Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

”மலரும் புன்னகை” ஏத்துப்பல் இருக்கும் மாணவர்களுக்கு இலவச சிகிச்சை.. கலெக்டரின் புதிய முயற்சி!

Malarum Punnagi Scheme : விருதுநகர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் எத்துப்பல் கொண்ட மாணவர்களுக்கு 'மலரும் புன்னகை' திட்டத்தின் கீழ் இலவசமாக Braces பொருத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கூறியுள்ளார். தனியார் மருத்துவமனையில் ரூ.30,000 வரை செலவாகும் இச்சிகிச்சையை, இலசமாக மாணவர்களுக்கு சிஎஸ்ஆர் நிதியின் மூலம் சிகிச்சை அளித்து வருகிறார்.

”மலரும் புன்னகை” ஏத்துப்பல் இருக்கும் மாணவர்களுக்கு இலவச சிகிச்சை.. கலெக்டரின் புதிய முயற்சி!
விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன்Image Source: X
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 17 Apr 2025 10:52 AM

விருதுநகர், ஏப்ரல் 17: விருதுநகர் மாவட்டத்தில் ‘மலரும் புன்னகை’ என்ற திட்டத்தின் (Malarum Punnagi Scheme) மூலம் மாணவர்களுக்கு பல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, விருதுநகர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எத்துப்பல் பிரச்னைக்கு சிகிச்சை இலவச அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 600 மாணவர்களுக்கு ஏத்துப்பல் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார். மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனின் (virudhunagar collector Jayaseelan) முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ஏத்துப்பல் இருக்கும் மாணவர்கள்

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்காக பள்ளிக்கல்வித்துறை, சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்த மருத்துவ முகாம்கள் மாணவர்கள் கண், காது, மூக்கு என உடல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக பல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  மாணவ, மாணவியர்களுக்கு இருக்கும் பல் பிரச்னைகளை கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

குறிப்பாக, ஏத்துப்பல் இருக்கும் மாணவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கன முயற்சியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் எடுத்தார்.  ‘மலரும் புன்னகை’ என்ற திட்டத்தின் மூலம்  ஏத்துப்பல்லுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட கலெக்டர் எடுத்த புதிய முயற்சி

Protruding teeth (எத்துப்பல்) are not covered under existing health schemes or insurance, as they’re considered cosmetic. Braces typically cost Rs 20,000–30,000 in private clinics, making them unaffordable for many.

In Virudhunagar, we identified 600 such cases among poor… pic.twitter.com/B2wxUJU85E

— Dr V P Jeyaseelan (@jeyaseelan_vp) April 16, 2025

2024ஆம் ஆண்டு விருதுநகரில் ஒரு பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் ஜெயசீலன், மாணவி தனது பற்களை மறைக்க முயற்சிப்பதை கவனித்தார். இதுகுறித்து கூறிய அவர்,”ஏத்துப்பல் இருக்கும் மாணவர்கள் சிரிப்பதற்கு மட்டுமல்ல, மற்றவர்களிடம் பேசுவதற்கும் கூட தயங்குவார்கள்.

சக மாணவர்கள் தங்கள் நீண்டுகொண்டிருக்கும் பற்களைப் பார்த்து கேலி செய்வதால், மாணவர்கள், மிகச் சிறிய வயதிலேயே, தங்கள் தன்னம்பிக்கையை இழக்கிறார்கள்” என்றார். மேலும், “ஏத்துப்பல்லுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டால் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை செலவு செய்ய வேண்டியிருக்கும்.

இது அனைவராலும் செய்ய முடியாது. எனவே, விருதுநகரில் மலரும் புன்னகை என்ற திட்டத்தின் கீழ் 600 மாணவர்கள் கண்டறிந்து  அவர்களுக்கு இலவசமாக ஏத்துப்பல்லுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார். சிஎஸ்ஆர் நிதியின் மூலம் 600 மாணவர்களுக்கு braces பொருத்தப்பட்டு உள்ளது.  மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனின் முயற்சிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். திமுக அமைச்சர்கள் தங்கள் தென்னரசு, ராமச்சந்திரன் உள்ளிட்டோர் அவரது  முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

4 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்!
4 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்!...
இந்த 3 பறவைகள் கனவில் வந்தால் நல்லது நடக்கும்!
இந்த 3 பறவைகள் கனவில் வந்தால் நல்லது நடக்கும்!...
குன்றின் மேல் குடியிருக்கும் வீர ஆஞ்சநேயர்.. இந்த கோயில் தெரியுமா
குன்றின் மேல் குடியிருக்கும் வீர ஆஞ்சநேயர்.. இந்த கோயில் தெரியுமா...
ஒற்றுமை “ஒரே கோயில், ஒரே கிணறு, ஒரே சுடுகாடு” -மோகன் பகவத் பேச்சு
ஒற்றுமை “ஒரே கோயில், ஒரே கிணறு, ஒரே சுடுகாடு” -மோகன் பகவத் பேச்சு...
முதலிடத்தை தக்க வைக்க விரும்பும் GT.. டஃப் கொடுக்குமா KKR..?
முதலிடத்தை தக்க வைக்க விரும்பும் GT.. டஃப் கொடுக்குமா KKR..?...
சந்தானம் படத்தின் இயக்குநருடன் இணையும் நடிகர் ரவி மோகன்?
சந்தானம் படத்தின் இயக்குநருடன் இணையும் நடிகர் ரவி மோகன்?...
ஏப்ரல் 26, 27-ல் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம்!
ஏப்ரல் 26, 27-ல் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம்!...
களைகட்டும் மதுரை சித்திரைத்திருவிழா 2025: முன்னேற்பாடுகள் தீவிரம்
களைகட்டும் மதுரை சித்திரைத்திருவிழா 2025: முன்னேற்பாடுகள் தீவிரம்...
தொடர்ந்து சாதனை படைக்கும் அஜித்... பெல்ஜியம் ரேஸிலும் வெற்றி!
தொடர்ந்து சாதனை படைக்கும் அஜித்... பெல்ஜியம் ரேஸிலும் வெற்றி!...
திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!
திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!...
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!...