தமிழக பாஜகவின் தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. இன்று வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Tamil Nadu BJP President Nainar Nagendran: தமிழக பாஜகவின் தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்க உள்ளார். இதற்கான அறிவிப்பை பாஜக மேலிடம் 2025 ஏப்ரல் 12ஆம் தேதியான இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பதவியேற்பு விழாவில் இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

நயினார் நாகேந்திரன்
சென்னை, ஏப்ரல் 12: தமிழக பாஜகவின் தலைவராக (Tamil Nadu BJP President) நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran) 2025 ஏப்ரல் 12ஆம் தேதியான இன்று பொறுப்பேற்க உள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின், 2025 ஏப்ரல் 12ஆம் தேதி (இன்று) மாலை பதவியேற்பு விழாவும் நடைபெற உள்ளது. இதன் மூலம் தமிழக பாஜகவின் 13வது தலைவராகிறார் நயினார் நாகேந்திரன். தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்த நிலையில், பாஜக மாநில தலைவர் மாற்றப்பட்டுள்ளது.
தமிழக பாஜகவின் தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்
கட்சி நலனுக்காக இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது, பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலையும், எடப்பாடி பழனிசாமி ஒரு சமூக பின்னணியை கொண்டவர்கள் என்பதால் இது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், பாஜக மாநில தலைவரை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதனால், அதற்கான தேர்தலையும் பாஜக மேலிடம் அறிவித்தது. அதன்படி, 2025 ஏப்ரல் 11ஆம் தேதி பாஜக மாநில தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் நடந்தது. இதில், நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவர் பாஜக மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2025 ஏப்ரல் 12ஆம் தேதியான இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இன்று மாலையில் பதவியேற்பு விழாவும் நடைபெறுகிறது. இதன்மூலம் தமிழக பாஜகவின் 13வது தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.
யார் இந்த நயினார் நாகேந்திரன்?
நயினார் நாகேந்திரன் தமிழ்நாட்டின் பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக உள்ளார். 2001 முதல் 2006 வரை அதிமுலை தலைமையிலான ஆட்சியில் அமைச்சராக இருந்தார். திருநெல்வேலி தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.
2001 முதல் 2006 வரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, மின்சாரம், தொழில்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார். 2011 ஆம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது நாகேந்திரன் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.
2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் சேர்ந்தார். நயினார் நாகேந்திரன் 2020 முதல் தமிழ்நாடு பாஜகவின் துணைத் தலைவராகப் பணியாற்றினார். 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.
இந்த நிலையில், நயினார் நாகேந்திரன் தமிழக பாஜகவின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இவர் தென் தமிழகத்தில் செல்வாக்கு மிக நபராக இருக்கிறார். மேலும், அதிமுகவில் ஏற்கனவே இருந்ததால், அக்கட்சி தலைவர்களுடன் நெருக்கமான உறவில் இருந்து வருகிறார். இது அந்த கூட்டணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தென் மண்டலத்திலும், கொங்கு மண்டலத்தில் இந்த கூட்டணிக்கு பலமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.