Waqf Amendment Bill 2025: வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிராக வழக்கு.. உச்சநீதிமன்றம் சென்ற தவெக விஜய்..!
Tamilaga Vettri Kazhagam: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மத்திய அரசின் புதிய வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்தச் சட்டம் முஸ்லிம் சமூகத்தினருக்குப் பாகுபாடு காட்டுவதாகவும், அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு முன்னர், நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட போது விஜய் தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை, ஏப்ரல் 13: தமிழக வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam) தலைவரும், நடிகருமான விஜய் (Vijay), மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் திருத்த மசோதாவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், இந்த சட்டம் முஸ்லிம் சமூக மக்களுக்கு பாகுபாடு காட்டுவதாகவும், அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. முன்னதாக, வக்ஃப் திருத்த சட்டம் (Waqf Amendment Bill) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கை மூலம் தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மசோதா நிறைவேற்றம்:
கடந்த 2025 ஏப்ரல் 4ம் தேதி மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வக்ஃப் திருத்த மசோதா 2025ஐ கொண்டு வந்தது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக மாநிலங்களவை 128 உறுப்பினர்களும், எதிராக 95 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளுடன் நிறைவேறியது. தொடர்ந்து, நீண்ட விவாதத்திற்கு பிறகு, ஒட்டுமொத்தமாக 288 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 232 உறுப்பினர்கள் எதிர்த்தும் வாக்களித்ததன் மூலம் மசோதா நிறைவேற்றியது.
தொடர்ந்து, இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 2025 ஏப்ரல் 5ம் தேதி மசோதாவிற்கு ஒப்புதல் அளித்து சட்டமாக மாற்றினார்.
வக்ஃப் சட்டத்திற்கு எதிராக வழக்கு:
Actor Vijay moves Supreme Court against Waqf Act
Read @ANI Story | https://t.co/CQmSw4oBjG#Vijay #Waqfact #TVK pic.twitter.com/le1TnfnnJN
— ANI Digital (@ani_digital) April 13, 2025
வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக இதுவரை உச்ச நீதிமன்றத்தில் பல கட்சிகள் மனு தாக்கல் செய்திருந்தனர். அதன்படி, தமிழக வெற்றி கழகத்தை தவிர, தமிழ்நாட்டின் ஆளும் கட்சியாக திமுக சார்பில் கூட்டு நாடாளுமன்ற குழுவில் உறுப்பினர் எம்பி ராஜா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தொடர்ந்து, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் எம்பிக்கள் முகமது ஜாவேத் மற்றும் இம்ரான் பிரதாப்கர்ஹி, ஆசாத் சமாஜ் கட்சி தலைவரும் எம்பியுமான சந்திரசேகர் ஆசாத், ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனதுல்லா கான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்இந்திய சமூக ஜனநாயகக் கட்சி, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) எம்பி அசாதுதீன் ஓவைசி உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர்.
மேலும், பீகாரின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.க்கள் மனோஜ் ஜா மற்றும் ஃபயாஸ் அகமது, பீகாரைச் சேர்ந்த ஆர்.ஜே.டி எம்.எல்.ஏ முகமது இசார் அஸ்ஃபி உள்ளிட்ட கட்சிகளும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஆதரவு
அதேநேரத்தில், வக்ஃப் திருத்த மசோதா 2025 ஆதரவாகவும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், வக்ஃப் சட்டம் இந்திய அரசியலமைப்பின் திட்டத்திற்கு இசைவானவை என்றும், முஸ்லிம் சமூகத்தின் எந்தவொரு உறுப்பினரின் உரிமையையும் மீறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.