Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திமுக – விசிக இடையே ஏற்படும் விரிசல்.. திருமாவளவன் சொன்னது என்ன? கூட்டணி தொடருமா?

Thirumavalavan: தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசிய காணொளியில், விசிக, திமுகவை நம்பி இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள் என தெரிவித்திருந்தார். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக – விசிக இடையே ஏற்படும் விரிசல்.. திருமாவளவன் சொன்னது என்ன? கூட்டணி தொடருமா?
திருமாவளவன்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 21 Apr 2025 19:45 PM

சென்னை, ஏப்ரல் 21: திராவிட முன்னேற்ற கழக (Dravida Munnetra Kazhagam) கூட்டணியில் கருத்து வேறுபாடு இருப்பது தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதற்கு சான்றாக விடுதலை சிறுத்தை (Viduthalai Siruthai Katchi) கட்சி தலைவர் தொல் திருமாவளவன் சமீபத்தில் வெளியிட்டிருந்த வீடியோ தான். அதில் அவர் திமுக கூட்டணி பற்றி கருத்தை தெரிவித்து இருந்தார். அதாவது கூட்டணி கொள்கை என்பது வேறு, முரண் என்பது வேறு என்பதை நிர்வாகிகள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. திருமாவளவனின் இந்த கருத்து அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் 2026:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சிகளும் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தேர்தலை சந்திப்பது, பூத் கமிட்டி ஏஜென்ட்கள் அமைப்பது, மக்கள் மனநிலை எப்படி உள்ளது, கூட்டணி பேச்சு வார்த்தை போன்றவற்றை அனைத்து கட்சிகளும் பேசி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலமே இருக்கும் நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது என்று சொல்லலாம்.

இதில் முக்கியமாக தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக சமீபத்தில் பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்தது. தமிழ்நாட்டிற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்திருந்தபோது எடப்பாடி தலைமையில் இந்த கூட்டணி முடிவானது. மேலும் தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி அதிமுக அமைக்கும் எனவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டு இருந்தார்.

இது ஒரு பக்கம் இருக்க தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அண்மையில் தனது எக்ஸ் தல பக்கத்தில் பிரதமர் மோடி தனக்கு சகோதரர் போன்றவர் என்றும். கேப்டன் விஜயகாந்த் தமிழ்நாட்டின் சிங்கம் என பிரதமர் அழைப்பார் எனவும் குறிப்பிட்டிருந்தார். இது மறைமுகமாக பாஜகவுடன் தேமுதிக கூட்டணி வைக்க ஒரு யுத்தி என அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

திமுக – விசிக இடையே இருக்கும் மோதல்:

இது போன்ற சூழலில் தான் திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூட்டணியில் சர்ச்சையை கிளப்பும் வகையில் ஒரு கருத்தை தெரிவித்து இருந்தார். ஏற்கனவே திமுகவிற்கும் விசிகவிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக பல காலங்களாக கூறப்பட்டு வருகிறது, இதற்கு முன்பாக மது ஒழிப்பு மாநாட்டிற்கு விசிக தலைவர் திருமாவளவன் அதிமுகவிற்கு அழைப்பு விடுத்தது. அப்போது கூட்டணி வேறு கட்சி கொள்கை என்பது வேறு என விளக்கி இருந்தார் திருமாவளவன். இந்த சம்பவத்தை தொடர்ந்து அவர் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்த அதற்கான விளக்கத்தை அளித்தார்

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விக்ரவாண்டியில் நடைபெற்ற பொழுது தவெக தலைவர் விஜய் விசிக்காவிற்கு மறைமுக அழைப்பு விடுத்தார். அதாவது தவெக உடன் எந்த கட்சி கூட்டணி அமைத்தாலும் ஆட்சியில் அதிகார பங்கு வழங்கப்படும் என குறிப்பிட்டிருந்தார். அதே சமயம் வீசிக்காகவும் கூட்டணி ஆட்சி அதாவது ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற ஒரு கருத்தை முன்னதாக தெரிவித்திருந்தது. அப்போது திமுகவிலிருந்து விசிக வெளியேறும் என பல கருத்துக்கள் வெளியானது. ஆனால் அந்த கருத்துக்கள் அனைத்தும் பொய் என்று உறுதி செய்யும் வகையில் வீசிக தலைவர் திருமாவளவன் மீண்டும் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணியில் தான் விடுதலை சிறுத்தை கட்சி தொடரும் என உறுதிப்பட தெரிவித்தார்.

திருமாவளவன் சொன்னது என்ன?


இப்படி பல்வேறு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில் திமுக கூட்டணி சற்று அமைதியாக சென்று கொண்டிருந்தது. ஆனால் சமீபத்தில் வீசிக தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில் திமுக கூட்டணி குறித்து கருத்தை பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவில் ” ஒரு சிலர் திமுகவை மட்டுமே நம்பி இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.  திமுக கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களிடம் உள்ள ஒரே துருப்புச் சீட்டு வீசிக தான்.  எந்த எதிர்பார்ப்பும் இன்றி கூட்டணியில் தொடர்கிறோம் என்றால் அதற்கு ஒரு துணிவு வேண்டும். தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் விசிகவால் எடுக்க முடியும். போராட்டங்கள் நடத்தலாம், நினைவேந்தல் நடத்தலாம். விசிகவின் தனித்துவத்தை கட்டி காப்பாற்றுவதில் கவனமாக இருக்க வேண்டும். விசிக நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்து விழாக்களில் பங்கேற்க செய்வது வேதனை அளிப்பதாகவும்” குறிப்பிட்டிருந்தார். அதோடு ஆளுங்கட்சியுடன் முரண் என்பது வேறு கூட்டணி கொள்கை என்பது வேறு என்பதை நிர்வாகிகள் உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் பேசி இருந்தார்.

இந்த கருத்து தற்போது அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திமுகவிற்கும் விசிகவிற்கும் இடையிலான கருத்து வேறுபாடு வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார் திருமாவளவன். வரும் சட்டமன்றத் தேர்தலில் விசிக திமுக கூட்டணியில் தொடருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கனவே இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று இருந்தாலும் திமுக கூட்டணியில் தான் வீசிக தொடரும் என திருமாவளவன் தெரிவித்திருந்த நிலையில் இந்த முறையும் அவ்வாறு அவர் கூற வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் செய்த சுப்மன், சுதர்சன்! கொல்கத்தாவை கடைந்தெடுத்த குஜராத்
சம்பவம் செய்த சுப்மன், சுதர்சன்! கொல்கத்தாவை கடைந்தெடுத்த குஜராத்...
சுவிட்சுக்கு பதிலாக சிரிஞ்ச் மூலம் பல்பை ஆன் செய்யும் இளைஞர்!
சுவிட்சுக்கு பதிலாக சிரிஞ்ச் மூலம் பல்பை ஆன் செய்யும் இளைஞர்!...
பனிக்கட்டியா? வைரமா? வைரலாகும் ஐஸ்லாந்தின் டைமண்ட் பீச் வீடியோ!
பனிக்கட்டியா? வைரமா? வைரலாகும் ஐஸ்லாந்தின் டைமண்ட் பீச் வீடியோ!...
திருமண பரிசாக நீல நிற டிரம்... மணமக்களுக்குக் காத்திருந்த ஷாக்!
திருமண பரிசாக நீல நிற டிரம்... மணமக்களுக்குக் காத்திருந்த ஷாக்!...
சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!
சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!...
பிரச்சனையை கொண்டுவரனும் என்றே கமல் செய்வார்- கே.எஸ்.ரவிக்குமார்!
பிரச்சனையை கொண்டுவரனும் என்றே கமல் செய்வார்- கே.எஸ்.ரவிக்குமார்!...
ஒரிஜினலைப் போலவே போலி ரூ.500 நோட்டுக்கள் - எப்படி கண்டுபிடிப்பது?
ஒரிஜினலைப் போலவே போலி ரூ.500 நோட்டுக்கள் - எப்படி கண்டுபிடிப்பது?...
ஜே.டி.வான்ஸை இந்திய முறைப்படி வரவேற்ற பிரதமர் மோடி..!
ஜே.டி.வான்ஸை இந்திய முறைப்படி வரவேற்ற பிரதமர் மோடி..!...
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.32,000 வரை விலை குறைத்த ஹீரோ!
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.32,000 வரை விலை குறைத்த ஹீரோ!...
தேர்தலில் நாம் தமிழர் கட்சி பாஜகவுடன் கூட்டணியா? சீமான் விளக்கம்!
தேர்தலில் நாம் தமிழர் கட்சி பாஜகவுடன் கூட்டணியா? சீமான் விளக்கம்!...
கம்மி செலவில் அதிக பலன்கள்.. திராட்சை நீரில் பல பலன்கள்!
கம்மி செலவில் அதிக பலன்கள்.. திராட்சை நீரில் பல பலன்கள்!...