தொடர் விடுமுறை.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. போக்குவரத்து கழகம் அறிவிப்பு!
TNSTC Special Buses : தொடர் விடுமுறையையொட்டி, தமிழகம் முழுவதும் 2025 ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவதம் பேருந்து நிலையங்களில் இருந்து மாநிலம் முழுவதும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் 2,400 சிறப்பு பேந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஏப்ரல் 16: தொடர் விடுமுறையையொட்டி, தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் (TNSTC Special Buses) என்று போக்குவரத்து கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புனித வெள்ளி மற்றும வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக தமிழகத்தில் முழுவதும் 2025 ஏப்ரல் 17ஆம் தேதி (நாளை) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2025 ஏப்ரல் 18ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
ஏற்கனவே, 11,12,10ஆம் வகுப்புகளுக்கு கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு 2025 ஏப்ரல் 18ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. இதனால், பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள்.
இதனால் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக, பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில், தற்போது கோடை விடுமுறை, புனித வெள்ளி, வார இறுதி நாட்கள் வருகிறது.
இதனால், மக்கள் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். இதனால் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 2025 ஏப்ரல் 17ஆம் தேதியான (நாளை) முதல் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து கழகம் அறிவிப்பு
தொடர் விடுமுறை, புனித வெள்ளி, மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து இயக்கம். -அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அவர்களின் தகவல்.#ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #SETC |… pic.twitter.com/dM0nxfY6lM
— ArasuBus (@arasubus) April 15, 2025
அதன்படி, 2025 ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் 2,400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
2025 ஏப்ரல் 17ஆம் தேதி கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட இடங்களுகு 575 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 18,19ஆம் தேதிகளில் தினமும் 450 பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ஏப்ரல் 17 ஆம் தேதி திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூருக்கு 100 சிறப்பு பேருந்துகளும், 2025 ஏப்ரல் 18,19ஆம் தேதிகளில் தினமும் 90 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
மாதாவரத்தில் இருந்து 2025 ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 24 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் போன்ற முக்கிய நகரங்களிலிருந்து மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களுக்கு 300 பேருந்துகளும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஏப்ரல் 20ஆம் தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளுக்காக பல்வேறு இடங்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு 735 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பயணிகள் TNSTC செயலி அல்லது https://www.tnstc.in/OTRSOnline/ என்ற இணையதளம் மூலம் உங்கள் பயண டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.