Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஏன் ப்ளூடூத் ஹெட்போன்கள் வாங்க கூடாது? 5 முக்கிய காரணங்கள்!

Bluetooth Headphones: பயணங்கள், உடற்பயிற்சி ஆகியவற்றின்போது ப்ளூடூத் ஹெட்போன்கள் பயனளித்தாலும் மற்ற நேரங்களில் வயர்டு ஹெட்போன்களே சிறந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக நல்ல ஆடியோ தரம், கேமிங் போன்றவற்றுக்கு வயர்டு ஹெட்போன்கள் நல்ல தேர்வாக பார்க்கப்படுகிறது. அதற்கான 5 காரணங்களையும் ப்ளூடூத் ஹெட்போன்களில் உள்ள பிரச்னைகளையும் இந்த பதவில் பார்க்கலாம்.

ஏன் ப்ளூடூத் ஹெட்போன்கள் வாங்க கூடாது? 5 முக்கிய காரணங்கள்!
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 14 Apr 2025 20:57 PM

ப்ளூடூத் ஹெட்போன்கள் (Bluetooth Headphones) பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கின்றன. சாதாரண ஹெட்போன்களில் வயர்களால் பல சிக்கல்களை சந்தித்து வருகிறோம். நமது செல்போன், லேப்டாப் (Laptop) ஆகியவற்றுடன் எப்பொழுதும கணெக்ட்டாக இருக்கும் என்பதால் அதனை பயன்படுத்தும்போது பிற வேலைகளை செய்வது சிக்கலானதாக இருக்கும்.  ஆனால் அன்றாட வேலைகளை செய்துகொண்டே போன் பேசுவது பாடல்கள் கேட்பது என பல வேலைகளுக்கு ப்ளூடூத் ஹெட்போன்கள் கைகொடுக்கின்றன. இதில் 8 மணி நேரம் முதல் 30 மணி நேரம் வரை பேட்டரி பேக்-அப் இருக்கும். பொதுவாக 10 மீட்டர் வரை செயல் படும்.  இதன் காரணமாக ப்ளூ டூத் ஹெட்போன்களை காதில் மாட்டிக்கொண்டு வாக்கிங், ஜாக்கிங் என பல வேலைகளை செய்யலாம்.  இவ்வளவு சிறப்பான அம்சங்கள் இருந்தும் ப்ளூடூத் ஹெட்போன்களால் பிரச்னைகளும் இருக்கின்றன.

பயணங்களின் போது ப்ளூடுத் ஹெட்போன்களை இயல்பாக பயன்படுத்த முடியும். ப்ளூடூத் ஹெட்போன்களில் வயர் இல்லை என்பதால் இடைஞ்சல் இல்லாமல் இசை கேட்கவும், கால் செய்யவும் வசதியாக இருக்கின்றன. வயர்டு ஹெட்போன்கள் ஒலி தரத்தில் சிறந்தவை என்றாலும், ப்ளூடூத் ஹெட்போன்கள் பயணத்திலும், உடற்பயிற்சிக்கும் ஏற்றவை. வயர் இல்லாத சுதந்திரம், நீண்ட பேட்டரி ஆயுள் ஆகியவை ப்ளூடூத் ஹெட்போன்களின் முக்கிய நன்மைகள் ஆகும்.

ப்ளூடூத் ஹெட்போன்களில் உள்ள பிரச்னைகள்

  • இவ்வளவு நன்மைகள் இருப்பினும் ப்ளூடூத் ஹெட்போன்களால் பிரச்னைகளும் இருக்கின்றன. பொதுவாக ப்ளூடூத் ஹெட்போன்களில் வயர்டு ஹெட்போன்களில் இருப்பது போல ஆடியோவின் தரம் குறைவாக இருக்கும். இசைப் பிரியர்களுக்கு இது பெரிய குறை.
  • பேட்டரியை நம்பி இயங்கும் என்பதால் முக்கியமான நேரங்களில் பேட்டரி சார்ஜ் இல்லாமல் போக வாய்பிருக்கிறது. இது சமயங்களில் மோசமான அனுபவங்களைக் கொடுக்கும்.
  • சில நேரங்களில் கனெக்டிங் பிரச்னை இருக்கிறது. அதனால் முக்கியமான நேரங்களில் கனெக்ட் ஆக முடியாமல் போக வாய்ப்பிருக்கிறது.
  • வயர்டு ஹெட்போன்களை ஒப்பிடும்போது இந்த ப்ளூடூத் ஹெட்போன்கள் விலை அதிகமாக இருக்கும். ஆனால் அதற்கு ஏற்ப வசதிகள் குறைவாகவே இருக்கும்.
  • சில டிவைஸ்களோடு pairing செய்ய முடியாமல் இருக்கலாம். சில நேரம் auto-disconnect, pairing issues, range problem இவையும் வரலாம்.

பயன்பாடுகளுக்கு ஏற்ப தேர்வு செய்வது நல்லது

ப்ளூடூத் ஹெட்போன்கள் பயணங்களின் போது, உடற்பயிற்சியின் போது பயன்படுத்த சிறந்தவை. ஆனால், நல்ல ஆடியோ தரம், கேமிங் போது பயன்படுத்த, தாமதம் இல்லாத சவுண்ட் கிடைக்க, நீண்ட நேரம் பயன்படுத்த வேண்டியதானால் வயர்டு ஹெட்போன்கள் தான் சிறந்த தேர்வு. நீங்கள் எந்த வகை பயனர் என்பதற்கு ஏற்ப ஹெட்போன்களை தேர்வு செய்வது நல்லது. குறிப்பாக பயணங்கள், உடற்பயிற்சி ஆகியவற்றை தவிர பிற அனைத்து வேலைகளுக்கும் வயர்டு ஹெட்போன்கள்தான் சிறந்ததாக கருதப்படுகிறது. எனவே அதனை தேர்வு செய்வதே சிறந்ததாக கருதப்படுகிறது.

வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா..? இந்த 7 பழக்க வழக்கங்கள் போதும்..
வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா..? இந்த 7 பழக்க வழக்கங்கள் போதும்.....
2025 அட்சயத் திரிதியை எப்போது?.. அந்த நாளின் முக்கிய நிகழ்வுகள்!
2025 அட்சயத் திரிதியை எப்போது?.. அந்த நாளின் முக்கிய நிகழ்வுகள்!...
சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டும் மழை
சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டும் மழை...
கிராம நிலம் வக்ஃப் சொத்து? – அச்சத்தில் மக்கள்..!
கிராம நிலம் வக்ஃப் சொத்து? – அச்சத்தில் மக்கள்..!...
டி.ராஜேந்தர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்
டி.ராஜேந்தர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்...
தோல்வியில் இருந்து மீளுமா RR..? தாக்குதல் தொடுக்குமா DC..?
தோல்வியில் இருந்து மீளுமா RR..? தாக்குதல் தொடுக்குமா DC..?...
பாஜகவுடன் கூட்டணி ஆட்சியா? இபிஎஸ் பரபரப்பு பதில்!
பாஜகவுடன் கூட்டணி ஆட்சியா? இபிஎஸ் பரபரப்பு பதில்!...
உண்மையான கராத்தே பாபு இவரா? நடிகர் ரவி மோகன் சொன்ன கலகல சம்பவம்!
உண்மையான கராத்தே பாபு இவரா? நடிகர் ரவி மோகன் சொன்ன கலகல சம்பவம்!...
இனி தமிழில் தான் கையெழுத்து... அரசு அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு
இனி தமிழில் தான் கையெழுத்து... அரசு அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு...
ரேஷன் கடையில் ஒரே நாளில் அனைத்து பொருளும் கிடைக்குமா?
ரேஷன் கடையில் ஒரே நாளில் அனைத்து பொருளும் கிடைக்குமா?...
வெளுக்கப்போகும் தென்மேற்கு பருவமழை.. தமிழகத்தில் எப்படி?
வெளுக்கப்போகும் தென்மேற்கு பருவமழை.. தமிழகத்தில் எப்படி?...