தேனியில் பயங்கரம்.. பெண் காவலரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்.. நடந்தது என்ன?

Theni Crime News : தேனி மாவட்டத்தில் பெண் காவலரை மர்ம நபர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்விரோதம் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த குபேந்திரன் என்பவர் பெண் காவலரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனை அடுத்து, அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தேனியில் பயங்கரம்.. பெண் காவலரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்.. நடந்தது என்ன?

மாதிரிப்படம்

Updated On: 

24 Apr 2025 08:53 AM

தேனி, ஏப்ரல் 24: தேனி மாவட்டத்தில் பெண் காவலர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பலத்த காயம் அடைந்த பெண் காவலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  முன்விரோதமாக  இந்த தாக்குதல் நடந்து இருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர்.  தேனி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அம்பிகா (43). இவர் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு

இந்த நிலையில், 2025 ஏப்ரல் 23ஆம் தேதி இரவு மர்ம நபர் ஒருவர் இவரிடம் பேச்சு கொடுத்து, கையில் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனை அடுத்து, மர்ம நபர் தப்பிச் சென்றுள்ளார்.

ரத்த காயங்களுடன் கிடந்த பெண் காவலை  அக்கம் பக்கத்தினர் மீது தேனி அரசு மருத்துவமனையில்  அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த 55 வயதான குபேந்திரன் என்பவரை கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக, குபேந்திரன், பெண் காவலர் அம்பிகாவை அரிவாளால் வெட்டி இருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர். பெண் காவலர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனியில் பயங்கரம்

தமிழகத்தில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக, தென் மாநிலங்களில் அடுத்தடுத்து நடக்கும் கொலை சம்பவங்கள் மாநிலத்தையே அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க மாநில அரசும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இருப்பினும், கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றன. இந்த நிலையில்,  தேனியில் பெண் காவலர் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளார்.

அண்மையில் கூட, நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக, ஓய்வு பெற்ற உதவிக் காவலர் ஆய்வாளர் ஜாகீர் உசேனை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.  இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும், நெல்லையில், பென்சில் தொடர்பாக இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில், சக மாணவன் அரிவாளால் வெட்டப்பட்டார். 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை, சக மாணவன் பள்ளி வளாகத்திலேயே அரிவாளால் வெட்டியுள்ளார். இதன்பின்பு, அரிவாளுடன் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். தனியார் பள்ளியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.