AIADMK-BJP Alliance: திடீர் ட்விஸ்ட்! மீண்டும் பாஜக – அதிமுக கூட்டணி.. அமித் ஷாவுடன் ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி..!
Tamil Nadu Election 2026: தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவுக்கு எதிராக ஒரு சில கருத்துகளை தெரிவித்தபோது, இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக மக்களவைத் தேர்தலுக்கு முன்பே கூட்டணி முறிந்தது. இருப்பினும், அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் அண்ணாமலை மிகப்பெரிய தடையாகக் கருதப்படுகிறார்.

சென்னை, ஏப்ரல் 11: 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மீண்டும் பாஜக- அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) இன்று அதாவது 2025 ஏப்ரல் 11ம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்தார். அப்போது, அண்ணாமலைக்கு (Annamalai) பிறகு, தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் யார் என்பதற்கு விடை தெரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத நிலையில் அமித் ஷாவுடன் ஒரே மேடையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) மற்றும் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி அமர்ந்திருந்தனர். அதனை தொடர்ந்து, வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக – கூட்டணி தொடரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
முன்னதாக, தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவுக்கு எதிராக ஒரு சில கருத்துகளை தெரிவித்தபோது, இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக மக்களவைத் தேர்தலுக்கு முன்பே கூட்டணி முறிந்தது. இருப்பினும், அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் அண்ணாமலை மிகப்பெரிய தடையாகக் கருதப்படுகிறார். தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (கடந்த மாதம் அமித் ஷாவை சந்திக்க டெல்லி வந்ததிலிருந்து பாஜக மற்றும் அதிமுக இடையே மறு கூட்டணி குறித்த பேச்சுக்கள் தீவிரமடைந்தன. தற்போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் அண்ணாமலை மற்றும் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் வருகின்ற 2025 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாஜக மற்றும் அனைத்து கூட்டணி கட்சிகளும் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியாக போட்டியிடும் என்று அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். அடுத்த 2026ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் பெரும்பான்மையை பெறும். தமிழ்நாட்டில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைக்கப்படும்.
மீண்டும் பாஜக – அதிமுக கூட்டணி:
Tamil Nadu: Union Home Minister Amit Shah holds a press conference with BJP’s K Annamalai and AIADMK’s Edappadi Palaniswami, in Chennai. pic.twitter.com/mwMJ3lzELT
— ANI (@ANI) April 11, 2025
திமுக தாங்கள் செய்யும் தவறை திசைதிருப்ப நீட் மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பிரச்சினையை எழுப்புகிறார்கள். ஒருவகையில் அதிமுக, கடந்த 1998ம் ஆண்டு முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு பகுதியாக உள்ளது. மேலும் நீண்ட காலமாக பிரதமர் மோடியும், ஜெயலலிதாவும் தேசிய அரசியலில் ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளனர்” என்று தெரிவித்தார்.