Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மருதமலை முருகன் கோயிலுக்கு இனி கார்களில் செல்ல தடை…

Coimbatore Marudhamalai Murugan Temple: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் திருப்பணி காரணமாக, விசேஷ நாட்களில் நான்கு சக்கர வாகனங்கள் மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கோவில் பேருந்துகள் அல்லது படிப்பாதை வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக கழிவுகள் அகற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மருதமலை முருகன் கோயிலுக்கு இனி கார்களில் செல்ல தடை…
மருதமலை முருகன் கோயிலுக்கு கார்களில் செல்ல தடைImage Source: pinrest
sivasankari-bose
Sivasankari Bose | Published: 18 Apr 2025 22:40 PM

கோவை ஏப்ரல் 18: கோவை (Coimbatore) மருதமலை சுப்பிரமணியசுவாமி (Maruthamalai Subramanian Swamy) கோவிலில், விசேஷ தினங்களில் நான்கு சக்கர வாகனங்களுக்கு மலைப் பாதையில் செல்ல தடை (Prohibition on mountain paths) விதிக்கப்படுகிறது. திருப்பணி காரணமாக, செவ்வாய், ஞாயிறு, கிருத்திகை, சஷ்டி, அரசு விடுமுறை நாட்களில் இத்தடை அமலில் இருக்கும். பக்தர்கள் கோவில் பேருந்துகள் அல்லது படிப் பாதை வழியாக மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படும். இந்த நடவடிக்கை வாகன நெரிசலைத் தவிர்க்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அடிவார பகுதியில் கழிவுகள் கொட்டுவதால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுவதும் கவலைக்குரியது. நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், பக்தர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மலை பாதையில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை

கோவை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், முக்கிய விசேஷ தினங்களில் மலை பாதையில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. முருகனின் ஆறு படைவீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த கோவிலுக்கு, தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகை தருகின்றனர். கிருத்திகை, சஷ்டி, செவ்வாய் கிழமைகள், தைப்பூசம் போன்ற திருநாள்களிலும், அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களிலும் பக்தர்கள் பெருமளவில் திரண்டுவருவது வழக்கம்.

பக்தர்களின் வசதிக்காக அடிவாரத்தில் இருந்து கோவில் பேருந்துகள் இயக்கம்

பக்தர்களின் வசதிக்காக அடிவாரத்தில் இருந்து கோவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் சென்றும் பக்தர்கள் கோவிலுக்கு செல்லலாம். இத்துடன், சிலர் படிப் பாதை வழியாக நடந்து சென்று தரிசனம் செய்கிறார்கள். தற்போது கோவிலில் திருப்பணி நடைபெற்று வரும் காரணத்தால், மலைப் பாதையில் வாகன ஓட்டத்தில் இடையூறுகள் ஏற்படுவதால், நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.

முக்கிய நாட்களில் அனுமதி வழங்கப்படமாட்டாது

இதனைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருப்பணிகள் மற்றும் வாகன நெரிசலால், முக்கிய நாட்களில் நான்கு சக்கர வாகனங்களுக்கு மலைப்பாதையில் செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிப் பாதை வழியாக மட்டுமே கோவிலுக்கு செல்ல வேண்டும்

குறிப்பாக செவ்வாய்க்கிழமைகள், ஞாயிற்றுக்கிழமைகள், கிருத்திகை, சஷ்டி மற்றும் அரசு விடுமுறை தினங்களில் இந்த தடை அமலில் இருக்கும். ஆகையால், அந்நாள்களில் பக்தர்கள் கோவில் பேருந்துகள் அல்லது படிப் பாதை வழியாக மட்டுமே கோவிலுக்கு செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருதமலை கோயிலில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன. முக்கிய நாட்களில் மலைக் கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை என அறிவிப்பு வெளியாகி உள்ளது. பக்தர்கள் மலைப்படிகள் வழியாகவும் கோயில் பேருந்து மூலம் சென்று தரிசனம் செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதால் நடவடிக்கை

மேலும், மருதமலை அடிவார பகுதியில் கொட்டப்படும் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவும், இதற்கும் கோவில் நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சத்தில் மீன் விலை.. சிக்கன் வைத்து இப்படி செஞ்சு பாருங்க!
உச்சத்தில் மீன் விலை.. சிக்கன் வைத்து இப்படி செஞ்சு பாருங்க!...
PPFல் தம்பதிகள் ரூ.1 கோடி லாபம் பெறுவது எப்படி?
PPFல் தம்பதிகள் ரூ.1 கோடி லாபம் பெறுவது எப்படி?...
உலக கல்லீரல் தினத்தில் பிரதமர் மோடி குடிமக்களுக்கு அட்வைஸ்!
உலக கல்லீரல் தினத்தில் பிரதமர் மோடி குடிமக்களுக்கு அட்வைஸ்!...
அறுந்த மின்கம்பி! தெரியாமல் கால் வைத்த சிறுவனை மீட்ட இளைஞர்!
அறுந்த மின்கம்பி! தெரியாமல் கால் வைத்த சிறுவனை மீட்ட இளைஞர்!...
எனக்கு நடிக்கவே ஆசை இல்லை.. எல்லாம் அவரால்தான்.. நடிகை ஜோதிகா!
எனக்கு நடிக்கவே ஆசை இல்லை.. எல்லாம் அவரால்தான்.. நடிகை ஜோதிகா!...
உலக அளவில் மோகன்லாலின் எல்2: எம்புரான் இதுவரை செய்த வசூல்?
உலக அளவில் மோகன்லாலின் எல்2: எம்புரான் இதுவரை செய்த வசூல்?...
ஆப்கானிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம்.. இந்தியாவிலும் அதிர்வு!
ஆப்கானிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம்.. இந்தியாவிலும் அதிர்வு!...
சங்கமித்ரா திரைப்படம் மீண்டும் உருவாகிறதா? இயக்குநர் சுந்தர் சி!
சங்கமித்ரா திரைப்படம் மீண்டும் உருவாகிறதா? இயக்குநர் சுந்தர் சி!...
நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது பரபரப்பு - பரபரப்பு வாக்குமூலம்!
நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது பரபரப்பு - பரபரப்பு வாக்குமூலம்!...
கோடையில் மாம்பழம் ருசிக்க ஆசை? இப்படி செய்தால் ஆரோக்கியம் கெடாது!
கோடையில் மாம்பழம் ருசிக்க ஆசை? இப்படி செய்தால் ஆரோக்கியம் கெடாது!...
2025-ல் அதிக கூலிங் கொடுக்கக் கூடிய டாப் 5 சிறந்த ஏசிகள் !
2025-ல் அதிக கூலிங் கொடுக்கக் கூடிய டாப் 5 சிறந்த ஏசிகள் !...