பதவியை துறந்த துரை வைகோ.. அதிர்ச்சியில் வைகோ.. மதிமுகவில் அடுத்து என்ன?
MDMK Durai Veiko : மதிமுக முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகியதை அடுத்து, வைகோவை அவர் நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பிற்கு பிறகு, துரை வைகோ கட்சி பதவியை மீண்டும் ஏற்பாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதே நேரத்தில், துரை வைகோ கேட்டபடி, மல்லை சத்யா ஓரங்கட்டப்பட்டால் இது கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

துரை வைகே - வைகோ
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (மதிமுக) முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இதுகுறித்து பேசிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைககோ, “டிவி பார்த்து தான் துரை வைகோவின் விலகலை அறிகிறேன். கட்சி பொறுப்பில் இருந்து விலகும் துரை வைகோவின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது” என்று கூறியுள்ளார். தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் தேர்தலுக்கு ஓராண்டே இருக்கும் நிலையில், அரசியல் சூழல் பரபரப்பாகி இருக்கிறது.
பதவியை துறந்த துரை வைகோ
குறிப்பாக, தமிழகத்தில் உட்கட்சி மோதல் பயங்கரமாக வெடித்துள்ளது. அண்மையில் தான், பாமகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்டு, நான் தான் இந்த கட்சியின் தலைவர் என ராமதாஸ் பரபரப்பு அறிக்கை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, தற்போது மதிமுகவில் உட்கட்சி பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
அதாவது, மதிமுக முதன்மை செலயாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்து இருக்கிறார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் இருக்கும் போது வைகோ எடுத்த முடிவை தான், தற்போது அவரது துரை வைகோ எடுத்துள்ளார்.
அதாவது, கருணாநிதிக்கு பிறகு, வைகோ தான் அதிகாரத்திற்கு வர வேண்டி இருந்தது. ஆனால், சில காரணங்களுக்கு கருணாநிதி, ஸ்டானை தேர்ந்தெடுத்தார். இதனால் அதிருப்தியில் இருந்த வைகோ, வாரசு அரசியலுக்கு எதிராக திமுகவில் இருந்து வெளியேறி மதிமுக என்ற கட்சி தொடங்கினார். இந்த நிலையில், தற்போது அதே நிலை தான் மதிமுகவில் ஏற்பட்டு இருக்கிறது. அதாவது, பொதுச் செயலாளர் வைகோவுக்கு நெருக்கமானவர் கட்சியின் மூத்த தலைவர் மல்லை சத்யா.
கடந்த 2021ஆம் ஆண்டு துரை வைகோவிற்கு கட்சியின் முதன்மை செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அப்போது முதலே வைகோவின் ஆதரவாளர்களுக்கும் துரை வைகோவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு வருகிறது. அதே நேரத்தில் வைகோவுக்கு நெருக்கமான இருக்கு மல்லை சத்யாவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
மதிமுகவில் அடுத்து என்ன?
இதனால், மல்லை சத்யா அதிருப்தி இருந்து வந்தார். இதனால், துரை வைகோ ஆதரவாளர்களுக்கும், மல்லை சத்யா ஆதரவாளர்கள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அண்மையில் கூட நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே நேரத்தில், மல்லை சத்யாவை மதிமுகவில் இருந்து நீக்க வேண்டும் எனவும் வைகோவிவடம் துரை வைகோ வலியுறுத்தி இருப்பதாக தெரிகிறது. ஆனால், இதற்கு எந்த முடிவு எடுக்காமல் வைகோ அமைதி காத்து வந்தார்.
இந்த நிலையில், இன்று திடீரென மதிமுகவின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகியதாக துரை வைகோ அறிவித்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. துரை வைகோவின் முடிவால், வைகோ பெரிதும் அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து, சென்னை அண்ணா நகரில் உள்ள வைகோ வீட்டிற்கு சென்று துரை வைகோ அவரை சந்தித்துள்ளார்.
எனவே, இந்த சந்திப்பிற்கு பிறகு, துரை வைகோ கட்சி பொறுப்பில் மீண்டும் செயல்படுவாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதே நேரத்தில் துரை வைகோ கேட்டபடி, மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்குவாரா ? மல்லை சத்யாவிற்கு ஆதரவாக பேசுவாரா என்பது கேள்வி குறியாகி உள்ளது. மல்லை சத்யா கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டால் இது கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.