ஏப்ரல் 26, 27-ல் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம்!
TVK Booth Committee Meeting | தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் கோயம்புத்தூரில் இரண்டு நாட்கள் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் 23 மாவட்டங்களை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தவெக தலைவர் விஜய்
சென்னை, ஏப்ரல் 21 : கோயம்புத்தூரி 2025, ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில், பூத் கமிட்டி கூட்டம் (Booth Committee Meeting) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சி தலைமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெறும் இந்த இரண்டு நாட்களில் மொத்தம் 23 மாவட்டங்களை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், பூத் கமிட்டி கூட்டம் குறித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கோயம்புத்தூரில் இரண்டு நாடகள் நடைபெற உள்ள தவெக பூத் கமிட்டி கூட்டம்
பூத் கமிட்டி கூட்டம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், தவெகவின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் 2025 ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் கோயம்புத்தூர், குரும்பப்பாளையம் பகுதியில் உள்ள எஸ்.எஸ்.எஸ் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது என கூறப்பட்டுள்ளது. பூத் கமிட்டி கூட்டத்தின் முதல் நாளில் 10 மாவட்டங்களை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்பார்கள் என்றும் இரண்டாவது நாளில் 13 மாவட்டங்களை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
தவெக பூத் கமிட்டிம் கூட்டம் தொடர்பாக வெளியான அறிக்கை
— TVK Party HQ (@TVKPartyHQ) April 21, 2025