PM Modi Condolences: தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு நினைவுகூரப்படுவார்.. குமரி அனந்தனின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்!

Veteran Congress Leader Kumari Ananthan: சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள முன்னாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் வீட்டில் குமரி ஆனந்தனின் உடலானது அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மறைவிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் எழுதி இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார்.

PM Modi Condolences: தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு நினைவுகூரப்படுவார்.. குமரி அனந்தனின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்!

பிரதமர் நரேந்திர மோடி - குமரி அனந்தன்

Updated On: 

09 Apr 2025 17:09 PM

சென்னை, ஏப்ரல் 9: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் (Kumari Ananthan) 2025 ஏப்ரல் 9ம் தேதியான இன்று அதிகாலை 12.15 மணிக்கு காலமானார். வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களாக குமரி ஆனந்தனுக்கு சிறுநீரக பிரச்சனை இருந்து வந்த நிலையில், அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்தநிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், இன்று (ஏப்ரல் 09, 2025) அதிகாலை 12.15 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள முன்னாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் வீட்டில் குமரி ஆனந்தனின் உடலானது அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி (PM Modi Condolences), காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மறைவிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் எழுதி இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தமிழில் இரங்கல் பதிவு:

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது..

  • குமரி அனந்தன் அவர்கள், மதிப்புமிகு சமூக சேவைக்காகவும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான ஆர்வத்திற்காகவும் நினைவுகூரப்படுவார்.
  • தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் பிரபலப்படுத்துவதற்காகவும் அவர் பல முயற்சிகளை மேற்கொண்டார்.
  • அவரது மறைவு வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.

யார் இந்த குமரி அனந்தன்..?

கடந்த 1933ம் ஆண்டு குமரி அனந்தன் தமிழ் மீது அதிக காதல் கொண்டவர். இதன் காரணமாகவே, தனது மகளுக்கு தமிழிசை என்று பெயர் வைத்தார். குமரி ஆனந்தன் எம்.பி மற்றும் எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். 1977ம் ஆண்டு நாகர்கோவில் தொகுதியிலிருந்து முதன்முதலில் எம்.பியாகவும், 1980ம் ஆண்டு திருவொற்றியூர் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏவாகவும் மக்களவை மற்றும் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கொள்கை ரீதியாக தீவிர காந்தியவாதியான குமரி அனந்தன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் தமிழ்நாடு பனை மர தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவராக இருந்தார். குமரி அனந்தனின் முழு குடும்பம் அரசியலில் உள்ளது. அவரது மகளான தமிழிசை சௌந்தரராஜன் பாஜகவை சேர்ந்தவர். அவரது தம்பி மகன் விஜய் வசந்த் தற்போது கன்னியாகுமரி தொகுதியின் எம்.பியாக உள்ளார். அவரது தம்பி வசந்தகுமார் கன்னியாகுமரி தொகுதியின் எம்பியாக இருந்தார்.

முன்னதாக அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தீவிர தேசியவாதியான குமரி அனந்தனின் மறைவு தமிழ்நாட்டிற்கும், இலக்கிய உலகிற்கும் மிகப்பெரிய இழப்பு” என்று தெரிவித்திருந்தார்.