Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காஷ்மீர் தாக்குதல் இரு நாடுகளுக்கும் இடையிலான போராக மாறிவிட கூடாது.. விசிக தலைவர் திருமாவளவன் கருத்து!

Thirumavalavan Condemns Pakistan's Role in Terrorism | சாதி, மதம், இனம், மொழி என்ற வேறுபாடுகள் இல்லாமல் இந்தியர் என்ற உணர்வோடு பயங்கரவாதத்தை எதிர்த்து போராட வேண்டும் என்று கூறியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஜம்மு & காஷ்மீர் விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான போராக மாறிவிடக்கூடாது என்று கூறியுள்ளார்.

காஷ்மீர் தாக்குதல் இரு நாடுகளுக்கும் இடையிலான போராக மாறிவிட கூடாது.. விசிக தலைவர் திருமாவளவன் கருத்து!
திருமாவளவன்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 25 Apr 2025 17:07 PM

திருச்சி, ஏப்ரல் 25 : பயங்கரவாதத்திற்கு (Terrorism) பாகிஸ்தான் (Pakistan) துணை போகுமேயானால் அதை உலக அளவில் அம்லபப்படுத்த வேண்டும். அவர்களை அந்நியப்படுத்த வேண்டுமே தவிர யுத்தம் தேவையில்லாதது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK – Viduthalai Chiruthaigal Katchi) தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஜம்மு & காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காம் (Pahalgam) பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் மீது இந்திய அரசு மிக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழகம் நிகழ்ச்சியில் பங்கேற்ற திருமாவளவன்

திருச்சியில் திராவிடர் கழகம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விசிக தலைவர் திருமாவளவன் இன்று (ஏப்ரல் 25, 2025) திருச்சிக்கு சென்றிருந்தார். அப்போது விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் சாதி, மதம், இனம், மொழி என்ற வேறுபாடுகள் இல்லாமல் இந்தியர் என்ற உணர்வோடு பயங்கரவாதத்தை எதிர்த்து போராட வேண்டும். ஆனால், இந்தியாவில் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் பகை வளர்த்து ஒற்றுமை இல்லாத சூழலை சங்பரிவார் அமைப்புகள் உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு

பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடுக்ககூடாது – திருமாவளவன்

தொடர்ந்து பேசிய அவர், மும்பை தாக்குதலுக்கு பொறுப்பேற்று அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டில் பதவி விகலி முன்மாதிரியாக விளங்கினார். இந்த நிலையில் தான் அமித்ஷா பதவி விலக வேண்டும் என நாங்கள் வலியுறுத்தினோம். மீண்டும் மீண்டும் அதை வலியுறுத்துவோம் என்று கூறியுள்ளார். மேலும், காஷ்மீரில் நடந்த தாக்குதல் இரு நாட்டிற்கு இடையேயான போராக மாறிவிடக்கூடாது. பயங்கரவாத தாக்குதலுக்கு ஓரு நாடு பொறுப்பு என பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடுக்ககூடாது. நம்முடைய வலிமையை வேறு நாட்டின் மீது நிரூபித்து காட்ட கூடாது என்று கூறியுள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு பயன்படவில்லை என்றும், மாறாக அதை தீவிரப்படுத்துவதற்கு தான் பயன்பட்டுள்ளது என்பது காஷ்மீரில் தற்போது நடந்த தாக்குதல் தெளிவிப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைனில் ஆர்டர் செய்தவருக்கு பஸ் டிக்கெட்டுடன் வந்த பேண்ட் !
ஆன்லைனில் ஆர்டர் செய்தவருக்கு பஸ் டிக்கெட்டுடன் வந்த பேண்ட் !...
சுற்றுலா பயணிகளுக்கு உதவியவர்கள் இஸ்லாமியர்கள் தான் - மெஹபூபா!
சுற்றுலா பயணிகளுக்கு உதவியவர்கள் இஸ்லாமியர்கள் தான் - மெஹபூபா!...
சிக்கிம் நிலச்சரிவு - சிக்கி தவிக்கும் 1,000 சுற்றுலா பயணிகள்!
சிக்கிம் நிலச்சரிவு - சிக்கி தவிக்கும் 1,000 சுற்றுலா பயணிகள்!...
சர்க்கரை சாப்பிடுவதால் ஏற்படும் 7 முக்கிய ஆபத்துகள்!
சர்க்கரை சாப்பிடுவதால் ஏற்படும் 7 முக்கிய ஆபத்துகள்!...
ஊட்டி, கொடைக்கானல் விடுதிகள் குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஊட்டி, கொடைக்கானல் விடுதிகள் குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு!...
இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியிருக்கும் Blend - என்ன ஸ்பெஷல்?
இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியிருக்கும் Blend - என்ன ஸ்பெஷல்?...
சம்மருக்கு ஏற்ற ஸ்கின் கேர்.. காபி தூள் இருந்தாலே போதும்!
சம்மருக்கு ஏற்ற ஸ்கின் கேர்.. காபி தூள் இருந்தாலே போதும்!...
தல ஆட்டத்தை பார்க்க வந்த அஜித் - சிவகார்த்திகேயன் - வைரல் வீடியோ!
தல ஆட்டத்தை பார்க்க வந்த அஜித் - சிவகார்த்திகேயன் - வைரல் வீடியோ!...
மிரட்டல் அரசியல் பாஜகவின் டிஎன்ஏவில் தான் உள்ளது - கோவி.செழியன்!
மிரட்டல் அரசியல் பாஜகவின் டிஎன்ஏவில் தான் உள்ளது - கோவி.செழியன்!...
த்ரிஷாவின் சூப்பர் ஹிட் படம் 9 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது
த்ரிஷாவின் சூப்பர் ஹிட் படம் 9 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது...
தாக்குதலின் நோக்கம் சமூகத்தை பிளவுபடுத்தும் - ராகுல் காந்தி!
தாக்குதலின் நோக்கம் சமூகத்தை பிளவுபடுத்தும் - ராகுல் காந்தி!...