Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஸ்மார்ட் டிவி வாங்க போறீங்களா? ரூ.20,000க்கும் குறைவான விலையில் டாப் 5 மாடல்கள்

Budget-Friendly Smart TV: குறைந்த விலையில் தரமான அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் டிவிக்களை தேடுகிறீர்களா? இந்தப் பதிவில் ரூ.20,000க்கும் குறைவான விலையில் சிறந்த காட்சி அனுபவத்தைக் கொடுக்கும் சிறந்த ஸ்மார்ட் டிவிக்களை பார்க்கலாம். வாடிக்கையாளர்களின் விமர்சனங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் டிவி வாங்க போறீங்களா? ரூ.20,000க்கும் குறைவான விலையில் டாப் 5 மாடல்கள்
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 10 Apr 2025 16:28 PM

இப்பொழுது மக்களின் ரசனை முழுவதுமாக மாறி மாறி வருகிறது. முன்பு போல் டிவி சேனல்கள் மட்டுமல்லாமல் ஓடிடி (OTT) தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் போன்றவை அதிகம் பார்க்க தொடங்கியிருக்கின்றனர். இதனால் ஸ்மார்ட் டிவி ஒரு குடும்பத்தின் முக்கிய தேவைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. ஸ்மார்ட் டிவி மூலம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களை நேரடியாக அணுக முடியும். மொபைல் அல்லது லேப்டாப் போன்ற சிறிய திரையில் படங்களைப் பார்ப்பதைவிட, ஸ்மார்ட் டிவியின் (Smart TV) பெரிய திரையில் குடும்பத்துடன் சேர்ந்து நமக்கு விருப்பமான திரைப்படங்களை பார்த்து ரசிக்க முடியும். இந்த நிலையில் ஏப்ரல், 2025ன் படி ரூ.20,000க்கும் குறைவான விலையில் சிறந்த ஸ்மார்ட் டிவிகளை இந்த பதிவில் பார்க்கலாம். இவை அனைத்தும் வாடிக்கையாளர்களின் விமர்சனங்களை அடிப்படையாகக் கொண்டு கொடுக்கப்பட்டிருக்கிறது.

1.ரெட்மி 32-இஞ்ச் ஸ்மார்ட் எல்இடி டிவி (Redmi 32 Inch LED TV)

ரெட்மியின் இந்த 32-இஞ்ச் ஸ்மார்ட் டிவி,  எச்டி தரத்துடன், ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளத்துடன் கிடைக்கிறது. இந்த டிவியில் உங்களுக்கு பிடித்த ஓடிடி தளங்களை நேரடியாக அணுக முடியும். மேலும் இதில் கூகுள் அசிஸ்டென்ட், 20 வாட்ஸ் டால்பி ஆடியோ ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இது உங்களுக்கு சிறப்பான காட்சி அனுபவத்தைக் கொடுக்கும். சந்தையில் இதன் விலை ரூ. 11, 999க்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

2. ரியல்மி நியோ ஸ்மார்ட் டிவி (realme Neo 32 Inch Smart TV)

ரியல்மி நியோ 32 இஞ்ச் ஸ்மார்ட் டிவி bezel-less டிசைனில் வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சங்களில் ஒன்று. எச்டி ரெடி டிஸ்பிளே மற்றும் 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இது லினக்ஸ் இயங்குதளம் கொண்டு செயல்படுகிறது. இதன் விலை ரூ. 12, 999  என்று கூறப்படுகிறது

3. ஒன்பிளஸ் ஒய் சீரிஸ் 32 இஞ்ச் ஸ்மார்ட் டிவி (OnePlus Y Series 32 Inch Smart TV )

ஒன்பிளஸ் ஒய் சீரிஸ் ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்கு தளத்தில் செயல்படுகிறது. இதில் கூகுள் அசிஸ்டென்ட், ஆக்ஸிஜன் பிளே போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதில் உள்ள டால்பி ஆடியோ மற்றும் எச்டி ரெடி எல்இடி டிஸ்பிளே உங்களுக்கு சிறப்பான காட்சி அனுபவத்தைக் கொடுக்கும். இதன் விலை ரூ. 14, 999 என கூறப்படுகிறது.

4. சாம்சங் 32 இஞ்ச் வொண்டர்டெயின்மென்ட் ஸ்மார்ட் டிவி (Samsung 32-Inch Wondertainment Smart TV)

சாம்சங்கின் இந்த எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி Tizen இயங்கு தளத்தில் செயல்படுகிறது. இதில் ஸ்மார்ட் ஹப் மூலம் வீடியோ ஸ்ட்ரீமிங், ஆண்ட்ராய்ட் போனில் உள்ளது போல ஏகப்பட்ட செயலிகளை டவுன்லோட் செய்யும் வசதிகள் உள்ளது. மேலும் Screen Mirroring, PC Mode போன்றவை இதில் உள்ள கூடுதல் சிறப்புகளாகும். இதன் விலை ரூ. 15, 990 என்று கூறப்படுகிறது.

5. iFFALCON 40 இஞ்ச் ஸ்மார்ட் டிவி

டிசிஎல்-ன் இந்த iFFALCON 40 இஞ்ச் ஸ்மார்ட் டிவியில் எச்டி டிஸ்பிளே (1920 x 1080) டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளத்தில் செயல்படுகிறது. இதில் வாய்ஸ் கண்ட்ரோல், டால்பி ஆடியோ, கூகுள் ப்ளே ஸ்டோர் போன்ற வசதிகள் உள்ளன. குறைந்த விலையில் நல்ல தரத்துடன் கூடிய டிவி வாங்க வேண்டும் என்பவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு. இதன் விலை ரூ. 18, 999 என கூறப்படுகிறது.

முந்தானை முடிச்சு படம் குறித்து நடிகை ஊர்வசியின் கலகலப்பான பேச்சு
முந்தானை முடிச்சு படம் குறித்து நடிகை ஊர்வசியின் கலகலப்பான பேச்சு...
மருத்துவமனை ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
மருத்துவமனை ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை...
கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா
கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா...
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!...
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!...
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?...
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை......
சென்னையில் கனமழை தொடரும்.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
சென்னையில் கனமழை தொடரும்.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!...
சம்மர் விடுமுறையை டெல்லியை சுற்றியும் கொண்டாடலாம் வாங்க..!
சம்மர் விடுமுறையை டெல்லியை சுற்றியும் கொண்டாடலாம் வாங்க..!...
நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!...