ ஒரு நல்ல ஏசி தேடுகிறீர்கள் என்றால், 1.5 டன் ஸ்ப்லிட் ஏ.சி தான் சிறந்த சாய்ஸாக கருதப்படுகிறது. இது நடுத்தரமான அளவுள்ள அறைகள் அதாவது 120 முதல் 180 சதுர அடி அளவுள்ள அறைகளுக்கு 1.5 டன் ஏசி சரியாக இருக்கும். ஏசி வாங்கும் போது நல்ல கூலிங், குறைவான மின் பயன்பாடு மற்றும் நீண்ட நாள் பயன்பாடு ஆகியவற்றின் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் நமது பட்ஜெட்டையும் மனதில் கொள்வது மிகவும் அவசியம்.
மேலும் ஏசி வாங்கும்போது ஸ்டார் ரேட்டிங், எவ்வளவு கூலிங் கொடுக்கும், மின் கட்டணத்தை மிச்சப்படுத்துமா, இன்வர்டர் ஏசியா இல்லை நான்-இன்வர்டர் ஏசியாய? நாய்ஸ் அளவு எப்படி இருக்கும்? நாம் வாங்கும் ஏசி பிராண்ட நமக்கு நேரடியாக சர்வீஸ் செய்து தருவார்களா? வாரண்டி இதெல்லாம் செக் பண்றது அவசியம். இதன் அடிப்படையில் டாப் 5 ஏசி மாடல்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
எல்ஜி 1.5 டன் 5 ஸ்டார் ஏஐ டூயல் இன்வர்டர் ஸ்பிலிட் ஏசி (LG 1.5 Ton 5 Star AI Dual Inverter Split AC)
இதில் செயற்கை நுண்றிவால் (AI) மூலம் இயங்கும் 6-in-1 convertible cooling system-ஐ வழங்குகிறது. இதில் உள்ள ஆன்டி வைரஸ் எச்டி ஃபில்டர் தூய்மையான காற்றை வழங்க உதவுகிறது. 5 ஸ்டார் ரேட்டிங்கால் மின் கட்டணம் குறைவாக இருக்கும்.மிகவும் அமைதியாக வேலை செய்யும் இதன் விலை ரூ. 44,000 என்று கூறப்படுகிறது.
டைகின் 1.5 டன் 5 ஸ்டார் இன்வர்டர் ஸ்பிலிட் ஏசி (Daikin 1.5 டன் 5 ஸ்டார் இன்வர்டர் ஸ்பிலிட் ஏசி)
இந்த லிஸ்டில் அறைகளில் அனைத்து பக்கங்களுக்கும் சம அளவு காற்று பரவும். மேலும் Coanda airflow technology பயன்படுத்தப்பட்டிருப்பதால் அறை முழுவதும் சம அளவு களிச்சி கொண்டு வரும். மேலும் பவர் சில் மோட் இருப்பதால் அறையை வேகமாக குளிர்ச்சி அடைய செய்யும். இந்திய தட்ப வெட்பநிலைக்கு ஏற்ப இந்த ஏசி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் விலை ரூ. 47,000 என்று கூறப்படுகிறது.
வோல்டாஸ் 1.5 டன் 5 ஸ்டார் இன்வர்டர் ஸ்பிலிட் ஏசி (Voltas 1.5 Ton 5 Star Inverter Split AC)
பட்ஜெட்டை அடிப்படையாக வைத்து தேர்ந்தெடுக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஏசி நல்ல சாய்ஸ். டர்போ கூல் மோட் கொடுக்கப்பட்டிருப்பதால் அறையை வேகமாக குளிரடைய செய்யும். மேலும் 100 சதவிகிதம் காப்பர் கன்டன்சர் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்டெப்லைசர் இல்லாம் வேலை செய்யும். இந்திய தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் விலை ரூ.39,000 என்று கூறப்படுகிறது.
பேனாசோனிக் 1.5 டன் 5 ஸ்டார் ஸ்மார்ட் வைஃபை இன்வர்டர் ஏசி (Panasonic 1.5 Ton 5 Star Smart Wi-Fi Inverter AC)
இந்த மாடல் Miraie App மற்றும் Alexa voice control என ஸ்மார்ட்டான அம்சங்களுடன் கிடைக்கிறது. 7-in-1 convertible mode-வும் PM2.5 air filter கொண்டிருப்பதால் இதில் இருந்து வரும் காற்று பாதுகாப்பானது. இதன் விலை ரூ.42, 000 என கூறப்படுகிறது.
புளூ ஸ்டார் 1.5 டன் 3 ஸ்டார் இன்வர்டர் ஸ்பிலிட் ஏசி (Blue Star 1.5 Ton 3 Star Inverter Split AC)
குறைவான விலையில் நல்ல கூலிங் ஏசி தேடுபவர்களுக்கு சிறந்த சாய்ஸ். டஸ்ட் ஃபில்டர் மற்றும் எகோ மோட் இதனை காற்றையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பாக வைத்திருக்கும். இதன் விலை ரூ. 36,000 என்று கூறப்படுகிறது.