1.5 டன் ஏசி பயன்படுத்துகிறீர்களா? மாத மின் கட்டணம் எவ்வளவு ஆகும்? தவிர்ப்பது எப்படி?

Electricity Usage of a 1.5 Ton AC: வெயில் காலங்களில் ஏசியின் பயன்பாட்டை தவிர்க்க முடியாது. 1.5 டன் ஏசியை சராசரியாக 10 மணி நேரம் பயன்படுத்தும்போது 22.5 யூனிட்ஸ் மின்சாரம் செலவாகும். இதனால் மாதத்துக்கு எவ்வளவு மின் கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்? அதனை தவிர்ப்பது எப்படி என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

1.5 டன் ஏசி பயன்படுத்துகிறீர்களா? மாத மின் கட்டணம் எவ்வளவு ஆகும்? தவிர்ப்பது எப்படி?

மாதிரி புகைப்படம்

Published: 

28 Apr 2025 16:51 PM

கோடைகாலம் (Summer) வந்தவுடன் ஏசி (AC), ஏர் கூலர் (Air Cooler), ஃபேன் போன்ற மின் சாதனங்களை வழக்கத்தை விட அதிகமாக பயன்படுத்துகிறோம். குறிப்பாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வெப்பத்தின் காரணமாக ஏசி போன்ற மின் சாதனங்கள் இல்லாமல் இருக்க முடியாது. அதனால் அந்த காலங்களில் மின்சாரக் கட்டணமும் அதிகரிக்கும். குறிப்பாக வெயில் காலங்களில் ஏசியை பயன்படுத்தாமல் தவிர்க்க முடியாது. அதிலும் ஒருவர் தனது வீட்டில் 1.5 டன் எசியைப் பயன்படுத்துகிறார் என்றால் அதனால் மின் பயன்பாடு அதிகரித்து மின் கட்டணமும் அதிகரிக்கும். குறிப்பாக 1.5 டன் ஏசியானது ஒரு மணி நேரத்தில் 2.25 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்துகிறது.

1.5-டன் AC இல் மின்சாரம் பயன்படுத்தும் அளவு:

இந்தியா டிவி இணையதளத்தில் வெளியான கட்டுரையின் படி ஒரு 1.5 டன் ஏசி ஆனது  ஒரு மணி நேரத்திற்கு சுமார் 2.25 யூனிட்ஸ் மின்சாரம் பயன்படுத்துகிறது. இதன் பொருள், நீங்கள் ஒரு நாளில் 8 முதல் 10 மணி நேரம் ஏசி பயன்படுத்துகிறீர்கள் என்றால் 30 நாட்களுக்கு 675 யூனிட்ஸ் மின்சாரம் பயன்படுத்தப்படும். இதன் மூலம் மாதம் சுமார் ரூ. 4725 வரை செலவு செய்ய வேண்டியிருக்கும்.

பயன்பாட்டுக்கு ஏற்ப அதிகரிக்கும் மின் கட்டணம்

ஒரு நாளைக்கு 6 மணி நேரம் ஏசி பயன்படுத்துகிறீர்கள் என்றால் ஒரு மாதத்துக்கு மொத்தம் 405 யூனிட்ஸ் மின்சாரம் பயன்படுத்தப்படும். அதன் மூலம் ரூ.  2,835 மின் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் பயன்படுத்தினால் மாதத்துக்கு 540 யூனிட்ஸ் மின்சாரம் செலவாகும். அதன் படி ரூ.3780 செலவாகும். 12 மணி நேரம் பயன்படுத்தினால் மாத்துக்கு 810 யூனிட்ஸ் மின்சாரம் செலவாகும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 5,670 செலவாகும்.  இதோடு,  பிற பயன்பாடுகளுக்கான மின்சாரத்தையும் சேர்த்து மொத்தமாக ஒரு வீட்டுக்கு ரூ.6, 000 முதல் ரூ. 8000 வரை மின் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

மின் கட்டணத்தைக் குறைக்க சில டிப்ஸ்

  • இன்வெர்டர் தொழில்நுட்பம் கொண்ட AC வாங்கி பயன்படுத்துவதன் மூலம் அது மின்சாரத்தை குறைக்கும் வழி செய்யும்.
  • ஏசியை தேவைப்படும்போது பராமரிப்பது அவசியம். குறிப்பாக ஏசியில் தூசி படிந்தால் அதன் குளிரூட்டும் திறன் குறைந்து அதிக நேரம் பயன்படுத்த வேண்டியிருக்கும். இதனால் அதன் செயல்திறனை அதிகரிக்க அடிக்கடி குளிரூட்டுவது அவசியம்.
  • மேலும் 23 முதல் 26 புள்ளிகள் வெப்பநிலையிலேயே ஏசியைப் பயன்படுத்தவும்.
  • அதிக வெப்பத்தை வெளியிடும் சாதனங்களை ஏசி அறையில் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)